Saturday, June 3, 2017

தராவீஹ் 11 ம் நாள்


اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தை தாராளமாகவும் அளவோடும் வழங்குகின்றான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர்.இவ்வுலக வாழ்க்கையோ மறுமையை ஒப்பிடுகையில் மிக அற்பமேயன்றி வேறில்லை. {13 ; 26}

بين أنه تعالى الذي يبسط الرزق ويقدر في الدنيا ، لأنها دار امتحان ; فبسط الرزق على الكافر لا يدل على كرامته ، والتقتير على بعض المؤمنين لا يدل على إهانتهم
அல்லாஹ் தான் நாடியோருக்கு தாராளமாகவும் நாடியோருக்கு சுருக்கியும் கொடுப்பது அது அவனது ஞானத்தில் கட்டுப்பட்டது. அதிகமாக கொடுத்ததினால் அவர் கண்ணியமானவர் என்றோ குறைவாக கொடுக்கப்பட்டவர் தாழ்ந்தவர் என்றோ நாம் முடிவு செய்ய முடியாது.

وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا } يَقُول ـ تَعَالَى ذِكْره ـ : وَفَرِحَ هَؤُلَاءِ الَّذِينَ بُسِطَ لَهُمْ فِي الدُّنْيَا مِنْ الرِّزْق عَلَى كُفْرهمْ بِاَللَّهِ وَمَعْصِيَتهمْ إِيَّاهُ بِمَا بُسِطَ لَهُمْ فِيهَا , وَجَهِلُوا مَا عِنْد اللَّه لِأَهْلِ طَاعَته وَالْإِيمَان بِهِ فِي الْآخِرَة مِنْ الْكَرَامَة وَالنَّعِيم . ثُمَّ أَخْبَرَ جَلَّ ثَنَاؤُهُ عَنْ قَدْر ذَلِكَ فِي الدُّنْيَا فِيمَا لِأَهْلِ الْإِيمَان بِهِ عِنْده فِي الْآخِرَة وَأَعْلَمَ عِبَاده قِلَّته , فَقَالَ : { وَمَا الْحَيَاة الدُّنْيَا فِي الْآخِرَة إِلَّا مَتَاع } يَقُول : وَمَا جَمِيع مَا أُعْطِيَ هَؤُلَاءِ فِي الدُّنْيَا مِنْ السَّعَة وَبُسِطَ لَهُمْ فِيهَا مِنْ الرِّزْق وَرَغَد الْعَيْش فِيمَا عِنْد اللَّه لِأَهْلِ طَاعَته فِي الْآخِرَة إِلَّا مَتَاع قَلِيل وَشَيْء حَقِير ذَاهِب 
அதிகமாக கொடுக்கப்பட்ட நிராகரிப்பாளர்கள் உண்மையில் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் கண்ணியமானவர்கள் என்றெண்ணி சந்தோஷ மடைகின்றனர்.ஆனால் ஈமான் கொண்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் கண்ணியத்தை அவர்கள் அறிய வில்லை. அதனால் ஈமான் கொண்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பாக்கியங்களை கவனித்து இந்த உலக இன்பங்கள் வசதிகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்த்துவதற்காக அல்லாஹ் இந்த வசனத்தில் உலக வாழ்க்கையின் அர்ப்பத்தை எடுத்துச் சொல்கிறான்.மறுமையின் பாக்கியங்களை கவனித்து இந்த உலகில் வசதியானவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வளங்கள் அனைத்தும் மிக மிக அர்ப்பமானவை இந்த வசனத்தின் வழியே சுட்டிக் காட்டுகிறான்.  

قال الامام الشوكانى " لما ذكر سبحانه عاقبه المشركين بقوله اولئك لهم اللعنه ولهم سواء الدار كان لقائل ان يقول قد نرى كثيرا منهم قد وفر الله له فى الرزق وبسط له فيه فاجاب سبحانه عن ذلك الله يبسط الرزق لمن يشاء ويقدر فقد يبسط الرزق لمن كان كافرا ويقتره على من كن مومنا ابتلاء وامتحانا ولا يدل البسط على الكرامه ولا القبض على الاهانه " اى الله تعالى وحده هو الذى يبسط الرزق لمن يشاء من خلقه وهو وحده ايضا الذى يضيقه على من يشاء منهم لحكم هو يعملها ولا تعلق لذلك بالكفر او الايمان فقد يوسع على الكافر استدارجا له وقد يضيق على المومن امتحانا له او زياده فى اجره والضمير فى قوله وفرحوا بالحياه الدنيا يعود الى مشركى مكه والى كل من كان على شاكلتهم فى الكفر والطغيان
இதற்கு முந்தைய வசனத்தில் இறை நிராகரிப்பாளர்களுக்கு இறைவனின் சாபம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் இறைவனின் சாபத்திற்கு ஆளான அவர்கள் தானே உலகில் நல்ல செழிப்பாகவும் வளமாகவும் வாழ்கிறார்கள் ? என்ற கேள்விக்கு பதிலாகத்தான் இந்த வசனம் அமைந்திருக்கிறது.அதாவது அதிகம் வளங்களும் வசதிகளும் வழங்கப்படுவது பாக்கியத்திற்கான அடையாளமும் அல்ல.அதிக நெருக்கடிகள் வழங்கப்படுவது அபாக்கியத்திற்கான அடையாளமும் அல்ல என்பதை இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ
இந்த வசனத்தில் கடமை தவறி நடப்பவர்களுக்கு நாம் எல்லா பொருட்களின் வாசல்களையும் திறந்து விடுவோம்.அகனைக் கொண்டு சந்தோஷம் படும் நேரத்தில் தடீரென்று அவர்களை பிடித்து விடுவோம்  என்று கூறுகிறான்.

