أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ
صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
வானங்கள் மற்றும்
பூமியிலுள்ளவைகளும் இறக்கைகளை விரித்த நிலையில் {பறக்கின்ற} பறவைகளும் நிச்சயமாக அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன என்பதை
{நபியே!} நீங்கள் பார்க்க வில்லையா ? ஒவ்வொன்றும் அதன் தொழுகையையும் தஸ்பீஹையும்
அறிந்திருக் கின்றன.அல்லாஹ் அவர்கள் செய்கின்றவன்றை நன்கு அறிந்தவன். {24 ;41}
உலகத்தில் மனிதர்கள்
மட்டுமல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துக்களும் அனைத்து படைப்புக்களும்
படைத்தோனாம் அல்லாஹ்வை வணங்குகிறது, தொழுகிறது.அவனுக்குக் கட்டுப்பட்டுத் தான் தன்
காரியங்களை அமைத்துக் கொள்கிறது என்பது இந்த வசனம் சொல்லும் செய்தி.
இதே கருத்தை பதிவு செய்யும் வசனங்கள் திருமறைக்
குர்ஆனில் நிறைய உண்டு.
( أولم يروا
إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون
) [ النحل : 48
அல்லாஹ் படைத்த எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு
சுஜுது செய்வதற் காக{த்தான்} வலப்பக்கமும் இடப்பக்கமும் அந்தப் பொருளின்
நிழல்கள் சாய்கின்றன என்பதை நீங்கள் பார்க்க வில்லையா? {16 ; 48}
( وإن
من شيء إلا يسبح بحمده ) [ الإسراء : 44 ]
அவனது புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்யாமல் உலகில்
எந்தப் பொருளும் இல்லை {17 ; 44}
எனவே அனைத்துப் படைப்புக்களும் அவைகளுக்குரிய
வடிவத்தில் அவைகளுக்கு கற்றுக் கொடுத்த வழிமுறையில் அல்லாஹ்வை வணங்கிக்
கொண்டிருக்கின்றன.அவைகள் புரியும் வணக்கமும் அவைகளின் தஸ்பீஹும் நமக்குத்தான்
புரிய வில்லை என்பதை {17 ; 44} வசனத்தில் தொடரில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த வசனங்களின் கருத்துக்களை பல்வேறு
நபிமொழிகளும் உறுதிப் படுத்துகிறது.
أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ
قالَ يومًا أتدرونَ أينَتذهبُ هذهِ الشَّمسُ ؟ قالوا اللَّهُ ورسولُهُ
أعلمُ قالَ إنَّ هذهِالشَّمسَ تجري حتَّى تنتَهيَ تحتَ العرشِ فتخرُّ ساجدةً
فلا تزالُ كذلِكَ حتَّى يقالَ لَها ارتفِعي ارجِعي من حيثُ جئتِ فتُصبحُ طالعةً من
مطلعِها ثمَّ تجري حتَّى تنتَهيَ إلى مستقرِّها ذاك تحتَ العرشِ فتخرُّ ساجدةً ولا
تزالُ كذلِكَ حتَّى يقالَ لَها ارتفِعي ارجِعي من حيثُ جئتِ فترجعُ فتصبحُ طالعةً من
مطلعِها ثمَّ تجري لا يستنكرُ النَّاسَ منها شيئًا حتَّى تنتَهيَ إلى مستقرِّها ذاكَ
تحتَ العرشِ فيقالُ لَها ارتفِعي أصبِحي طالعةً من مغربِكِ فتصبحُ طالعةً من مغربِها
فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أتدرونَ متى ذاكُم ؟ ذاكَ حينَ لَا
يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا
خَيْرًا [ 6 / الأنعام / آية 158 ]
சூரியன் மறையும் நேரத்தில் இந்த சூரியன் எங்கே
செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது
அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.அப்போது நபி
ஸல் அவர்கள், அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழே சுஜுது செய்வதற்காக செல்கிறது.அப்படியே
சுஜூதிலேயே இருக்கிறது. அதன் பிறகு அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்க்கும். பின்பு
நீ திரும்பு என்று சொல்லப்பட்ட பிறகு தான் அது உதயமாகும்.இப்படியே ஒவ்வொரு நாளும்
நடைபெறுகிறது என்றார்கள். {முஸ்லிம் ;159}
وأما الجبال والشجر فسجودهما بفيء ظلالهما
عن اليمين والشمائل : وعن ابن عباس قال : جاء رجل فقال : يا رسول الله ، إني رأيتني
الليلة وأنا نائم ، كأني أصلي خلف شجرة ، فسجدت فسجدت الشجرة لسجودي ، فسمعتها وهي
تقول : اللهم اكتب لي بها عندك أجرا ، وضع عني بها وزرا ، واجعلها لي عندك ذخرا ، وتقبلها
مني كما تقبلتها من عبدك داود . قال ابن عباس : فقرأ النبي صلى الله عليه وسلم سجدة
ثم سجد ، فسمعته وهو يقول مثل ما أخبره الرجل عن قول الشجرة .
