قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا
وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ
بَصِيرٌ
அல்லாஹ்விடம் முறையிட்ட நிலையில் தன் கணவர்
விஷயமாக உங்களிடம் தர்க்கம் செய்த பெண்மனியின் சொல்லை அல்லாஹ் திட்டமாக கேட்டு
விட்டான்.உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் செவிமடுத்து விட்டான்.நிச்சயமாக
அல்லாஹ் கேட்பவனாக வும் பார்ப்பவனாகவும் இருக்கிறான். {58 ; 1}
لك هي خولة بنت ثعلبة رضي الله
عنها، التي قالت عنها أم المؤمنين عائشة رضي الله عنها: الحمد لله الذي وسع
سمعه الأصوات، لقد جاءت المجادلة إلى رسول الله صلى الله عليه وسلم وأنا في ناحية البيت،
تشكو زوجها، فأنزل الله سبحانه في القرآن الكريم سورة كاملة بحقها، سماها سورة المجادلة،
افتتحها سبحانه بقوله: {قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله
يسمع تحاوركما إن الله سميع بصير} (المجادلة:1).
وتذكر كتب التفاسير بخصوص سبب نزول هذه
الآية الكريمة، أن خولة بنت ثعلبة زوجة أوس بن الصامترضي الله عنهما،
كان بينها وبين زوجها ما يكون بين الرجل وزوجته من خلاف. وقد كان زوجها رجلاً سريع
الغضب، فلما كان بينهما ما كان، حلف أن لا يقربها، وقال لها: أنت علي كأمي. وكانت هذه
العادة من عادات الجاهلية التي حرمها الإسلام، لكن بقيت رواسبها عند البعض.
ثم إن أوسًا بعد ما كان منه ما
كان، أراد أن يقرب زوجته فامتنعت منه، ورفضت أن تستجيب له، حتى يأتي رسول الله صلى
الله عليه وسلم ويخبره بما كان، لكن أوسًاتحرج منعه الحياء أن يذكر لرسول الله
ما جرى منه؛ فذهبت خولة بنفسها إلى رسول الله صلى الله عليه وسلم، وأخبرته
بالذي حدث، فقال لها رسول الله صلى الله عليه وسلم: (ما أراك إلا قد حرمت عليه) !!
فأخبرت رسول الله صلى الله عليه وسلم أن زوجها لم يرد بقوله ذلك طلاقًا ولا فراقًا،
فأجابها رسول الله ثانية: (ما أراك إلا قد حرمت عليه)، فلما سمعت جواب رسول الله التجأت
إلى الله قائلة: اللهم إليك أشكو حالي وفقري.
ثم أخذت تحاور رسول الله لتقنعه أنها تحب
زوجها، ولا تريد فراقه، وأنه يبادلها نفس المشاعر، فما كان من رسول الله إلا أن أجابها
ثالثة: (ما أراك إلا قد حرمت عليه)؛ ومع هذا، فإنها لم تيأس من رحمة الله، ومن ثم أخذت
من جديد تحاور رسول الله صلى الله عليه وسلم، عن طريق التركيز على الجانب العاطفي والإنساني،
لعلها تقنعه بإيجاد مخرج للمأزق الذي هي فيه، فتقول له: فإني وحيدة، ليس لي أهل سواه...إن
لي صبية صغارًا، إن ضممتهم إليه ضاعوا، وإن ضممتهم إلي جاعوا، فلا يجد لها رسول الله
جوابًا إلا أن يقول لها: (لا أراك إلا قد حرمت)، فلما لم تجد لها جوابًا عند رسول الله،
التجأت إلى الله قائلة: اللهم أنزل على لسان نبيك ما يقضي لي في أمري، فلم تكد تنتهي
من دعائها، حتى أنزل الله على نبيه قوله سبحانه: {قد سمع الله قول التي تجادلك في زوجها
وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير}.
