وَ اِنَّ لَـكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً
نُسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهَا وَلَـكُمْ
فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது.அவற்றின்
வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்;இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன;அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
(23:21)
இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா கால்கடைகள்
குறித்தும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பயன்கள் குறித்தும் கூறுகிறான்.
ذكر تعالى ما جعل لخلقه في الأنعام من المنافع
، وذلك أنهم يشربون من ألبانها الخارجة من بين فرث ودم ، ويأكلون من حملانها ، ويلبسون
من أصوافها وأوبارها وأشعارها ، ويركبون ظهورها ويحملونها الأحمال الثقال إلى البلاد
النائية عنهم ، كما قال تعالى : ( وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا
بشق الأنفس إن ربكم لرءوف رحيم ) [ النحل : 7 ] ، وقال تعالى :( أولم يروا
أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون . وذللناها لهم فمنها ركوبهم
ومنها يأكلون . ولهم فيها منافع ومشارب أفلا يشكرون ) [ يس : 71 73
கால்நடைகள் என்றால் அதில் ஆடு,மாடு,ஒட்டகம்
இவைகள் அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பால் கிடைக்கிறது.அதன் மாமிசத்தை
உண்ணுகிறோம்.அதன் தோல்களின் மூலம் தயாரிக்கப்பட்டவைகளை நாம் அணிந்து
கொள்கிறோம்.அவைகள் வாகனமாக பயன்படுகிறது. மனிதர்களின் சுமைகளை சுமக்கவும்
உதவுகிறது.இப்படி எண்ணற்ற நற்பயன்கள் இருப்பதை அல்லாஹ் தன் வேதத்தில் பல்வேறு
வசனங்களின் வழியே நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.
இன்றைக்கு இறைச்சி விற்பது கூடாது.அறுப்பதற்காக
மாடு ஒட்டகம் போன்றவைகளை விற்பது கூடாது என்று கூறி இஸ்லாமிய பாரம்பரிய உணவாக
இருக்கிற இறைச்சியை தடை செய்யும் ஒரு முயற்சியில், சூழ்ச்சியில் இறங்கி மாட்டை
வைத்து அரசியல் செய்ய மத்திய பா.ஜ.க அரசாங்கம் நினைக்கிறது.இந்த தருணத்தில் மாட்டிறைச்சியைப்
பற்றியும் மாட்டு மாமிசத்தின் சத்தைப்பற்றியும் விரிவாக அலச வேண்டும்.
உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது.
அமெரிக்கா, பிரேசில், சவூதி அரேபியா , சீனா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி அதிகம் விரும்பி உண்ணப்
படுகின்றது
இந்து சமயத்தில் மட்டும் பசு கடவுளாக வணங்கப்படுவதால்,அதிலும்
உயர்சமூகப் பிரிவினர் மட்டும் மாட்டிறைச்சியை
உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் மற்ற
எல்லா சமூகப் பிரிவினர்களும் மாட்டிறைச்சியை
உண்பதுண்டு.
உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில்
மாட்டிறைச்சியை தடை செய்ய துடிக்கும் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது என்பது உண்மை.
தடை உத்தரவு வகுப்புவாத நோக்கம் கொண்டது. குறுகிய
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளையே நிறைவேற்றி
வருகிறது பி.ஜே.பி. இதன் ஒரு பகுதியாக மாட்டிறைச்சியின் பேரால் தங்கள் ஆட்சியிலுள்ள
மாநிலங்களிலும், தங்களுக்கு வலுவுள்ள
இடங்களிலும் சிறுபான்மை மக்கள் மற்றும் தலித்கள் மீது கடுமையான தாக்குதல்களைப் பசு
பாதுகாவலர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம்
தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று காரணம் கூறி முகம்மது அக்லாக் அடித்தே
கொல்லப்பட்டார்.
குஜராத் மாநிலம் உனாவில் செத்துப்போன மாட்டின் தோலை
உரித்ததற்காக 4 தலித் இளைஞர்கள்
இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பெஹ்லூக்கான் எனும் பால் வியாபாரி பால் வியாபாரத்துக்காகப்
பசுக்களை வாங்கி வரும் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால்
சமூக விரோதிகளால் அடித்தே கொல்லப்பட்டார். மேலும் அஜ்மல், ரபீக் ஆகியோர் படுகாயப்படுத்தப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத்
தற்போது நாடு முழுவதும் கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று உத்தரவிட்டும்,
தகுதியற்ற கால்நடைகளைக் கூட
விற்பனை செய்வதைத் தடை செய்தும், கால்நடை விற்பனைக்குப் பலவிதமான கடுமையான நிபந்தனைகளை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பி.ஜே.பி அரசின் இந்த உத்தரவு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக் கூடியது.