رواه الترمذي ، وابن ماجه ، وابن حبان في
صحيحه
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து
யாரசூலல்லாஹ் நான் ஒரு கனவு கண்டேன்.அதில் ஒரு மரத்தின் பின்னால் நான்
தொழுதேன்.நான் ஸஜ்தா செய்தேன்.நான் ஸஜ்தா செய்வதைப் பார்த்து அந்த மரமும் ஸஜ்தா
செய்தது.அப்போது அந்த மரம் சொன்னது, இறைவா நான் செய்த ஸஜ்தாவிற்கு பகரமாக உன்னிடம்
எனக்கு கூலியை பதிவு செய்.என்னிலிருந்து ஒரு குற்றத்தை அழித்து விடு.உனது அடியார்
தாவூது நபியிடமிருந்து நீ ஏற்றுக் கொண்டதைப் போன்று என்னிடமிருந்தும் நீ ஏற்றுக்
கொள் என்று அந்த மரம் சொன்னதாக அந்த மனிதர் கூறினார். நபி ஸல் அவர்கள் ஒரு
ஸஜ்தாவின் வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தார்கள்.அப்போது அந்த மரம் எந்த வார்த்தை சொன்னதோ
அதே வார்த்தையை நபி ஸல் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன் என இப்னு அப்பாஸ் ரலி
அவர்கள் கூறுகிறார்கள். {இப்னு ஹிப்பான் ; 1758}
وقوله ( وإن من شيء إلا يسبح بحمده
) أي وما من شيء من المخلوقات إلا يسبح بحمد الله ( ولكن لا تفقهون تسبيحهم
) أي لا تفقهون تسبيحهم أيها الناس لأنها بخلاف لغتكم وهذا عام في الحيوانات والنبات
والجماد وهذا أشهر القولين كما ثبت في صحيح البخاري عن ابن مسعود أنه قال كنا نسمع
تسبيح الطعام وهو يؤكل .
كنا نَعُدُّ
الآياتِ برَكَةً، وأنتم تعُدُّونها تخويفًا، كنا معَ رسولِ اللهِ صلَّى اللهُ
عليه وسلَّم في سفرٍ، فقلَّ الماءُ، فقال : ( اطلُبوا فَضلةً من ماءٍ ) . فجاؤوا بإناءٍ
فيه ماءٌ قليلٌ، فأدخَل يدَه في الإناءِ ثم قال : ( حيَّ على الطَّهورِ المبارَكِ،
والبرَكَةِ من اللهِ ) . فلقد رأيتُ الماءَ ينبُعُ من بين أصابعِ رسولِ اللهِ صلَّى
اللهُ عليه وسلَّم، ولقد كنا نسمَعُ تسبيحَالطعامِ وهو يؤكَلُ .
الراوي: عبدالله
بن مسعود المحدث: البخاري - المصدر: صحيح البخاري - الصفحة
أو الرقم: 3579
அப்துல்லாஹ் பின் மஸ்வூத்
ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நாங்கள் ஒரு
சமயம் நபி ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்.அப்போது எங்களுக்கு பயன் படுத்த
தண்ணீர் இல்லை.தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தேடுங்கள் என்று
கூறினார்கள்.தண்ணீர் தேடிச்சென்ற தோழர்கள் ஒரு சின்ன பாத்திரத்தில் கொஞ்சம்
தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். அதில் நபி ஸல் அவர்கள் தங்கள் கரத்தை
நுழைத்தார்கள்.பின்பு பரக்கத்தின் பக்கம் வாருங்கள் என்று கூறினார்கள்.அப்போது
அவர்களது கரங்களிலிருந்து தண்ணீர் பொங்கி வந்ததை நாங்கள் பார்த்தோம். அந்நேரத்தில்
நாங்கள் சாப்பிட்ட உண்வு தஸ்பீஹ் செய்ததையும் கேட்டோம் என்று சொல்கிறார்கள். {புகாரி}
وفي
حديث أبي ذر أن النبي صلى الله عليه وسلم أخذ في يده حصيات فسمع لهن تسبيح كحنين النحل
وكذا يد أبي بكر وعمر وعثمان رضي الله عنهم [ أجمعين ، وهو حديث مشهور في المسانيد .
وقال الإمام أحمد حدثنا ابن لهيعة حدثنا
زبان عن سهل بن معاذ بن أنس عن أبيه رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم
أنه مر على قوم وهم وقوف على دواب لهم ورواحل فقال لهم اركبوها سالمة ودعوها سالمة
ولا تتخذوها كراسي لأحاديثكم في الطرق والأسواق فرب مركوبة خير من راكبها وأكثر ذكرا
لله منه .