ثم إن رسول الله صلى الله عليه وسلم بعد
أن أنزل الله عليه قرآنًا، بين فيه حكم هذه الواقعة، دعا زوجها أوسًا ، وسأله
أن يحرر عبدًا كفارة عن فعله، فأخبر أوس رسول صلى الله عليه وسلم أنه لا
طاقة له بذلك، فسأله رسول الله إن كان يستطيع أن يصوم شهرين، فأجابه أنه لا يستطيع؛
لأنه رجل قد تقدم به العمر، والصيام يضعفه، حينئذ طلب منه رسول صلى الله عليه وسلم
أن يتصدق على ستين مسكينًا، فأخبره أنه لا يملك من المال ما يتصدق به، فلما رأى عليه
الصلاة والسلام من حاله ما رأى، تصدق عنه، وطلب منه أن يعود إلى زوجته.
கவ்லா பின்த் ஸஃலபா என்ற பெண்மனிக்கும் அவரது
கணவர் அவஸ் பின் ஸாமித் ரலி அவர்களுக்கும் ஒரு சமயம் சின்ன சண்டை ஏற்பட்டு
கோபத்தில் அவர் தன் மனைவியைப் பார்த்து நீ என் மீது என் தாயின் முதுகைப் போல என்று
கூறி விட்டார்.{பொதுவாக ஒருவர் தன்
மனைவியை தனக்கு மஹ்ரமான ஒரு பெண்ணோடு இவ்வாறு ஒப்பிட்டு கூறி விட்டால் அதற்கு
மார்க்கத்தில் ளிஹார் என்று சொல்லப்படும். அந்த நேரத்தில் அந்த இருவருக்கும்
மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விடும். இருவரும் அதன் பிறகு சேர்ந்து வாழ முடியாது}
சிறிது நாட்கள் கழித்து தான் சொன்னது தவறு
என்றுணர்ந்து மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பி மனைவியிடம் தன் விருப்பத்தைத்
தெரிவித்தார்கள்.அதற்கு கவ்லா ரலி அவர்கள், நான் நபியிடம் சென்று இதற்கான
விளக்கத்தை தெரிந்து வருகிறேன் என்று கூறி நபியிடம் வந்து கேட்ட போது நபி ஸல்
அவர்கள், உங்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விட்டது.எனவே நீங்கள் சேர்ந்து
வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.
அதற்கு அந்த பெண்மனி, யாரசூலல்லாஹ் என் கணவர்
கோபத்தில் சொன்ன வார்த்தை.அதனைக் கொண்டு அவர் தலாக்கை நாட வில்லை என்று கூறிய
போது நபி ஸல் அவர்கள், எப்படியிருந்தாலும்
நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.அந்த பெண்மனி போய்
விடுகிறார்கள்.
மறுபடியும் இரண்டாவது முறை வந்து சேர்ந்து
வாழ்வதற்கான கோரிக்கையை வைத்தார்.என் கணவர் தலாக் விட வேண்டும் என்ற எண்ணத்தில்
சொல்ல வில்லை. ஏதோ கோபத்தில் சொல்லி விட்டார் என்று சொல்லிப் பார்த்தார்.அப்போதும்
நபி ஸல் அவர்கள் முந்தைய பதிலையே சொன்னார்கள்.இதற்கிடையில் அந்த பெண்மனி அல்லாஹ்
விடமும் தன் பிரச்சனைக்கான தீர்வை நாடி துஆ செய்து கொண்டிருந்தார்.
