Tuesday, May 23, 2017

தராவீஹ் ஆறாம் நாள்



وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌  وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ اَفَلَا تَعْقِلُوْنَ
 
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தி யுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் : 6:32)

உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பணத்தைக் கொண்டோ, திறமைகளைக் கொண்டோ, ஆட்சி அதிகாரத்தைக் கொண்டோ வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.அதற்காக உழைக்கின்ற னர். 

இஸ்லாமிய பார்வையில் குர்ஆன்,ஹதீஸின் மொழியில் இதுவெல்லாம் உண்மையான வெற்றியல்ல.பணம்,கல்வி,திறமை,ஆட்சி இவைகளைக் கொண்டு கிடைப்பது உண்மையான வெற்றியல்ல.பணம் உண்மையில் வெற்றியைத்தரும் என்றால் காரூன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அறிவு வெற்றியைத்தரும் என்றால் இப்லீஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.ஆட்சி அதிகாரம் வெற்றியைத்தரும் என்றால் ஃபிர்அவ்னுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும்.எனவே இவைகள் உண்மையான வெற்றிக்கான படிக்கட்டுகள் அல்ல.

அப்படியானால், உண்மையான வெற்றி எது உண்மையான வெற்றியாளர்கள் யார் என்பதை குர்ஆன் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ
நரகிலிருந்து ஈடேற்றம் பெற்று சுவனம் பிரவேசிப்பவர் தான் வெற்றி யாளர் என்று கூறுகிறான்.

இந்த வெற்றிக்கான வழியை பின் வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.
فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (102) وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ
நாம் புரியும் நன்மைகள் தான் வெற்றிக்கான வழி என்று இவ்வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

குர்ஆனில் இன்னொரு இடத்தில் அல்லாஹுத்தஆலா மனிதனின் உண்மையான வெற்றி குறித்து பதிவு செய்திருக்கிறான்.
وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)
குர்ஆனிலுள்ள சூராக்களில் மிகச்சிறந்த கருத்தாழமிக்க சூராக்களில் இதுவும் ஒன்று.
قال الامام الشافعي : انها سورة لو لم ينزل الي الناس الا هي لكفتهم
ولما سمع الاصمعي في سوق بغداد ذلك البائع يقول وينادي يدلل على بضاعته “ايها الناس ارحموا من يذوب رأسماله” يقول الاصمعي فقلت والله لاذهبن لارى ماذا يبيع الرجل فوجده يبيع قوالب الثلج التي هي رأسماله وان لم يبعها في وقتها فان رأسماله سيضيع ويخسر ، فقال الاصمعي عندها فهمت معنى قول الله تعالى : (والعصر ان الانسان لفي خسر الا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر)  أي ان الانسان يخسر كل يوم بعض عمره
கடைவீதியிலே ஐஸ் வியாபாரி ஒருவன்,மூலதனம் உருகிக் கொண்டிருக் கும் என் மீது இறக்கம் கொள்ளுங்கள் என்று கூறி வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.அந்த வார்த்தையைக் கேட்ட பிறகு தான் அஸ்ர் சூராவின் கருத்து எனக்கு புரிந்தது என்று அஸ்மஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.அதாவது உலகம் என்பது ஐஸ் கட்டியைப் போன்றது.அதை நாம் முறையாக பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் கரைந்து போகத்தான் செய்யும்.  

எனவே உலகம் என்பது அழியக்கூடியது.காலம் கரையைக்கூடியது. அழியக்கூடிய கரைந்து போகக்கூடிய இவ்வுலகத்தில் எதுவும் நிரந்தரமல்ல.இங்கே கிடைப்பது எதுவும் உண்மையான வெற்றியல்ல. நமக்கு உண்மையான வெற்றி மறுமையின் தயாரிப்பாக இருக்கிற நல்லமல்கள் தான்.

நமது வாழ்வின் குறிக்கோலும் இலக்கும் மறுமையும் அதன் தயாரிப்பாக இருக்கிற நல்லமல்களும் தான்.இவ்வுலகம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்காக பயன்படுத்தும் இடம் தானே தவிர இது அஸல் அல்ல.

உலகம் இறைவனின் சந்தை மடம்.இங்கு வருவோரும் போவோரும் தங்குமிடம்.இதுவல்ல நமக்கு சொந்த இடம்.அங்கு இருக்குது வேறு புதிய இடம் என்று கவிஞர் ஒருவரின் பாடல் இங்கே மிகப் பொருத்தமாக இருக்கும்.