எனவே அதிகம் வழங்கப்படுதல் என்பது ஈடேற்றத்திற்கான அடையாளமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் வாழ்வாதாரத்தை தான் நாடுகிறவர்களுக்கு தாராளமாகவும் அளவாகவும் வழங்குவதைக் குறிப்பிடுகின்றான்.
வாழ்வாதாரத்தை பெறுபவர்கள் மூன்று வகையினர்.
1. தாராளமாக வழங்கப்படுபவர்.
2. அளவோடு வழங்கப்படுபவர்.
3. தன் வாழ்வாதாரத்தை மிகவும் சிரமப்பட்டு தேடுபவர்.
இம்மூவரும் தமது நிலை அறிந்து செயல்படவேண்டும். இல்லையெனில் தீமையே விளையும்.
அதிகமாக வாழ்வாதாரம் கொடுக்கப்பட்டவர் ஆகுமான வழிகளில் செலவழிக்க வேண்டும்.இயலாதவர்களுக்கு கொடுத்துதவ வேண்டும். அளவோடு கொடுக்கப்பட்டவர் தேவைக்கு எஞ்சியதை கொடுக்க வேண்டும். தமது வாழ்வாதாரத்திற்கே சிரமப்படுபவர் கிடைப்பதை வைத்து போதுமாக்கிக் கொள்வதோடு மட்டுமின்றி பொறுமையுடன் இருக்க வேண்டும்.
அதிகமாக கொடுக்கப்பட்டவர் பதுக்கி வைப்பதாலும், அளவோடு கொடுக்கப்பட்டவர் மேலும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான வழிகளில் செல்வதாலும், வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுபவர் பொறுமையின்றி இறைவனை பழிப்பதாலும் மறுமை சார்ந்த சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.
இவ்வுலக வாழ்க்கையின் மீது அதீத பற்று வைப்பதால் இது போன்ற துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. அல்லாஹ் தான் நாடுவோருக்கு வழங்குகின்றான் என்ற சிந்தைனை வந்து விட்டாலே அவர் மறுவுலக வாழ்க்கைக்கு தயாராகி விடுகின்றார்.

عن سالم بن عبد الله قال: لما ولي عمر بن الخطاب رضوان الله عليه، فعد رزق أبي بكر رضوان الله عليه، الذي كانوا فرضوا له، و كان بذلك يسد حاجته فاجتمع نفر من المهاجرين، فيهم عثمان و علي و طلحة و الزبير رضوان الله عليهم.
فقال الزبير: لو قلنا لعمر في زيادة نزيدها إياه في رزقه
فقال علي: وددنا أنه فعل ذلك، فانطلقوا بنا.
فقال عثمان: إنه عمر، فهلموا فلنسبر ما عنده من وراء، نأتي أم المؤمنين حفصة فنكلمها و نستكتمها أسماءنا.
فدخلوا عليها و سألوها أن تخبر بالخبر عن نفر و لا تسمي أحداً إلا أن يقبل. و خرجوا من عندها.
فلقيت عمر رضوان الله عليه في ذلك، فعرفت الغضب في وجهه، فقال: من هؤلاء!؟
قالت لا سبيل إلى علمهم، حتى أعلم ما رأيك!؟.
فقال: لو علمت من هم لسودت وجوههم، أنتي بيني و بينهم، أناشدك الله ما أفضل ما اقتنى رسول الله صلى الله عليه و سلم في بيتك من الملبس؟.
قالت: ثوبين ممشقين، كان يلبسهما للوفد و يخطب  فيهما للجُمَع.
قال: فأي طعام ناله عندكِ أرفع؟
قالت: خبزنا خبزة شعير، فصببنا عليها و هي حارة أسفل عكة لنا، فجعلناها هشة دسماً حلوةً، فأكل منها و تطعم منها استطابة لها.
قال: فأي مبسط عندكِ كان أوطأ؟
قالت: كساء لنا ثخين، كنا نربعه في الصيف، فنجعله ثخيناً، فإذا كان الشتاء ابتسطنا نصفه و تدثرنا نصفه.
قال: يا حفصة! فأبلغيهم عني، أن رسول الله صلى الله عليه و سلم، قدَّر فوضع الفضول مواضعها، و تبلغ بالتزجية ( الكفاف ) و أنما مثلي و مثل صاحبيَّ كثلاثة نفر سلكوا طريقاً، فمضى الأول و قد تزود زاداً فبلغ، ثم تبعه الآخر فسلك طريقه فأفضى إليه، ثم اتبعهما الثالث، فإن لزم طريقهما و رضي بزادهما لحق بهما و كان معهما، و إن سلك غير طريقهما لم يجامعهما أبداً.