கொஞ்ச நாள் பிறகு மறுபடியும் அந்த பெண்மனி
வந்து யாரசூலல்லாஹ் நான் வயதான பெண்மனி.எனக்கு ஆதரவாக என் குடும்பத்தில்
யாருமில்லை. என் கணவரும் வயதானவர் அவருக்கும் என்னை விட்டால் ஆதரவில்லை. எனக்கு
சின்ன பிள்ளைகளும் இருக்கிறார்கள்.அவர்களையும் கவனிக்க வேண்டும்.அந்த பிள்ளைகளை
என் கணவரோடு விட்டால் அவர்கள் வீணாகி விடுவார்கள்.என்னோடு வைத்துக் கொண்டால்
பசியால் வாடிப் போவார்கள்.எனவே இக்கட்டான சூழ்நிலையிலே நான் இருக்கிறேன் என்று
அந்த பெண்மனி கூறினார்கள்.அப்போதும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இதற்கான
எந்த பதிலும் வர வில்லை. அதனால் நீங்கள் சேர்ந்து வாழ வழியில்லை என்று
கூறினார்கள்.
இப்படி மூன்று முறை கேட்டும் தன் இயலாமையை
வெளிப்படுத்தியும் எந்த பலனும் ஏற்பட வில்லை.இருந்தாலும் அவர்கள் மனம் தளர
வில்லை.அல்லாஹ்விடம் தன் கோரிக்கைத் தொடர்ந்தார்கள்.
என் பிரச்சனைக்கான ஒரு தீர்வை உன் நபியின்
நாவின் வழியாக எனக்கு ஏற்படுத்து என்று அல்லாஹ்விடம் கேட்டு அழுதார்கள்.கெஞ்சி
கண்ணீர் வடித்தார்கள்.அவர்களின் அந்த குரல் அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத்
தட்டியது.அல்லாஹ் மேல்கூறிய வசனத்தை இறக்கி வைத்தான்.
ஒரு அடிமையை உரிமை விடுதல்,60 நாட்கள் நோன்பு
நோற்றல்,60 ஏழைகளுக்கு உணவளித்தல் இந்த கஃப்பாராக்களில் ஒன்றை செய்து இருவரும்
சேர்ந்து கொள்ளலாம் என்ற வசனங்களை இறக்கி வைத்தான்.
وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه
في خلافته والناس معه على حمار ، فاستوقفته طويلا ، ووعظته وقالت : يا عمر قد كنت تدعى
عميرا ، ثم قيل لك : عمر ، ثم قيل لك : أمير المؤمنين ، فاتق الله يا عمر ، فإنه من
أيقن بالموت خاف الفوت ، ومن أيقن بالحساب خاف العذاب ، وهو واقف يسمع كلامها ، فقيل
له : يا أمير المؤمنين ، أتقف لهذه العجوز هذا الوقوف ؟ فقال : والله لو حبستني من
أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة ، أتدرون من هذه العجوز ؟ هي خولة
بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات ، أيسمع رب العالمين قولها ولا يسمعه عمر
؟ (قرطبي
ஒரு முறை ஹள்ரத் உமர் ரலி அவர்கள் தங்கள் ஆட்சி
காலத்தில் தன் சீடர்களோடு நகர் வளம் வந்து கொண்டிருந்தார்கள்.இடையில் ஒரு மூதாட்டி
குறிக்கிட்டு உமர் ரலி அவர்களுக்கு வெகு நேரம் உபதேசம் செய்து
கொண்டிருந்தார்கள்.உமர் ரலி அவர்களும் அதை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.அதனைக்
கண்ணுற்ற சீடர்கள், இந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்டு ஒரு ஜனாதிபதியான நீங்கள்
இவ்வளவு நேரம் நிற்க வேண்டுமா என்று கேட்டார்கள்.அப்போது உமர் ரலி அவர்கள் இடையில்
தொழுகை நேரம் மட்டும் இல்லையெனில் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்க நான் இரவு வரை
கூட நின்றிருப்பேன்.அவர்கள் யார் தெரியுமா ? கவ்லா பின் ஸஃலபா. படைத்த அல்லாஹ்வே அவர்களின்
சொல்லைக் கேட்டான்.இந்த உமர் கேட்க மாட்டாரா என்று கூறினார்கள்.
இந்த வரலாற்றில் நாம் படிப்பனை பெறுவதற்கு பல
விஷயங்கள் உண்டு.