أخَذ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بمَنكِبي فقال : ( كُنْ في الدنيا كأنك غريبٌ أو عابرُ سبيلٍ ) . وكان ابنُ عُمرَ يقولُ : إذا أمسيْتَ فلا تنتَظِرِ الصباحَ، وإذا أصبحْتَ فلا تنتظِرِ المساءَ، وخُذْ من صحتِك لمرضِك، ومن حياتِك لموتِك
الراوي: عبدالله بن عمر المحدث: البخاري  -المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 6416
உலகில் நீ ஒரு பரதேசியைப் போன்று அல்லது வழிப்பக்கனைப் போன்று வாழ். {புகாரி}

ஒருவன் ஒரு இலக்கை மனதில் எண்ணிக் கொண்டு வெகுதூரம் பயணிக் கிறான்.பயணத்தின் இடையில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்து தங்குகிறான்.அதற்கான சௌகரீகங்களை அமைத்துக் கொள்கிறான் என்றால்,அவன் தங்கி விட்டு அங்கிருந்து அவனின் இலக்கை நோக்கி கிழம்பி விட வேண்டும்.அங்கே தங்குவதற்கு நல்ல வசதியாக இருக்கிறது என்று அங்கேயே தங்க நினைத்தால் அவனை விட மிக முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. அவன் இலக்கையும் அடைய முடியாது.அதேபோன்று தான் நமக்கும் இவ்வுலகம். சந்தர்ப்பத்திற்காக இங்கே தங்குகிறோம்.அதற்காக வீண் விரய மில்லாமல் ஆடம்பரமில்லாமல் எல்லா வசதிகளையும் செய்து கொள்ளலாம்.தவறில்லை.ஆனால் இதையே அஸல் என்று நினைத்து மறுமையை மறந்து விட்டால் நாம் நஷ்டமடைந்து விடுவோம். இதைத்தான் மேல்கூறப்பட்ட வசனம் உணர்த்துகிறது.

இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் ;
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவதுJ அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)

எனவே வீண் விளையாட்டாக அழிந்து போகக்கூடிய இந்த உலக மாயைகளை விட்டு விட்டு உண்மையான வெற்றியாக இருக்கிற மறுமைக்காக நாம் தயாராக வேண்டும்.

இன்றைக்கு நாம் உலகில் சம்பாதிக்கிற விஷயங்கள் தான் நமது சேமிப்பு என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மை யான சேமிப்பு எதுவென்று நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
أنهم ذَبَحُوا شاةً فقالَ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ ما بَقِيَمنها ؟ قلْتُ : ما بَقِيَ منها إلَّا كَتِفُها . قال : بَقِيَ كلُّها غيرُكَتِفِها
الراوي: عائشة أم المؤمنين المحدث: الترمذي - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 2470
    
அறுக்கப்பட்ட ஆட்டில் என்ன மிச்சம் இருக்கிறது என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது,எல்லாம் கொடுத்தது போக அதன் புஜம் மட்டும் மிச்சம் உள்ளது என்று ஸஹாபாக்கள் சொன்னார்கள்.அப்போது நபியவர்கள், இல்லை எல்லாம் மிச்சம் இருக்கிறது.அதன் புஜம் மட்டும் போய் விட்டது என்றார்கள்.{திர்மிதி}

அதாவது எது ஸதகா செய்து நன்மையாக்கப்பட்டதோ அது தான் உண்மையான சேமிப்பு என்றார்கள்.

நாம் இன்றைக்கு சம்பாதிக்கிற சம்பாத்தியம் சேர்த்து வைக்கிற பொருளாதாரம் அனைத்தும் நம் மரணம் வரை நமக்கு பயன் தரலாம். ஆனால் நம் மரணத்திற்கு பின் மறுமை வரை நமக்கு கை கொடுப்பது நாம் செய்யும் நல்லறங்கள் தான்.
روى البخاري (6514) ، ومسلم (2960) عن أَنَس بْن مَالِكٍ ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( يَتْبَعُ المَيِّتَ ثَلاَثَةٌ ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ : يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ
மய்யித்தை அதன் குடும்பமும் பொருளும் அவன் செய்த நல்லறங்களும் பின்தொடரும்.அமல் மட்டும் தான் அவனுடன் தங்கும்.{புகாரி}

ومعنى الحديث : أن الرجل إذا مات تبعه إلى قبره ثلاثة : تبعه أهله ، وهم أولاده وأقاربه وأهل صحبته ومعرفته ، وتبعه ماله ، كعبيده وإمائه ودابته ، وتبعه عمله ، وهو ما أسلفه من خير أو شر . فيرجع أهله وماله ، ويبقى معه عمله .
انظر : "مرقاة المفاتيح" (8/3235)
எனவே வியாபாரத்திலும் தொழிலிலும் அதிக அக்கரையும் கவனமும் செலுத்துகிற நாம் நற்காரியங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அருமை நாயகம் ஸல் அவர்களின் கண்கானிப்பில் வளர்ந்த அவர்களின் பாசரையில் வார்த்தெடுக்கப்பட்ட ஸஹாபாக்கள் அனைவரும் அமல்களில் தான் வெற்றி என்பதை உண்ர்ந்திருந்தார்கள். அதனால் அமல்களில் அதிக கவனம் செலுத்தினார்கள் மட்டுமல்ல, அதில் ஒருவருக் கொருவர் போட்டி போடுபவர்களாக இருந்தார்கள்.

