Sunday, June 11, 2017

தராவீஹ் 17 ம் நாள்



இன்று ரமலான் 17 ம் நாள்.கண்ணியம் நிறைந்த பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்.இஸ்லாமிய வரலாற்றின் முதல் வெற்றிப் போரான பத்ரு நிகழ்ந்த நாள்.


சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு மிடையில் நடை பெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியவர்கள் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியவர்களைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தார்கள்.

பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமலான் மாதம், பதினேழாம் நாள் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய அணியை ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாக எதிர் கொண்டனர்.

போர்க்காரணம்

سمع رسول الله صلى الله عليه وسلم بقافلة قريش قد أقبلت من الشام إلى مكة ، وقد كان يقودها أبا سفيان بن حرب مع رجال لا يزيدون عن الأربعين . وقد أراد الرسول عليه الصلاة والسلام الهجوم على القافلة والاستيلاء عليها ردا لما فعله المشركون عندما هاجر المسلمون إلى المدينة ، وقال لأصحابه : " هذه عير قريش فيها أموالهم فاخرجوا إليها " .
كان ذلك في الثالث من شهر رمضان في السنة الثانية للهجرة ، وقد بلغ عدد المسلمين ثلاثمائة وثلاثة عشر رجلا ، ومعهم فرسان وسبعون بعيرا . وترك الرسول عليه الصلاة والسلام عبد الله بن أم مكتوم واليا على المدينة . لما علم أبو سفيان بأمر النبي صلى الله عليه وسلم وأصحابه أرسل ضمضم بن عمرو الغفاري إلى أهل مكة يطلب نجدتهم . ولم وصل ضمضم إلى أهل قريش صرخ فيهم قائلا : " يا معشر قريش ، أموالكم مع أبي سفيان عرض لها محمدا وأصحابه لا أرى أن تدركوها " . فثار المشركون ثورة عنيفة ، وتجهزوا بتسعمائة وخمسين رجلا معهم مائة فرس ، وسبعمائة بعير .
جاءت الأخبار إلى رسول الله صلى الله عليه وسلم أن قافلة أبي سفيان قد غيرت اتجاه طريقها ، وأنه سيصلها غدا أو بعد غد . فأرسل أبو سفيان لأهل مكة بأن الله قد نجى قافلته ، وأنه لا حاجة للمساعدة . ولكن أبا جهل ثار بغضب وقال : " والله لا نرجع حتى نرد بدرا "
جمع رسول الله صلى الله عليه وسلم أصحابه وقال لهم : إن الله أنزل الآية الكريمة التالية : (( و إذ يعدكم الله إحدى الطائفتين أنهما لكم و تودون أنّ غير ذات الشوكة تكون لكم و يريد الله أن يحق الحق بكلماته و يقطع دابر الكافرين ))
குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யான் மக்காவாசிகளான முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்தார்.ஹிஜ்ரத்தின் போது ஸஹாபாக்களிடம் மக்கா வாசிகள் நடந்து கொண்டதற்கு பழிவாங்கும் முகமாக அபூசுப்யானின் அந்த வியாபார கூட்டத்தை முற்றுகையிட பெருமானார் ஸல் அவர்கள் விரும்பினார்கள். தங்களை நபியவர்களும் அவர்களின் தோழர்களும் முற்றுகையிட வருகிறார்கள் என்பதையறிந்த அபூசுப்யான் மக்காவிற்கு தூதனுப்பி பாதுகாப்பு கேட்டிருந்தார். அதற்கிடையில் அவர்கள் மக்காவிற்கு மதீனாவின் வழியாக செல்லும் வழமையான வழியை விட்டு வழியை மாற்றி செங்கடல் வழியாக சென்று மக்காவை சென்றடைந்தனர்.

வர்த்தகக் குழுவிற்கு பாதுகாப்பு தேவை என்ற செய்தி குறைஷி காபிர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைய ஆயிரம் பேர் கொண்ட படையை திரட்டி வர்த்தக பாதுகாப்புக் குழு என்ற பெயரில் புறப்பட்டார்கள். எவ்வித இடையூறுமின்றி வழியை மாற்றி மக்கா சென்றடைந்த அபூசுப்யான் மக்காவிற்கு திரும்பி விடுங்கள்என்று செய்தியனுப்பினார். அபூஜஹல் அதை நிராகரித்து பத்ரில் படையை இறக்கினான்.

மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.

குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்பாதுகாப்புக்காக 313 ஸஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி புறப்பட்டார்கள்.

வியாபாரக் கூட்டத்தை பிடிப்பதற்காக சென்ற சமயம் யதார்த்தமாக அது போராக மாறியது.

எனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ
உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் {பத்ர்} யுத்தத்தின் போது உம்முடன் வருவதை) வெறுக்கக் கூடியவர்களாக இருந்தனர். {8 ; 5}

நபி ஸல் அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் ரலி அபூபக்கர் ரலி போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே விரும்பினார்கள்.

" أشيروا علي أيها الناس ( يريد الأنصار ) . " فقام سعد بن معاذ وقال :
" يا رسول الله ، آمنا بك وصدقناك وأعطيناك عهودنا فامض لما أمرك الله ، فوالذي بعثك بالحق لو استعرضت بنا هذا البحر فخضته لخضناه معك ما تخلف منا رجل واحد" فقال الرسول صلى الله عليه وسلم : " أبشروا ، والله لكأني أنظر إلى مصارع القوم " .
இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாதா (ர) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன்.நிச்சயமாக நாங்கள் உங்களை ஈமான் கொண்டிருக்கிறோம்.உங்களை உண்மைப்படுத்தி யிருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம். உங்களுக்கு அல்லாஹ் ஏவியதை நீங்கள் செயல்படுத்துங்கள். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)

فقام المقداد بن الأسود وقال : " امض يا رسول الله لما أمرك ربك ، فوالله لا نقول لك كما قالت بنو إسرائيل لموسى : (( قالوا يا موسى إنا لن ندخلها أبداً ما داموا ليها فاذهب أنت و ربك فقاتلا إنا هاهنا قاعدون ))
ولكن نقول لك : اذهب أنت وربك فقاتلا إنا معكما مقاتلون . فأبشر الرسول عليه الصلاة والسلام خيرا  :
அதேபோல் மிக்தாத் ரலி  அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம்.மாறாக நீங்களும் உங்கள் இறைவனும் செல்லுங்கள். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும், பின்னாலும் நின்று நாங்கள் போர் புரிவோம் என்று கூறியபோது, நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி)

அதன் பிறகு போருக்கு தயாராகி சென்றார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாளாயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.

எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.

இப்போரில் அல்லாஹ் வெற்றியை முஸ்லிம்களுக்கு கொடுத்தான். முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். அவர்களின் திருநாமங்கள்:

1. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு
2. ரபீஃஉ இப்னு முஅல்லா ரலியல்லாஹு அன்ஹு
3. ஸஃது இப்னு கய்சமா ரலியல்லாஹு அன்ஹு
4. யஜீது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
5. உபைதா இப்னு ஹாரிது ரலியல்லாஹு அன்ஹு
6. ஆகில் இப்னு புகைரு ரலியல்லாஹு அன்ஹு
7. உமைர் இப்னு ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு
8. முஅவ்விது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
9. திஷ்ஷிமாலைன் இப்னு அம்து அம்ரு ரலியல்லாஹு அன்ஹு
10. மிஹ்ஜா இப்னு சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு
11. உமைர் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
12. ஹாரிஸா இப்னு சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு
13. சஃப்வான் இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு
14. அவ்ஃப் இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு.

பத்ரு தரும் படிப்பினைகள்

1, அன்றைய பத்ரு களத்தில் ஸஹாபாக்கள் உள்ளத்தில் சத்தியம் அசத்தியம் என்ற உணர்வு தான் இருந்தது.சொந்த பந்தங்களை அவர்கள் நினைத்துப் பார்க்க வில்லை.
 صدق الصحابة في موالاتهم للمؤمنين، ومعاداتهم للكافرين، وقد ظهر ذلك في غزوة بدر، عندما قتل عمر بن الخطاب خاله العاص بن هشام بن المغيرة، ولم يلتفت إلى قرابته منه، وهَمّ أبو بكر بقتل ابنه عبد الرحمن، وقتل حمزة وعلي وعبيدة بن الحارث أبناء عمهم عتبة وشيبة والوليد بن عتبة، وذلك في المبارزة، قال تعالى: ﴿ لا تَجِدُ قَوْماً يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمْ الإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللّـهِ أَلا إِنَّ حِزْبَ اللَّهِ هُمْ الْمُفْلِحُونَ ﴾ [المجادلة: 22].