உலகில் இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சிக்கக்
கூடியவர்கள்,
அவர்கள் சொல்லும்
முக்கியமான காரணங்களில் ஒன்று, இஸ்லாம் பெண்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை, வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை அடக்கி வைத்துள்ளது, சமூகத்தில்
அவர்களுக்கு எந்த அந்தஸ்தையும் வழங்க வில்லை என்றும் பரவலாக பேசப்படுகிறது.இது அப்பட்டமான
பொய் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அல்லாஹ் அருளிய அற்புத வேதமாம் அல்குர்ஆன் ஷரீஃபும்,அண்ணல் நபி ஸல் அவர்களின் மணிமொழிகளும் பெண்களை
மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான மனித உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ளது
மட்டுமல்ல அவர்களுக்கு சமூக அரங்கில் மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இந்த விஷயத்தின் கனத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.பெண்களின் நிலை
பற்றி உலகம் கொண்டிருந்த கருத்து என்ன? என்பதைப் பற்றி நாம்
தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப காலமாகவே இந்த உலகம் பெண்களை அவர்களும் மனிதர்கள் தான்
என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த பிறகு கி.பி.
586 -ல் ஃபிரான்ஸில் பெண்களின் அந்தஸ்து பற்றி தீர்மானிக்க
கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதிகமான கருத்து வேறுபாடுகளுக்கு
மத்தியில் பெண்ணும் மனித இனம் தான். ஆனால் ஆண்களுக்கு உழியம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள்
என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.
இதற்கு முன்னதாக ரோமானியர்கள், பெண்களை ஒரு அசுத்த பிராணி என்றனர்.
சீனர்கள், பெண்களுக்கு ஆன்மா
இல்லை என்றனர்.
கணவன் மனைவியை கொன்றால் குற்றமில்லை.
பொதுவாக தந்தைக்கு தன் மகளை கொல்லக்கூடிய உரிமை
இருந்தது,
அரபு நாட்டில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும்
பயங்கரம் நடைமுறையில் இருந்தது. இது தந்தையின் கௌரவமாக கருதப்பட்டது.
இதல்லாமல் ஒரு கணவர் இறந்து விட்டால், அவரது உடமைகளை வாரிசுகளுக்கு பங்கிடும் போது அவர்
விட்டுச் சென்ற சொத்துப் பட்டியலில் அவருடைய மனைவிமார்களும் இடம்பெற்றிருப்பர். இந்த
வகையில்,அந்த அபலைகள் கூறு போட்டு கபளிகரம் செய்யப்படுவர்.
இன்னும் சிலர்,பெண்ணை யார் கொலை செய்தாலும் அது குற்றச்செயல் அல்ல
என்றனர்.
இந்தியாவில் கணவர் இறந்த விட்டால், அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன்
கட்டை ஏற்றி தீயினால் பொசுக்கும் பொல்லாத பாவம் புனிதமாக கருதப்பட்டது.
இந்தப் பின்னனியில் தான் இஸ்லாம் பெண்களுக்கு மனித
அந்தஸ்து மட்டுமல்ல,
அவர்களை ஆண்களுக்கு சரிநிகர்
சமானம் என்று சமத்துவம் பேசி, அவர்களுக்குத் தேவையான
வாழ்வியல் உரிமைகள் அனைத்தையும் வழங்கியது. அரசியல்,குடும்பவியல்,மாத்திரமல்ல ஆன்மீகத்திலும் கூட அவர்களுக்கு உயர்ந்த
ஸ்தானம் இஸ்லாத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதற்கு மேல்கூறப்பட்ட வரலாறு
மிகச்சிறந்த சான்று.