நபி ஸல் அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து
சென்றார்கள்.அவர்கள் தங்கள் வாகனங்களின் மீது அமர்ந்திருந்தார்கள்.அப்போது நபி ஸல்
அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.அழகிய முறையில் அதை
விட்டு விடுங்கள்.பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக
ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை
திக்ர் செய்கின்றன என்றார்கள். {அஹ்மது}
وفي سنن النسائي عن عبد الله بن عمرو قال
نهى رسول الله صلى الله عليه وسلم عن قتل الضفدع وقال نقيقها تسبيح “
தவளையை கொல்வதை நபி ஸல் அவர்கள் தடை
செய்தார்கள்.அதன் சப்தம் தஸ்பீஹாகும் என்றார்கள். {நஸயீ}
بحديث ابن عباس رضي الله عنهما أن رسول
الله صلى الله عليه وسلم مر بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير ؛ أما أحدهما
فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها نصفين
ثم غرز في كل قبر واحدة ثم قال لعله يخفف عنهما ما لم ييبسا أخرجاه في الصحيحين .
قال بعض من تكلم على هذا الحديث من العلماء
إنما قال ما لم ييبسا لأنهما يسبحان ما دام فيهما خضرة فإذا يبسا انقطع تسبيحهما والله
أعلم
நபி ஸல் அவர்கள் இரு கப்ரை கடந்து
செல்வார்கள்.இந்த இரு கப்ரில் உள்ளவர்களும் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று கூறி
இரு ஈரமான மரக்கிளைகளை உடைத்து அதை இரண்டாக உடைத்து ஒவ்வொன் றையும் ஒவ்வொரு
கப்ரிலும் நட்டி வைத்தார்கள்.இவைகள் காயும் வரை அவர்களின் வேதனை குறைக்கப்படும்
என்றார்கள். {புகாரி}
நபி ஸல் அவர்கள் அவ்வாறு சொன்ன காரணம், அவைகள்
ஈரமாக இருக்கும் வரை தஸ்பீஹ் செய்கின்றன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
سمعتُ
رسولَ اللهِ صلى الله عليه وسلم يقولُ: قرصت نملةٌ نبيًّا من الأنبياءِ ، فأمر بقريةِ
النملِ فأُحْرِقت، فأوحى اللهُ إليه: أن قرصتك نملةٌ أحْرَقتَ أُمةً من الأُممِ تُسَبِّحُ.
الراوي: أبو
هريرة المحدث: البخاري - المصدر: صحيح البخاري - الصفحة
أو الرقم: 3019
நபிமார்களில் ஒரு நபியை
எறும்பொன்று கடித்து விட்டது.அந்த எறும்புப் புற்றை தீயிட்டுக் கொளுத்தும் படி
அந்த அந்த நபி உத்தரவிட்டார்கள். அதன் படி கொளுத்தப்பட்டது.அப்போது அல்லாஹ் அந்த
நபிக்கு ஒரு எறும்பு கடித்ததினால் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யும் ஒரு கூட்டத்தை அழித்து
விட்டீர்களே என்று வஹியின் மூலம் கூறினான். {புகாரி ; 3019}
எனவே அல்லாஹ்வின்
படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வை துதிக்கின்றன, அல்லாஹ்வைத் தொழுகின்றன.ஆனால் படைப்புக்களில்
உயர்ந்த படைப்பான மனித சமூகம் தான் அதை விளங்குவதும் இல்லை. அவைகளைப்போன்று
தொழுகையில் கவனம் செலுத்துவதும் இல்லை.
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ
مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ
وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ
ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ
۩ (18)
{நபியே} நிச்சயமாக
வானத்திலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
மலைகளும் மரமும் பிராணிகளும் மனிதர்களில் பெரும்பாலோரும் அல்லாஹ்விற்கு சுஜுது
செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வில்லையா?.............. {22 ; 18}
இந்த வசனத்தில் எல்லாம்
தன்னை வணங்குகிறது ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் அந்த வணக்கத்தில்
பலகீனமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் பதிவு செய்கிறான்.அதனால் எல்லா
வஸ்துக்களும் என்று பொதுவாக கூறி விட்டு மனிதர்களில் அதிகமானோர் என்று கூறுகிறான்.
அல்லாஹ்வை தொழுவதில்
தஸ்பீஹ் செய்வதில் கவனம் செலுத்துவோம்.அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
சுப்ஹானல்லாஹ் வைர வரிகள்
ReplyDeleteஜஸாகல்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்... மிகவும் பிரயோஜனமாக அமைந்துள்ளது..பாரகல்லாஹ்..
ReplyDeleteMasha Allah
ReplyDelete