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியாக உமர் இப்னு கத்தாப் ரலி அவர்கள் பொறுப்பேற்கிறார்கள். சமூகப் பணிகளையும் மார்க்கப் பணிகளையும் மக்கள் பணிகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் தமது குடும்ப பணிகளுக்கு உழைக்க முடியாத சூழல். இந்நிலையில் நபித்தோழர்களின் ஒரு குழுவினர் ஆலோசனை செய்து பொது நிதி பைத்துல்மால் மக்கள் வரிப்பணத்திலிருந்து உமர் ரலி அவர்களின் குடும்பத்திற்கு தேவையான நடுத்தரமான அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு உமர் ரலி அவர்கள் ஊதியமாக பெற்று தமது குடும்பத்திற்கு செலவழித்து வந்தார்கள்.
சில மாதங்கள் கழிந்ததும் உமர் ரலி அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவு என்பதை உணர்ந்த மூத்த நபித்தோழர்கள் அலி, உஸ்மான், ஜுபைர், தல்ஹா ரலி ஆகியோர் மீண்டும் ஆலோசனை நடத்தி இன்னும் சற்று அதிகமாக நிதி கொடுக்கலாம் என்று பேசி முடிவெடுத்தனர். ஆனால் இதை உமர் ரலி அவர்களிடம் கூற தயங்கி, இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் மனைவியரில் ஒருவரான அன்னை ஹப்ஸா ரலி அவர்களிடம் முறையிட்டனர். இது பற்றி தாம் உமர் ரலி அவர்களிடம் பேசுவதாக அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
பிறகு உமர் ரலி அவர்கள் அன்னை ஹப்ஸா ரலி அவர்களை சந்தித்த பொழுது நபித்தோழர்களின் ஆலோசனையை ஹப்ஸா ரலி அவர்கள் முன் வைத்தார்கள். உமர் ரலி அதை கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ஹப்ஸா ரலி அவர்களிடம் கேள்வி கேட்டார்கள். இறைதூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் ஆடை எவ்வாறு இருந்தது ?
அவர்கள் இரு ஆடைகள் வைத்திருந்தார்கள். ஒன்றை ஜும்ஆ தொழுகைக்கும் வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதற்கும், மற்றொன்றை இதர நேரங்களில் உடுத்துவார்கள்.
நபி ஸல் அவர்களின் விரிப்பு எவ்வாறு இருந்தது..?
அவர்களின் விரிப்பு ஒரே விரிப்பு தான். கோடைகாலங்களில் அதை நான்காக மடித்து உபயோகப்படுத்துவார்கள். குளிர்காலங்களில் இரண்டாக மடித்து ஒருபகுதியை விரிக்கவும் மறு பகுதியை போர்த்தவும் பயன்படுத்துவார்கள்.
நபியவர்களின் உணவு எவ்வாறு இருந்தது...?
நபியவர்களின் உணவு சாதாரண கோதுமை ரொட்டியாகவே இருந்தது. அன்னை ஆயிஷா ரலி அவர்களின் கூற்றுப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து அடுப்பு எரியாது என்று பதிலளித்தார்கள்.
அன்னை ஹப்ஸா ரலி அவர்களின் பதிலை கேட்டுக் கொண்ட உமர் ரலி அவர்கள் ஹப்ஸாவே என் மீது நல்லெண்ணம் கொண்ட அந்த நபித்தோழர்களிடம் இவ்வாறு கூறிவிடுங்கள்.
தமக்குரிய கட்டு சாதத்துடன் ஒருவர் புதிய பாதை ஒன்றை உருவாக்கி தன் இறைவனை அடைந்து கொண்டார்கள். அவர்கள் தான் முஹம்மது நபி ஸல் அவர்கள். மற்றொருவர் நபியவர்களின் பாதையிலேயே நடந்து இறைவனையும் நபியையும் அடைந்து கொண்டார்கள். அவர்கள்தான் அபுபக்கர் ஸித்திக் ரலி அவர்கள். நானும் அவ்வழியிலேயே செல்ல ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள்.
இத்தகவல் நான்கு நபித்தோழர்களுக்கும் எட்டியது. அவர்கள் இறைவனை புகழ்ந்து விட்டு உமர் ரலி அவர்கள் இறைவிசுவாசத்தில் எங்கள் யாவரையும் முந்திவிட்டார்கள். என்றார்கள்.
ஆக மறுவுலக வாழ்வை நினைத்து அதில் கிடைக்கும் வெகுமதிகளை ஆதரவு வைத்து இவ்வுலக வாழ்வை பெரிதாக எண்ணாமல் நாம் நமது நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உலகத்தில் அனைத்து வஸ்துக்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பை இறைவன் எடுத்துக் கொண்டான்.நாம் எங்கிருந்தாலும் நமக்கு அல்லாஹ் விதித்திருக்கிற ரிஸ்க் வந்தே தீரும்.எனவே அதைப்பற்றி கவலைப் படாமல் நம் கவனத்தை மறுமையின் பக்கம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