ஒருவன் எந்த உணவை உண்ண வேண்டும் என்று அரசே தீர்மானிப்பது
அநீதியானது. மேலும், இதனால் உயர்சாதி மக்களின்
உணவுப் பழக்கத்தை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையோர் மற்றும் தலித்கள் மீது அரசு இயந்திரத்தைப்
பயன்படுத்தித் திணிக்கும் தன்மை கொண்டது. இது, ஒற்றைக் கலாசாரத்தைத் திணிக்கும் சங் பரிவாரத்தின்
அஜண்டாவை மத்திய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்பந்தமாக அமலாக்கும் முயற்சியாகும்.
இறைச்சி என்பது மிகச்சிறந்த உணவு மட்டுமல்ல நம்
பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்று.சுவனத்தில் தரப்படும் உணவுமுறைகளைக் குறித்து
கூறும் இறைவன் அதில் மாமிசத்தையும் சொல்கிறான்.
في معرض ذكره لما أعده الله لعباده المتقين
قال تعالى: {و أمددناهم بفاكهة ولحم مما يشتهون} [الطور:22]. وقال تعالى: {و لحم
طير مما يشتهون} [الواقعة: 21]
{பலவகையான}பழத்தையும்
இன்னும் அவர்கள் விரும்புகின்றவற்றி லிருந்து இறைச்சி {வகை} யையும் அவர்களுக்கு நாம் ஏராளமாக தருவோம். {52 ; 22}
மிகச்சிறந்த உணவு என்று இறைச்சியை பெருமானார்
ஸல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
عن أبي موسى الأشعري (رض) قال: قال رسول
الله ص:“ فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام” والثريد الخبز واللحم.
[رواه البخاري ومسلم]
மற்ற உணவுகளை விட சரீது எப்படி சிறந்ததோ
அதுபோன்று மற்ற மனைவிமார்களை விட ஆயிஷா சிறந்தவள்.{புகாரி,முஸ்லிம்} சரீது என்றால் ரொட்டியும் இறைச்சியும் என்று
சொல்லப்படுகிறது.
இறைச்சியில் முன் சப்பையை நபி ஸல் அவர்கள்
விரும்பி உண்பார்கள்.
…وفي الصحيحين عن
أبي هريرة (رض) أن رسول الله ص رفعت إليه الذراع وكانت تعجبه ” .. ” ..وعن
أبي هريرة (رض) قال: أُتي النبي ص بلحم فدفع إليه الذراع وكانت تعجبه فنهش
منها، [رواه الترمذي وقال حديث حسن صحيح
நபி ஸல் அவர்களிடம் ஒரு முறை கறி கொண்டு
வரப்பட்டது.அதில் முன் சப்பையை அவர்கள் முன் வைக்கப்பட்டது.அதனை விரும்பி கடித்து
சாப்பிட்டார்கள். {திர்மிதி}
இப்படி மிகச்சிறந்த நம் பாரம்பரிய உணவாக
இருக்கிற இறைச்சியை தடை செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது ஏற்பட்டிருக்கிற இந்த மாமிசப் பிரச்சனை
நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும்.இந்நேரம் நாம் விழிப்படைய வேண்டிய
தருணமாகும்.
இதுமாதிரியான சோதனைகளை நாம் சந்திக்க காரணம்
என்ன என்பதை நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாம் புரிந்து கொண்டிருக்கும் பாவங்களும்
மார்க்கத்தின் காரியங்களில், அல்லாஹ் ரசூல் வகுத்துத் தந்த கடமைகளில் நமக்கிருக்கும்
பலகீனமும் தான் இதற்குக் காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
وَمَا
أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
“உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது
உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். எனினும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு
விடுகின்றான்”. ( அல்குர்ஆன்: 42:
30 )
قال النبي صلى الله عليه وسلم
إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ وَأَخَذْتُمْ
أَذْنَابَ الْبَقَرِ وَرَضِيتُمْ بِالزَّرْعِ وَتَرَكْتُمْ الْجِهَادَ سَلَّطَ اللَّهُ
عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ] رواه أبو داود
وأحمد
”உங்கள் வியாபாரம் மிகவும் தந்திரமான ( ஈனா ) அடிப்படையில்
அமைந்திருக்கும் போது, மாடுகளின் காதுகளைப்
பிடித்துக் கொண்டு விவசாயங்களை நீங்கள் திருப்தி பட்டுக் கொள்ளும் போது ( உலக மோகத்தை
மாநபி {ஸல்} அவர்கள் இப்படியான உவமானத்தைக் கொண்டு குறிப்பிடுகின்றார்கள்.
