إن الحسنات يذهبن السيئات )
நிச்சயமாக
நன்மைகள் தீமைகளை அழித்து விடும் {11 ; 114}
இவ்வுலகில் மிக தீர்க்கமான
வழிகாட்டுதல்கள்,மிக உயர்ந்த நெறிமுறைகள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய
தீனுல் இஸ்லாம் தான்.
நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம்
நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால்
உன்னதமான சுவர்க்கம் உண்டு சுபச்செய்தியும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகம்
உண்டு என்ற எச்சரிக்கையோடும் இவ்வுலகில்
அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்கள்
மனிதனின் இயல்பு பாவம்
புரிவது.அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நஃப்ஸ் எந்நேரமும் பாவத்தின் அளவில் அவனைத்
தூண்டிக் கொண்டே இருக்கும்.அதனால் பாவத்தை விட்டும் அவன் நீங்கியிருப்பது முடியாத
காரணம்.மலக்குமார்கள், நபிமார்கள், இறையருள் பெற்ற ஒரு சில நல்லடியார்களைத்தவிர
வேறு எவரும் பாவங்களை விட்டும் குற்றங்களை விட்டும் தப்பிக்க இயலாது.
كل بني ادم خطاؤون
ஆதமுடைய பிள்ளைகள்
அனைவரும் தவறிழைப்பவர்களே என்பது நபிமொழி.
எனவே பாவங்களை விட்டும்
நீங்கியிருக்க முடியாத மனிதன் அந்த பாவங்களிலேயே மூழ்கி தன் வாழ்க்கையைத் தொலைத்து
மறுமை சுகத்தையும் இழந்து விடாமல் இருக்க அல்லாஹ் அவனுக்கு ஒரு சிறந்த வழியை
காட்டியிருக்கிறான்.அது தான் நன்மைகள்.
அதைத்தான் இந்த வசனம்
மேற்கோள் காட்டுகிறது.நாம் செய்யும் நன்மையான காரியங்கள் நம்மிடம் நிகழும் சிறு
குற்றங்களை அழித்து விடும்.பெரும் பாவங்கள் தவ்பாவின் மூலமே அழிக்கப்படும்
என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
وقال ابن جرير : حدثنا أبو السائب ، حدثنا
أبو معاوية ، عن الأعمش ، عن إبراهيم قال : كان فلان ابن معتب رجلا من الأنصار ، فقال
: يا رسول الله ، دخلت على امرأة فنلت منها ما ينال الرجل من أهله ، إلا أني لم أجامعها
فلم يدر رسول الله - صلى الله عليه وسلم - ما يجيبه ، حتى نزلت هذه الآية : (
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين
) فدعاه رسول الله ، فقرأها عليه .
அன்சாரிகளில் ஒருவர்
நபியிடம் வந்து நான் ஒரு பெண்ணிடம் தவறார நடந்து கொண்டேன் என்று கூறிய போது இந்த
வசனம் அருளப்பட்டது. {இப்னு கசீர்}
وروى الإمام أحمد ، ومسلم ، وأبو داود ،
والترمذي ، والنسائي ، وابن جرير - وهذا لفظه - من طرق : عن سماك بن حرب : أنه سمع
إبراهيم بن يزيد يحدث عن علقمة والأسود ، عن ابن مسعود قال : جاء رجل إلى النبي - صلى
الله عليه وسلم - فقال : يا رسول الله ، إني وجدت امرأة في بستان ، ففعلت بها كل شيء
، غير أني لم أجامعها ، قبلتها ولزمتها ، ولم أفعل غير ذلك ، فافعل بي ما شئت . فلم
يقل رسول الله - صلى الله عليه وسلم - شيئا ، فذهب الرجل ، فقال عمر : لقد ستر الله
عليه ، لو ستر على نفسه . فأتبعه رسول الله - صلى الله عليه وسلم - بصره ثم قال
: " ردوه علي " . فردوه عليه ، فقرأ عليه : ( وأقم الصلاة
طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين ) فقال
معاذ ، وفي رواية عمر : يا رسول الله ، أله وحده ، أم للناس كافة ؟ فقال
: " بل للناس كافة " .