روي أن النبي سليمان بن داود عليهما السلام جلس يوماً عند ساحل البحر فرأى نملة في فمها حبة حنطة تذهب إلى البحر فلما بلغت إليه خرجت من الماء سلحفاة و فتحت فاها فدخلت فيه النملة و دخلت السلحفاة الماء و غاصت فيه
فتعجب سليمان من ذلك و غرق في بحر من التفكر حتى خرجت السلحفاة من البحر بعد مدة و فتحت فاها و خرجت النملة من فيها و لم تكن الحنطة معها.
فطلبها سليمان و سألها عن ذلك فقالت: يا نبي الله إن في قعر هذا البحر حجراً مجوفاً و فيه دودة عمياء خلقها الله تعالى فيه و أمرني بإيصال رزقها... و أمر السلحفاة بأن تأخذني و تحملني في فيها إلى أن تبلغني إلى ثقب الحجر فإذا بلغته تفتح فاها فأخرج منه و أدخل الحجر حتى أوصل إليها رزقها ثم أرجع فأدخل في فيها فتوصلني الى البر
فقال سليمان: هل سمعت منها تسبيحاً ؟
قالت: نعم تقول يا من لا ينساني في جوف هذه الصخرة تحت هذه اللجة لا تنسى عبادك المؤمنين برحمتك يا أرحم الراحمين
ஒரு முறை ஹள்ரத் சுலைமான் அலை அவர்கள் ஒரு கடல் ஓரமாக அமர்ந்திருந்தார்கள்.அப்போது ஒரு எறும்பைப் பார்த்தார்கள். அதன் வாயில் கோதுமை தானியம் ஒன்று இருந்தது.அது கடல் நீரை நோக்கி சென்றது.அப்போது நீரிலிருந்து ஒரு ஆமை வந்தது.அந்த ஆமை தன் வாயை திறந்தது.இந்த எறும்பு அந்த ஆமையின் வாயுக்குள் நுழைந்தது. அதன் பிறகு அந்த ஆமை நீருக்குள் போய் விட்டது.இதை ஆச்சரியத்தோடு சுலைமான் அலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிறிது நேரம் கழித்து அந்த ஆமை வெளியே வந்தது.தன் வாயிலிருந்து எறும்பை இறக்கி விட்டது.அப்போது அந்த எறும்பின் வாயில் அந்த கோதுமை தானியம் இல்லை. இதைக் கண்ணுற்ற சுலைமான் அந்த எறும்பை அழைத்து விளக்கம் கேட்டார்கள்.
அப்போது அந்த எறும்பு சொன்னது ; அந்த கடலுக்குள் ஒரு பாறை இருக்கிறது.அந்த பாறைக்குள் கண் தெரியாத ஒரு புழு இருக்கிறது. அதற்கு உணவைக் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பை என்னிடம் அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.என்னை கடலுக்குள் கொண்டும் செல்லும் பொறுப்பை அந்த ஆமைக்கு கொடுத்திருக்கிறான்.

அப்போது சுலைமான் அலை அவர்கள் இந்த அளவு அல்லாஹ்வால் உணவு வழங்கப்படுகிற அந்த புழு அல்லாஹ்வை புகழுகிறதா என்று கேட்டார்கள்.அதற்கு அந்த எறும்பு சொன்னது ; கடலில் இந்த பாறைக்குள் இருக்கிற என்னையும் மறவாமல் உணவளிப்பவனே உன் அடியார்களான் முஃமின்களை நீ மறந்து விடாதே என்று சொன்னது.

No comments:

Post a Comment