ரமலான்
மாதத்தின் மிக முக்கியமான பகுதி அதன் கடைசிப்பகுதி.அதில் தான் 1000 மாதங்களை விட
மிகச்சிறந்த இரவு என்று குர்ஆன் வர்ணித்திருக்கிற லைலத்துல் கத்ர் இரவு
இருக்கிறது.அதனை அடைந்து கொள்வதற்காகத்தான் இந்த நாட்களுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.
(நோன்பின்) கடைசிப்பத்து
வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள்.
தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன்
மனைவி மார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
فقد روى محمد
بن نصر في كتاب الصلاة عن أبي عثمان النهدي قال : كانوا يعظمون ثلاث عشرات : العشر
الأول من المحرم ، والعشر الأول من ذي الحجة ، والعشر الأخير من رمضان
(الدر المنثور 8 / 501).
(الدر المنثور 8 / 501).
நம்
முன்னோர்கள் வருட நாட்களில் மூன்று பத்துக்களை கண்ணியப் படுத்துபவர்களாக அதற்கு
முக்கியம் தருபவர்களாக இருந்திருக்கிறார்கள். முஹர்ரமின் முதல் பத்து, துல்ஹஜ்ஜின்
முதல் பத்து, ரமலானின் இறுதிப் பத்து.
அந்த இரவை
அடைந்து கொள்ளும் பாக்கியம் பெறுவதற்காக நபி ஸல் அவர்கள் ஏற்படுத்திய மிகச்சிறந்த
அமல் தான் இஃதிகாஃப் இருப்பதாகும்.
அதன்
நிய்யத்தோடு ஜமாஅத் நடைபெறும் ஒரு பள்ளியில் தங்கி யிருப்பதற்கு இஃதிகாஃப் என்று
சொல்லப்படும்.
அதாவது உலகக்
காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக
பள்ளிவாசலில் தங்கி விடுவது. ஒருவர் இவ்வாறு இருப்பதை அல்குர்ஆனும் நபி மொழிகளும்
வலியுறுத்தியுள்ளன.நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு
அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பேயாகும். அவ்வாறு ஒருவர் இந்த நாட்களில்
தன் உலக காரியங்களை ஒதுக்கி விட்டு இதில் ஈடுபடும் போது அவர் லைலதுல் கத்ர் இரவைப்
பெற்றுக் கொள்ள முடியும்.
நபி ஸல்
அவர்கள் விடாமல் செய்த மிக உயர்ந்த அமல்களில் ஒன்று இந்த இஃதிகாஃப்.
وقال الزهري رحمه الله : ( عجباً للمسلمين
! تركوا الاعتكاف ، مع أن النبي صلى الله عليه وسلم ، ما تركه منذ قدم المدينة حتى
قبضه الله عز وجل )
இமாம் ஜுஹ்ரீ ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்
அவர்கள் மதினா வந்ததிலிருந்து விடாமல் செய்த ஒரு அமல் இஃதிகாஃப்.அப்படியிருக்க
அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிற முஸ்லிம்களைப் பார்த்து நான்
ஆச்சரியப்படுகிறேன்.
حافظ صلى الله عليه وسلم ، على الاعتكاف
في العشر الأواخر ، كما في الصحيحين من حديث عائشة رضي الله عنها أن النبي صلى الله
عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه
من بعده . رواه البخاري ( 1921 ) ومسلم ( 1171 )
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப்
பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு
அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)
وفي العام الذي قبض فيه صلى الله عليه وسلم
اعتكف عشرين يوماً البخاري ( 1939
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள்
இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப்
இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
இஃதிகாஃப் குறித்து
எண்ணற்ற சிறப்புகள் ஹதீஸ்கள் வந்திருக்கிறது.
روى الطبراني والحاكم والبيهقي وضعفه عن
ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : ( من اعتكف يوما ابتغاء وجه الله
جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين ) (5345). والخافقان المشرق
والمغرب .
அல்லாஹ்வின் திருப்தியை
நாடி ஒருவர் ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால் அவருக்கும் நரகிற்குமிடையில் அல்லாஹ்
மூன்று ஹன்தக் தூரத்தை ஆக்கி விடுகிறான்.ஒரு ஹன்தக் என்பது கிழக்கு மேற்கிடையே
உள்ள தூரமாகும். {தப்ரானி}
روى الديلمي عن عائشة أن النبي صلى الله
عليه وسلم قال : ( من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ) 5442.