ஒரு மனிதர் நபியிடம்
வந்து ஒரு தோட்டத்திலே ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன்.எனக்கு அதற்குரிய
தன்டனையைக் கொடுங்கள் என்று சொன்ன போது நபி ஸல் அவர்கள் எதுவும் சொல்ல வில்லை.அந்த
மனிதரும் சென்று விட்டார்.அப்போது உமர் ரலி அவர்கள், அல்லாஹ்வே இவரது குற்றத்தை
மறைத்து விட்டான்.இவரும் தன் குற்றத்தை மறைத்திருக்கலாமே என்றார்கள். அதன் பின்
நபி ஸல் அவர்கள் அவரை திருப்பி அழைத்து இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.ஒரு
ஸஹாபி இந்த சட்டம் அவருக்கு மட்டுமா இல்லை அனைவருக்குமா என்று கேட்டார்கள். அதற்கு
நபியவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்றார்கள்.
{இப்னு கசீர்}
يقول
: إن فعل الخيرات يكفر الذنوب السالفة ، كما جاء في الحديث الذي رواه الإمام أحمد وأهل
السنن ، عن أمير المؤمنين علي بن أبي طالب قال : كنت إذا سمعت من رسول الله - صلى الله
عليه وسلم - حديثا نفعني الله بما شاء أن ينفعني منه ، وإذا حدثني عنه أحد استحلفته
، فإذا حلف لي صدقته ، وحدثني أبو بكر - وصدق أبو بكر - أنه سمع رسول الله - صلى الله
عليه وسلم - يقول : " ما من مسلم يذنب ذنبا ، فيتوضأ ويصلي ركعتين ، إلا
غفر له
" .
ஒரு மனிதர் ஒரு
சிறு குற்றம் புரிந்து அதன் பிறகு ஒழு செய்து இரு ரக்கஅத்துகள் தொழுதால் அவரது
குற்றங்களை மன்னிக்கப்பட்டு விடும். {அஹ்மது}
وفي الصحيحين عن أمير المؤمنين عثمان بن
عفان : أنه توضأ لهم كوضوء رسول الله - صلى الله عليه وسلم - ثم قال : هكذا رأيت رسول
الله يتوضأ ، وقال : " من توضأ نحو وضوئي هذا ، ثم صلى ركعتين لا يحدث فيهما
نفسه ، غفر له ما تقدم من ذنبه
உஸ்மான் ரலி
அவர்கள் ஒழு செய்தார்கள்.பின்பு இவ்வாறு தான் நபி ஸல் அவர்கள் ஒழு செய்வதை நான்
பார்த்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள்
என்னிடம், ‘யாரேனும் என்னுடைய
இந்த உழுவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர்
செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள்.