அல்லாஹ்வின் சட்டம் மிக உறுதியானது.உலகத்தின்
சூழ்நிலைக்காக மக்களின் வசதிக்காக அவ்வப்போது மாற்றப்படும் இந்த உலக சட்டங்களைப்
போன்று பலகீனமாதல்ல.ஆனால் அந்த வல்ல அல்லாஹ்வின் சட்டத்தையே தன் பிரார்த்தனையின்
ஒரு பெண்மனி மாற்றிக் காட்டினார்கள் என்றால் இந்த இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு
உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஒரு வரலாறு மட்டுமல்ல. இன்னும் பல
செய்திகள் உண்டு.
கிருஸ்தவ மதத்தில் பெண்கள் மத குருமார்களாக முடியாது.ஆனால்
இஸ்லாமிய வரலாற்றில் ராபியத்துல் பஸரிய்யா,நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா
போன்ற பெண் ஞானிகள் ஹஸன் பஸரி,இமாம் ஷாஃபி போன்ற
ஞான மேதைகளுக்கு பல ஞான உபதேசங்களை வழங்கி வழிகாட்டி யிருக்கிறார்கள். அன்னை ஆயிஷா
ரலி அவர்கள் நபித்தோழர்களுக்கு மார்க்க ஞானத்தை வழங்கும் ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்கள்.
அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்களும் இந்த {ஹமைரா சின்ன சிவந்த பெண்மனியான ஆயிஷாவிடம் மார்க்கத்தின்
மூன்றில் இரண்டு பகுதி ஞானத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டதின் மூலம் அன்னை
அவர்களுக்கு ஸனதை கல்விச் சான்றிதலையும் வழங்கியிருக்கிறார்கள்.
பெண்களை மற்ற மதத்தவர்கள் ஆன்மீகத்தில் தள்ளி வைத்தனர்.
அவர்கள் ஆன்மீகத்திற்கு ஆகாதவர்கள்.மட்டமல்ல,அவர்களோடு இருந்தால்
நம்மையும் ஆகாதவர்களாக,
அவர்களோடு சேர்ந்தால் நம்மையும்
சேராதவர்களாக ஆக்கி விடுவார்கள் என்றும் கருதினார்கள்.
ஆனால் இஸ்லாம் இந்த விஷயத்திலும் அவர்களை அரவணைத்தது.
பெண்களால் அல்லாஹ்வை அடையவும்,ஆண்களை அடைய வைக்கவும்
முடியும். மெஞ்ஞானம் பெற சன்னியாசம் அல்ல.சம்சாரமே அதற்கான சிறந்த வழி என்ற புறட்சிகரமான
சிந்தனையை இஸ்லாம் இந்த மண்ணிற்குச் சொன்னது.
“நான் ஆயிஷாவின் (ரலி)
படுக்கை விரிப்பில் உடன் இருக்கையில் எனக்கு வஹி – வேத வெளிப்பாடு – வந்திருக்கிறது” என்ற நபிகளாரின் அறிவிப்பு அர்த்தமுள்ளதும், அழகானதும், ஆழமானதுமாகும்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்து, சேர்ந்திருக்கும் போதுதான் நபி ஸல் அவர்கள் இறைவனடி
சேர்ந்தார்கள். பெண்கள் தான் நாம் இவ்வுலகிற்கு வருவதற்கான வாசலாக இருந்தார்கள்.அதே
பெண்கள் தான் அல்லாஹ்வை அடைவதற்கும், ஆன்மீகத்தில் நுழைவதற்கும்
வாசலாக இருக்கிறார்கள் என்பதைத் தான் மெஞ்ஞானத் தூதரின் இறுதிப்பயணம் நமக்கு சொல்லும்
செய்தியாகும்.
இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சமத்துவத்துவத்தையும், மகத்துவத்தையும் வழங்கிய இஸ்லாம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை,வாரிசுரிமை, கணவரிடமிருந்து விவாகரத்து பெரும் உரிமை,மறுமணம் புரியும் உரிமை,கல்வி கற்கும் உரிமை, சம்பாத்தியம் செய்யும் உரிமை,மஹர் பெரும் உரிமை, இப்படி வாழ்வியலின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு
வழங்கியது.
No comments:
Post a Comment