) அறப்போராட்டங்களை நீங்கள் கைவிடும் போது அல்லாஹ் உங்கள் மீது இழிவையும், கேவலத்தையும் சாட்டுவான்.மீண்டும் நீங்கள் அல்லாஹ்வின்
மார்க்கத்தின் பால் திரும்புகின்ற வரை அந்த இழிவு நீடித்து இருக்கும். நீங்கள் திரும்பி
விட்டால் அல்லாஹ் உங்களை விட்டும் அதை நீக்கி விடுவான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத்
மேற்கூறிய நபிமொழியில் இரண்டு அம்சங்கள் பொதிந்து
இருக்கின்றன. முதலாவது அம்சம் “முஸ்லிம்களுக்கு இழிவும் கேவலமும் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த எச்சரிக்கை.
இரண்டாவது அம்சம் “முஸ்லிம்கள் சில பாவங்களால் தொடர்ச்சியாக சில காலங்கள்
தண்டிக்கப்படுவார்கள் என்றும், அப்படியான காலங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்பட்டு வாழும் போது
அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைக்கும் என்றும் உணர்த்துகின்றார்கள்.
جاء رسول عمر بن الخطاب من إحدى الغزوات
فبشره بالنصر
فسأله عمر بن الخطاب : متى بدأ القتال ؟
فقالوا : قبل الضحى
قال : ومتى كان النصر ؟
فقالوا : قبل المغرب
فبكى سيدنا عمر حتى ابتلت لحيته..
فقالوا : يا أمير المؤمنين نبشرك بالنصر
فتبكى ؟
فقال رضي الله عنه : والله إن الباطل لا
يصمد أمام الحق طوال هذا الوقت إلا بذنب أذنبتموه أنتم أو أذنبته أنا
...
ஷாம் தேசத்திற்கு உமர் (ரலி) அவர்கள் அனுப்பியிருந்த
படைப்பிரிவுகளின் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் அமீருல் முஃமினீன்
உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்திருந்தார்.
வந்தவர், ”அமீருல் முஃமினீன் அவர்களே! நமது இஸ்லாமியப் படை
வெற்றி பெற்றுவிட்டது. அல்லாஹ் நமது படைப்பிரிவுக்கு வெற்றியை நல்கினான்” என்று கூறினார்.
அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் “எப்போது நமது படை வீரர்கள் எதிரணியினரின் படை வீரர்களோடு
போரிட ஆரம்பித்தனர்?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், ”ளுஹா உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக” என்று பதில் கூறினார்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள் “எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்தது?”
என்று கேட்டார்கள்.
அதற்கவர், “மஃக்ரிப் உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக”
என்று பதில் கூறினார்.
இந்த பதிலைக் கேட்டதும் தான் தாமதம் உமர் (ரலி)
அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அழுகையின் உச்சபட்சமாக தாடி முழுவதும் நனைந்து
தேம்பித் தேம்பி அழுதார்கள்.
சபையில் இருந்தவர்கள், உமர் (ரலி) அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றார்கள்.
எனினும், உமர் (ரலி) அவர்கள்
அழுகையை நிறுத்தவில்லை.
அப்போது, சபையில் இருந்தவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! அவர் இப்போது என்ன சொல்லி
விட்டார் என்று நீங்கள் அழுகின்றீர்கள்? அவர் நல்ல செய்தியைத் தானே சொல்லியிருக்கின்றார்?
நமது படை வெற்றி பெற்றது மகிழ்ச்சியான
செய்தி தானே?” என்று கேட்டனர்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அசத்தியத்திற்கெதிரான
அறப்போரட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு நேரம் வரை தாமதம் ஆகாது, அப்படியானால், நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்?
அல்லது மக்களாகிய நீங்கள்
ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்?” இல்லையென்றால், இவ்வுளவு நேரம் வெற்றி தாமதப்பட்டிருக்காது”.