ஒருவர் இறை
நம்பிக்கையோடும் நன்மையை நாடியும் இஃதிகாஃப் இருந்தால் அவரது முன் பாவங்கள்
மன்னிக்கப்படுகிறது. {தைலமி}
روى البيهقي وضعفه عن الحسين بن علي رضي
الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين
وعمرتين
ரமலானில் பத்து
நாட்கள் ஒருவர் இஃதிகாஃப் இருப்பவர் இரு ஹஜ் மற்றும் இரு உம்ரா செய்தவரைப்போல. {பைஹகி}
இஃதிகாஃபின் நோக்கங்கள்
1, லைலத்துல் கத்ர்
இரவைப் பெற்றுக் கொள்ளுதல்
2, மக்களை விட்டும்
ஒதுங்கி அல்லாஹ்வுடன் தனித்திருத்தல்
3, மனதை ஒழுங்கு
படுத்துதல்
4, பாவங்களை விட்டும்
நீங்கி முழுக்க முழுக்க இபாதத்களில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்
5, பாவங்கள் செய்யாமல்
இருக்க பயிற்சி
6, நம் நோக்கங்கள்
முழுவதையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்
இஃதிகாஃபின்
வகைகள்
1, அவ்வாறு
இருப்பதாக நேர்ச்சை செய்தவனுக்கு வாஜிபாகும்.
- واجب : ولا يكون إلا بنذر ، فمن نذر
أن يعتكف وجب عليه الاعتكاف ، فقد قال صلى الله عليه وسلم : ( من نذر أن يطيع الله
فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه ) وفي الحديث أن ابن عمر رضي الله عنهما : أن عمر
سأل النبي صلى الله عليه وسلم قال : كنت نذرت في الجاهلية أن اعتكف ليلة في المسجد
الحرام ، قال : ( أوف بنذرك ) البخاري 4/809 .
மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான்
நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார். அதற்கு நபி ஸல் அவர்கள்,
'உம்முடைய நேர்ச்சையை
நிறைவேற்றும்" என்றார்கள். {புகாரி ; 2032}
2, ரமலான் மாதத்தின் கடைசி
பத்தில் இருப்பது சுன்னத் முஅக்கதா கிஃபாயாவாகும்.ஊரில் ஒருவராவது அந்த சுன்னத்தை
நிறைவேற்ற வேண்டும்.
3, மற்ற நாட்களில் பள்ளியில்
நுழையும் போது அந்த நிய்யத்துடன் நுழைவது முஸ்தஹப்பாகும்.
இஃதிகாஃபின் ஷர்த்துகள்
1, இஸ்லாம் 2,வாதவிலக்கு
மற்றும் பெருந்தொடக்கை விட்டும் சுத்தமாக இருத்தல்.தொடக்கு ஏற்பட்டு உடன் வெளியேறி
சுத்தமாக வேண்டும். 3, ஐவேளை ஜமாஅத் நடைபெறும் பள்ளியில் இருப்பது. பெண்கள்
வீட்டில் தங்களுக்கென்று ஒதுக்கியிருக்கிற தொழு மிடத்தில் அமர வேண்டும்.
ஜும்ஆ ஈத் போன்ற
ஷரீஅத்தின் தேவைகள்,கழிவறை, நஜீஸை நீக்குதல்,குளித்தல் போன்ற இயற்கை தேவைகளைத்தவிர
மற்ற விஷயங்களுக்காக பள்ளியை விட்டு வெளியேறுவது கூடாது.
இஃதிகாஃபில் மக்ரூஹானவை
1, வியாபாரப்
பொருளை எடுத்து வருவது
2, வியாபார
ஒப்பந்தம் செய்வது
3, வணக்கம் என்று
எண்ணி அறவே பேசாமல் மௌன விரதம் இருப்பது.
இஃதிகாஃபின்
ஒழுங்குகள்
1, தொழுகை,திலாவத்,திக்ர்
போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது.
2, அவசியம் இருந்தாலே
தவிர பேசாமல் இருப்பது
3, அவசியம் இருந்தாலே
தவிர மற்ற எந்த காரியங்களையும் செய்யாமல் இருப்பது.
இஃதிகாஃபை
முறிக்கும் காரியங்கள்
1, அவசியமின்றி
பள்ளியை விட்டும் வெளியேறுதல்
2, மனைவியுடன் சேருவது. இன்னும் நீங்கள்
பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.
இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள்.
இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ்
தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
3, மாத விலக்கு
ஏற்படுவது.ஆண்களுக்கு குளிப்பு கடமையானால் உடனே குளித்து விட வேண்டும்.
இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்க வேண்டும். இவ்வாறு நல்லமல்கள் புரிந்து
இறைவனின் திருப்பொருத்தத்தை அடையும் நல்லடியார்களில் நம்மை ஆக்க வல்ல இறையோனிடம்
இறைஞ்சுவோமாக!
No comments:
Post a Comment