وروى الإمام أحمد ، وأبو جعفر بن جرير ،
من حديث أبي عقيل زهرة بن معبد : أنه سمع الحارث مولى عثمان يقول : جلس عثمان يوما
وجلسنا معه ، فجاءه المؤذن فدعا عثمان بماء في إناء أظنه سيكون فيه قدر مد ، فتوضأ
، ثم قال : رأيت رسول الله - صلى الله عليه وسلم - يتوضأ وضوئي هذا ، ثم قال
: " من توضأ وضوئي هذا ، ثم قام فصلى صلاة الظهر ، غفر له ما كان بينه وبين
صلاة الصبح ، ثم صلى العصر غفر له ما بينه وبين صلاة الظهر ، ثم صلى المغرب غفر له
ما بينه وبين صلاة العصر ، ثم صلى العشاء غفر له ما بينه وبين صلاة المغرب ، ثم لعله
يبيت يتمرغ ليلته ، ثم إن قام فتوضأ وصلى الصبح غفر له ما بينها وبين صلاة العشاء ،
وهن الحسنات يذهبن السيئات
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் எங்களோடு
அமர்ந்திருந்தார்கள்.அப்போது பாங்கு சொல்லும் நபர் வந்தார்.உடனே ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஒழு செய்தார்கள். ‘நான் உழுச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள்
உழுச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள்
என்னிடம், ‘யாரேனும் என்னுடைய
இந்த உழுவைப் போன்று செய்து, பின்னர் எழுந்து லுஹர் தொழுதால் அந்த லுஹருக்கும் சுபுஹுக்கும் மத்தியில் உள்ள
குற்றங்கள் மன்னிக்கப்படும்.பின்பு அஸர் தொழுதால் அந்த அஸருக்கும் லுஹருக்கும்
மத்தியில் இருக்கும் குற்றங்கள் மன்னிக்கப்படும்.இவ்வாறு அனைத்து தொழுகையையும்
சொல்லி விட்டு இவைகள் தான் தீமைகளை அழித்து விடும் நன்மைகள் என்றார்கள். {முஸ்னது அஹ்மது ; 1 / 250}
وفي الصحيح عن أبي هريرة - رضي الله عنه
- عن رسول الله - صلى الله عليه وسلم - أنه قال : " أرأيتم لو أن بباب أحدكم
نهرا غمرا يغتسل فيه كل يوم خمس مرات ، هل يبقي من درنه شيئا ؟ "قالوا : لا يا
رسول الله : قال : " وكذلك الصلوات الخمس ، يمحو الله بهن الذنوب والخطايا
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு)
இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில்
எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
‘அவரின் அழுக்குகளில்
சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள்
கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின்
உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)
وقال الإمام أحمد ، رضي الله عنه : حدثنا
وكيع ، حدثنا سفيان ، عن حبيب ، عن ميمون بن أبي شبيب ، عن أبي ذر; أن رسول الله -
صلى الله عليه وسلم - قال : " اتق الله حيثما كنت ، وأتبع السيئة الحسنة
تمحها ، وخالق الناس بخلق حسن
எங்கிருந்தாலும்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள். ஒரு பாவத்தை செய்து
விட்டால் அதனை அழித்து விடக்கூடிய நன்மையை உடனடியாக செய்து விடு.மக்களிடம் அழகிய
குணங்களோடு நடந்து கொள். {அஹ்மது}
وقال أحمد : حدثنا أبو معاوية ، حدثنا الأعمش
، عن شمر بن عطية ، عن أشياخه ، عن أبي ذر قال : قلت : يا رسول الله ، أوصني . قال
: " إذا عملت سيئة فأتبعها حسنة تمحها " . قال : قلت : يا رسول
الله ، أمن الحسنات : لا إله إلا الله ؟ قال : " هي أفضل الحسنات
" .
அபூதர் {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று சொன்ன போது,
ஏதாவது சிறு குற்றம் செய்து விட்டால் உடனே ஒரு நன்மை செய்து விடு.அந்த நன்மை
அக்குற்றத்தை அழித்து விடும் என்று கூறினார்கள்.அதற்கு அந்த நபித்தோழர், நன்மையில் “லாயிலாஹ இல்லல்லாஹு” ம் இருக் கிறதா ? என்று
கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள் அது நன்மை களில் மிகச்சிறந்தது என்றார்கள்.{மஜ்மவுஸ் ஸவாயிது :10 ; 84}
எனவே முழுக்க முழுக்க பாவங்களில் மூழ்கி இருக்கும்
நமக்கு இது போன்ற நபியின் உன்னதமான வரிகள் புத்துணர்ச்சியை தருகிறது. அல்லாஹ் நாம்
புரியும் அமல்களை ஏற்றுக் கொண்டு அதன் காரணமாக நம்மிடம் நிகழும் குற்றங்களை
அழித்து நம்மை ஏற்றுக் கொள்வானாக
No comments:
Post a Comment