உமர் ரலி அவர்கள் தன் மாமா ஆஸ் பின் ஹிஷாமைக் கொன்றார்கள்.அபூபக்கர் ரலி அவர்கள் தன் மகன் அப்துர்ரஹ்மானை கொலை செய்ய நினைத்தார்கள்.ஹம்ஸா,அலி, உபைதா ரலி ஆகியோர் தங்கள் சிறிய தந்தை மகன்களான உத்பா,ஷைபா, வலீது பின் உத்பாவை கொன்றார்கள்.
أن الدعاء من أعظم أسباب النصر على الأعداء، قال تعالى: ﴿ إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنْ الْمَلائِكَةِ مُرْدِفِينَ ﴾ [الأنفال: 9].
وكان النبي -صلى الله عليه وسلم- يدعو ربه ويستغيث به كلما نزل به كرب أو شدة، كما حدث في غزوة بدر.

2, எதிரிகளோடு போராடும் போராட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைப்பதற்கு மாபெரும் உதவியாக இருந்தது பெருமானாரின் துஆ.
روى مسلم في صحيحه من حديث عمر بن الخطاب قال: لما كان يوم بدر نظر رسول الله - صلى الله عليه وسلم - إلى المشركين، وهم ألف، وأصحابه ثلاثمائة وتسعة عشر رجلاً، فاستقبل نبي الله - صلى الله عليه وسلم - القبلة، ثم مد يديه فجعل يهتف بربه: "اللهم أنجز لي ما وعدتني، اللهم آت ما وعدتني، اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تعبد في الأرض" فما زال يهتف بربه ماداً يديه، مستقبل القبلة، حتى سقط رداؤه عن منكبيه، فأتاه أبو بكر، فأخذ رداءه فألقاه على منكبيه، ثم التزمه من ورائه، وقال يا نبي الله! كفاك مناشدتك ربك، فإنه سينجز لك ما وعدك[2].. الحديث.
யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.

இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)

: أن الإيمان والعمل الصالح من أعظم أسباب النصر؛ ولذلك وعد الله المؤمنين الصالحين بالنصر في غير آية من كتاب الله، قال تعالى: ﴿ إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الأَشْهَادُ ﴾ [غافر: 51].

3, உறுதியான ஈமானும் நல்லமல்களும் வெற்றிக்கான காரணம். இதனை அல்லாஹ் {40 ; 51} ல் குறிப்பிடுகிறான்

: أن التوكل على الله من أعظم أسباب النصر، قال تعالى: ﴿ إِنْ يَنْصُرْكُمْ اللَّهُ فَلا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ ﴾ [آل عمران: 160].
وهذا ما حصل في غزوة بدر، فإن الصحابة على قلة عددهم وعُددهم مقابل عدوهم إلا أنهم توكلوا على الله، وقاتلوا فنصرهم الله، قال تعالى: ﴿ وَلَقَدْ نَصَرَكُمْ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴾ [آل عمران: 123].

4, வெற்றி கிடைக்க அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை வேண்டும்.

உலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத் தொடர்பினூடாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ர் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர்.
உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலில் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை, தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.

ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த ஸஹாபாக்களுக்கு வெற்றி கிடைத்தது.

: أن لزوم طاعة الأمير أو القائد، وعدم الاختلاف عليه من أعظم أسباب النصر، وهذا ما حدث في غزوة بدر، فإن محمداً -صلى الله عليه وسلم- هو الرسول، وهو القائد، وكانوا يطيعونه فيما يأمرهم به كما تقدم.

5, அல்லாஹ் ரசூலுக்கு முழுமையாக கட்டுப்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம்.ஸஹாபாக்கள் இந்த போர்க்களத்தில் நபி ஸல் அவர்களின் அனைத்து உத்தரவுகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டார்கள்.அதனால் வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.

 أن العداوة والإحن التي كانت بين الأنصار من الأوس والخزرج قد زالت بوصول النبي -صلى الله عليه وسلم- المدينة، فصاروا – رضي الله عنهم - يداً واحدة ضد المشركين واليهود، قال تعالى: ﴿ وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعاً مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴾ [الأنفال: 63].

6, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது
நபியின் மதீனா வருகைக்கு முன்பு அவ்ஸ் கஸ்ரஜ் போன்ற பல்வேறு பிரிவினராக இருந்தவர்கள் ஒன்றிணைந்து ஒரே கரமாக இணைந்து செயல்பட்டார்கள்.அதனால் வெற்றியை ருசித்தார்கள்.
 إن الإخلاص والصدق من أسباب النصر على الأعداء، قال تعالى: ﴿وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ﴾ [الحج: 40].
قال تعالى: ﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ﴾ [التوبة: 119].
وفي الصحيحن من حديث أبي موسى الأشعري- رضي الله عنه - أن النبي -صلى الله عليه وسلم- سئل عن الرجل يقاتل للمغنم، والرجل يقاتل للذكر، والرجل يقاتل ليرى مكانه، فمن في سبيل الله؟ فقال رسول الله -صلى الله عليه وسلم-: " من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله"[2].
وهذا ما حدث في غزوة بدر، فإن المؤمنين لما صدقوا مع الله، وأخلصوا له كان النصر حليفهم.

7, அனைத்து காரியங்களிலும் இக்லாஸ் இருக்க வேண்டும். உண்மையான ஆர்வமும் இருக்க வேண்டும்.

ஸஹாபாக்களிடம் அவைகள் இருந்தது.அதனால் வெற்றியை தனதாக்கினார்கள்.
عن أنس قال : قال رسول الله - صلى الله عليه وآله وسلم - يوم بدر : " قوموا إلى جنة عرضها السماوات والأرض " قال عمير بن الحمام الأنصاري : يا رسول الله ، عرضها السماوات والأرض ، بخ بخ ، لا والله يا رسول الله لا بد أن أكون من أهلها . قال : " فإنك من أهلها " ، فأخرج تميرات فجعل يأكل ، ثم قال : لئن حييت حتى آكل تمراتي إنها لحياة طويلة قال : فرمى بما كان معه من التمر ، ثم قاتلهم حتى قتل . 

பத்ரு யுத்தத்தின் போது நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தமது தோழர்களை நோக்கி, ‘எழுந்திருப்பீராக! வானத்தையும், பூமியையும் விட விசாலமானதும் தக்வா கொண்டவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டதுமான சுவர்க்கத்தின்பால் விரைவீராக!என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஹழ்ரத் உமைர் இப்னு ஹம்மாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆஹா, ஆஹாஎன்றனர். அண்ணலார் அவர்கள் உமைரை நோக்கி, எதற்காக ஆஹா ஆஹா என்று கூறினீர் என்றார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அத்தகையவர்களில் நானும் ஒருவனாக இருக்க விருப்பப்படுகின்றேன்என்று பதில் கூறினார். உடனே அண்ணலார் அவர்கள் நீரும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்என்றார்கள்.

ஹஜ்ரத் உமைர் ரலியல்லாஹு அன்ஹு ஒரு பையிலிருந்து சில பேரீத்தங்கனிகளைப் பசியின் கொடுமையைத் தணிக்கத் தின்றார்கள். ஓரிரண்டு கனிகளைத் தின்றதும் அவர்கள் கையிலிருக்கும் கனிகளைத் தின்று தீர்க்கும் வரை காத்திருப்பதென்பது இவ்வுலகில் நீண்ட காலம் ஜீவித்திருப்பதைப் போலிருக்கிறது. எனக்கு அதுவரை என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்என்று கூறியவாறு கையிலிருந்த கனிகளை தூர எறிந்து விட்டு கரத்திலே வாளேந்தி பத்ரு போரிலே உடலை விட்டு உயிர் பிரியும் வரை போராடி ஷஹீதாய் விட்டார்கள்.