என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அல் மத்ஃகல் லிஇமாமி இப்னுல் ஹாஜ் (ரஹ்)…,
ஸிராஜுல் முலூக் லி இமாமி
அத் தர்தூஸீ (ரஹ்)… )
பாவமான காரியங்களை நடக்கிற போது அதை தடுக்க
வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் வலியுறுத்தினார்கள்.நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த
சோதனைக்கு அந்த தீமைகளை நாம் தடுக்காததும் ஒரு காரணம்....
قال النبي صلى الله عليه وسلم
إن الناس إذا رأوا المنكر فلم يغيروه أوشك أن يعمهم
الله بعقابه
أخرجه الإمام أحمد رحمه الله بإسناد صحيح عن الصديق
رضي الله عنه
அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மக்கள் செய்யும் பாவமான செயல்களை தடுக்கவில்லையானால்
அல்லாஹ் தண்டனையை எல்லோருக்கும் பொதுவாக்கி விடுவான்” என நபி {ஸல்} அவர்கள்கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
حدثنا هاشم بن القاسم ، حدثنا زهير - يعني
ابن معاوية - حدثنا إسماعيل بن أبي خالد ، حدثنا قيس قال : قام أبو بكر ، - رضي الله
عنه - ، فحمد الله وأثنى عليه ، وقال : أيها الناس ، إنكم تقرؤون هذه الآية : ( يا
أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ) إلى آخر الآية ، وإنكم
تضعونها على غير موضعها ،لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليستعملن الله سبحانه
وتعالى عليكم شراركم فليسومنكم سوء العذاب ، ثم ليدعون الله عز وجل خياركم فلا يستجاب لكم
وإني سمعت رسول الله - صلى الله عليه وسلم - قال
: " إن الناس إذا رأوا المنكر ولا يغيرونه أوشك الله ، عز وجل ، أن يعمهم بعقابه
அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தும்
போது “மக்களே! நீங்கள் “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள்
கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத்
தீங்கையும் செய்திடாது” எனும் ( அல்குர்ஆன்:
5: 105 ) இந்த வசனத்தை ஓதுகின்றீர்கள்.
ஆனால், அதற்கு தவறான பொருளை
அறிவிக்கின்றீர்கள்.
மக்கள் தீய செயல்கள் நடப்பதைக் கண்ணால் கண்ட பின்பும்
அதைத் தடுக்க முயற்சிப்பதில்லை. அநியாயக்காரன், அநீதி இழைப்பதைக் கண்டும் அவன் கரத்தைப் பிடித்து
அதைத் தடுப்பதில்லை என்றால் இத்தகைய நிலையில் அல்லாஹ் வேதனை தரும் தண்டனையை நல்லவர்,
கெட்டவர் அனைவரின் மீதும்
விரைவில் இறக்கி விடுவான்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நற்செயல்கள் புரியுமாறு
ஏவி, தீய செயல்களைத் தடுத்து
நிறுத்துவது உங்கள் மீது கடமையாகும். இவ்வாறு
நீங்கள் செய்யவில்லையெனில், அல்லாஹ் உங்களில்
மிகவும் கீழ்த்தரமான, கேடுகெட்ட நபர்களை
உங்களுக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவிடுவான்.
அவர்கள் உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுப்பார்கள்.
துன்பங்களைத் தருவார்கள். பின்னர், உங்களில் நல்லவர்கள் அக்கேடு கெட்டவர்களின் தீங்கிலிருந்து பாதுகாத்திடுமாறு இறைவனிடம்
பிரார்த்திப்பார்கள். ஆனால், அந்த பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என கூறினார்கள்.(
நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ
)
من لزم الاستغفار جعل الله
له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب
யார் பாவமன்னிப்பை அவசியமாக்கிக் கொள்கிறாரோ
அவருக்கு எல்லா நெருக்கடிகளிலிருந்தும் விடுதலையையும் எல்லா கவலைகளிலிருந்து
நிவாரணத்தையும் அல்லாஹ் தருவான்.இன்னும் அவன் அறியாத புறத்திலிருந்து ரிஸ்கையும்
தருகிறான்.{அபூதாவூது}
எனவே நாம் புரிந்து கொண்டிருக்கும் பாவங்களை
குறைத்துக் கொண்டு நாம் செய்த பாவங்களிலிருந்து தவ்பா செய்தால் அல்லாஹ் நமக்கு
ஏற்படும் இதுபோன்ற சோதனைகளை நீக்கி நமக்கு எல்லா வகையிலும்
வெற்றியைத் தருவான்.