8, மய்யித் இறந்து விட்டாலும் அவர்களால் கேட்க முடியும்.மேலே நடப்பவற்றை உணர முடியும் என்பது இந்த பத்ரின் மூலம் நிரூபணமானது.
: في وقوف رسول الله -صلى الله عليه وسلم- على فم القليب ينادي قتلى المشركين، ويكلمهم بعدما ماتوا، وفيما قاله لعمر- رضي الله عنه - إذ ذاك دليل واضح على أن للميت حياة روحية خاصة به، فقد ثبت بالكتاب والسنة عذاب القبر ونعيمه، وأن الميت إذا وضع في قبره، وتولى عنه أصحابه، أنه يسمع قرع نعالهم، غير أن ذلك كله إنما يخضع لموازين لا تنضبط بعقولنا، وإدراكنا الدنيوية هذه، إذ هو ما يسمى بعالم الغيب البعيد عن مشاهداتنا، وتجاربنا العقلية والمادية، فطريق الإيمان بها إنما هو التسليم لها بعد أن وصلتنا بطريق ثابت صحيح
روى البخاري ومسلم في صحيحيهما من حديث أنس بن مالك - رضي الله عنه - عن أبي طلحة أن النبي -صلى الله عليه وسلم- أمر يوم بدر بأربعة وعشرين رجلاً من صناديد قريش، فقذفوا في طوي[2] من أطواء بدر خبيث مخبث، وكان إذا ظهر على قوم، أقام بالعرصة ثلاث ليال، فلما كان ببدر اليوم الثالث أمر براحلته فشدت عليها رحلها، ثم مشى، واتبعه أصحابه، وقالوا: ما نرى ينطلق إلا لبعض حاجته، حتى قام على شفة الركي[3] فجعل يناديهم بأسمائهم وأسماء آبائهم: "يا فلان بن فلان ويا فلان بن فلان، ويا فلان بن فلان، أيسركم أنكم أطعتم الله ورسوله؟ فإنا قد وجدنا ما وعدنا ربنا حقاً فهل وجدتم ما وعد ربكم حقاً؟" قال: فقال عمر: يا رسول الله ما تكلم من أجساد لا أرواح لها؟ فقال رسول الله -صلى الله عليه وسلم-: "والذي نفس محمد بيده ما أنتم بأسمع لما أقول منهم". قال قتادة: أحياهم الله حتى أسمعهم قوله توبيخاً وتصغيراً، ونقيمة، وحسرة وندماً[4].
وفي رواية للنسائي من حديث أنس بن مالك قال: سمع المسلمون من الليل ببئر بدر، ورسول الله -صلى الله عليه وسلم- قائم ينادي: "يا أبا جهل بن هشام، ويا شيبة بن ربيعة...." الحديث
குறைஷிக் காபிர்களில் 70 பேர் மடிந்தார்கள். இந்த சடலங்களை பத்ரு என்ற கிணற்றில் போட்டு மறைக்கும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கிணற்றுக்கு சென்று செத்த மய்யித்துகளிடம் பேசினார்கள்.

அபூஜஹலே, உமையாவே, உத்பாவே எங்களுக்கு எங்கள் நாயன் சொன்ன வாக்குறுதியை உண்மையாகவே பெற்றுக் கொண்டோம். உங்களின் கடவுள்களின் வாக்குறுதியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? நீங்கள் எங்களுக்கு செய்த பலவித இன்னல்கள் துன்பங்கள் இவைகளுக்குரிய தண்டனையை இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுதாவது என்னைப் பற்;றியும் நான் சொன்ன ஆண்டவனைப் பற்றியும் விளங்கிக் கொண்டீர்களா? என்று கேட்ட போது,

அவர்கள் அருகில் நின்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகமே! மரணித்து விட்டவர்கள் எப்படி உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள்? என்று வினவ அதற்கு நாயகம் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல முடியும். அவர்களுக்கு பதிலுரைக்க முடியாது. இதுதான் உங்களிருவருக்கும் உள்ள வித்தியாசம் என்று சொன்னார்கள்.

9, உண்மையான ஈமானும் நம்பிக்கையும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.அங்கே பத்ரு களத்தில் அல்லாஹ் மலக்குமார்கள், சிறு தூக்கம்,மழை,எதிர்களுக்கு அச்சம் போன்ற விஷயங்களைக் கொண்டு உதவி செய்தான்.

: أن الله تعالى قد يعين المؤمنين في قتال أعدائهم ببعض الكرامات، إذا صدقوا معه، كما حدث في غزوة بدر من نزول الملائكة، وحدوث النعاس، وإنزال المطر، وقذف الرعب في قلوب عدوهم، وغيرها من المعجزات والكرامات

10, இறை மறுப்பும் பாவங்களும் அல்லாஹ்வின் நிஃமத்துகள் நீங்குவதற்கும் தண்டனைகள் இறங்குவதற்கும் காரணமாக அமைந்து விடும்.நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் நிஃமத்.ஆனால் அதை அவர்கள் நிராகரித்தார்கள்.அதனால் பத்ரில் அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுத்தான்.

: أن الكفر والمعاصي سبب لزوال النعم، وحصول النقم، فإن قريشاً لما كفروا نعمة الله بإرسال هذا النبي الكريم إليهم فكذبوه وعادوه، عاقبهم الله في غزوة بدر بالقتل والأسر، قال تعالى: ﴿ أَلَمْ تَرَى إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْراً وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ ﴾ [إبراهيم:
روى البخاري في صحيحه من حديث ابن عباس- رضي الله عنه - قال: ﴿ الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْراً ﴾، قال: هم والله كفار قريش، قال عمرو: هم قريش، ومحمد -صلى الله عليه وسلم- نعمة الله، ﴿ وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ ﴾ قال النار، يوم بدر"[4].


11, நபி ஸல் அவர்களது மறைவானதை அறியும் ஆற்றல் இந்த பத்ரில் வெளிப்பட்டது.
قال أنس قال رسول اللهِ صلى الله عليه وسلم هذا مصرعفلان غدا ووضع يده على الأرض وهذا مصرع فلان غدا ووضع يده على الأرض وهذا مصرع فلان غدا ووضع يده على الأرض فقال والذي نفسي بيده ما جاوز أحد منهم عن موضع يد رسول اللهِ صلى الله عليه وسلم فأمر بهم رسول اللهِ صلى الله عليه وسلم فأخذ بأرجلهم فسحبوا فألقوا في قليب بدر
ஹழரத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு யுத்தம் நிகழ்வதற்கு முன் அந்தப் போரில் இறந்து போகக் கூடிய சிலரின் பெயர்களையும் அவர்கள் பத்ரு களத்தில் இன்ஷாஅல்லாஹ் இன்னின்ன இடங்களில் இறப்பார்கள் என்பதையும் தங்களின் கையிலுள்ள அசாவினால் கோடு போட்டுக் காட்டினார்கள்.
இதை ஹழரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முதல் நாள் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளில் யார் யார் எவ்விடங்களில் கொல்லப்படுவார்கள் என்பதைக் கோடு போட்டுக் காண்பித்தார்களோ அவரவர்கள் அவ்வவ்விடங்களில் கொல்லப்பட்டார்கள். இதை என் கண்ணால் பார்த்தேன் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு துரும்பளவாவது கூட கொல்லப்பட்ட இடங்கள் மாறவில்லை. இதுவும் பத்ரு யுத்தத்தில் நடந்த மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாகும். முஸ்லிம்.

12, பெருமையும் மமதையும் கொண்டு திரிபவர்கள் மிக அர்ப்பமாக கொல்லப்படுவார்கள்.அபூஜஹ்ல் சாதாரண சிறுவர்களால் கொல்லப் பட்டான்.
في يوم بدر وبينما عبد الرحمن بن عوف واقف في الصف إذا هو بغلامين من الأنصار حديثة أسنانهما يقول عبد الرحمن : تمنيت أن أكون بين أضلع منهما .
فغمزني أحدهما فقال : يا عم ! أتعرف أبا جهل ؟ قلت : نعم ، وما حاجتك ؟ قال : أخبرت أنه يسب رسول الله صلى الله عليه وسلم ، والذي نفسي بيده إن رأيته لا يفارق سوادي سواده حتى يموت الأعجل منا.
فتعجبت لذلك ، فغمزني الآخر فقال مثلها ، فلم أنشب أن نظرت إلى أبي جهل وهو يجول في الناس فقلت : ألا تريان ؟ هذا صاحبكما، قال : فابتدراه بسيفيهما حتى قتلاه ، ثم انصرفا إلى النبي فأخبراه . فقال : أيكما قتله ؟ فقال كل منهما : أنا قتلته . 
فقال : هل مسحتما سيفيكما ؟ قالا : لا. فنظر في السيفين فقال : كلاكما قتله. وقضى بسلبه لمعاذ بن عمرو بن الجموح . وكان الآخر هو معاذ بن عفراء.
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ர­லி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.

அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.

சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி0 சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி­) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ர­லி) அவர்களும் ஆவர். புகாரீ 3141


No comments:

Post a Comment