இன்றைக்கு பெண் பிள்ளைகள் வெறுக்கிற காலமாக இருக்கிறது. ஆனால் நபி ஸல் அவர்கள் பெண் பிள்ளைகளை வளர்ப்பது பற்றி கூறினார்கள்.
جابر بن عبد الله ـ رضي الله عنه ـ أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال: ( مَن كان له ثلاثُ بناتٍ يُؤدِّبُهنَّ ويرحَمُهنَّ ويكفُلُهنَّ وجَبَت له الجنَّةُ ألبتةَ، قيل يا رسولَ اللهِ: فإن كانتا اثنتينِ؟، قال: وإن كانتا اثنتين، قال: فرأى بعضُ القوم أن لو قال: واحدةً، لقال: واحدة ) رواه أحمد وصححه الألباني 

ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஒழுகத்தோடு வளர்த்து அவர்களின் மீது கருணை கொணடு அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்தால் அவருக்கு சுவனம் நிச்சயம். {அஹ்மது}

இதற்குப் பிறகு ஸஹாபாக்களுக்கு மத்தியில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் போட்டி உருவானது.
فخرج النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ، فتبعتْهُ ابنةُ حمزةَ، تنادي : يا عمُّ يا عمُّ، فتناولهَا عليٌّ فأخذ بيدِها وقال لفاطمةَ عليها السلامُ : دونكِ ابنةَ عمِّكِ احمِليها، فاختصم فيها عليٌّ وزيدٌ وجعفرُ، قال عليٌّ : أنا أخذْتُها، وهي بنتُ عمّي . وقال جعفرُ : ابنةُ عمِّي وخالتُها تحتي . وقال زيدٌ : ابنةُ أخي . فقضى بها النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ لخالَتِها، وقال : ( الخالةُ بمنزلةِ الأمِّ ) . وقال لعليٍّ : ( أنت مني وأنا منكَ ) . وقال لجعفرَ : ( أشبهْتَ خلْقي وخُلُقي ) . وقال لزيدٍ : ( أنت أخونا ومولانا ) . وقال عليٌ : ألا تتزوجُ بنتَ حمزةَ ؟ قال : ( إنها ابنةُ أخي منَ الرَّضاعةِ )
الراوي: البراء بن عازب المحدث: البخاري - المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 4251
خلاصة حكم المحدث: [صحيح
உஹது களத்தில் ஷஹீதான ஹம்ஸா ரலி அவர்களின் மகளை வளர்ப்பதில் அலி, ஜைது, ஜாஃபர் ரலி அவர்களுக்கு மத்தியில் போட்டி நிலவியது.அந்த பெண்ணின் சிறிய தாயாரை மணமுடித்திருந்த ஜாஃபர் ரலி அவர்களிடமே அந்த பெண்ணை வளர்க்கும் பொறுப்பை நபி ஸல் அவர்கள் கொடுத்தார்கள்.{புகாரி}

இதுமட்டுமல்ல மற்ற எல்லா அமல்களிலும் அவர்களுக்கு மத்தியில் போட்டி நிலவியது.
ذهب أهلُ الدُّثورِ بالدرجاتِ العُلى والنعيمِ المُقيمِ . فقال " وما ذاك ؟ " قالوا : يُصلُّون كما نُصلِّي . ويصومون كما نصومُ . ويتصدَّقون ولا نتصدَّقُ . ويعتِقون ولا نعتِقُ . فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " أفلا أُعلِّمكم شيئًا تُدركون به مَن سبقَكم وتَسبقون به من بعدكم ؟ ولا يكون أحدٌ أفضل منكم إلا من صنع مثلَ ما صنعتُم " قالوا : بَلى : يا رَسولَ الله ! قال"ُتُسبِحونَ وَتُكَبِرُونَ وَتُحَمِدونَ ، دُبُرَ كلِّ صلاةٍ ، ثلاثًا وثلاثين مرةً " . قال أبو صالحٍ : فرجع فقراءُ المهاجرين إلى رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ . فقالوا : سمِع إخوانُنا أهلُالأموالِ بما فعَلْنا . ففعلوا مثلَه . فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " ذلك فضلُ اللهِ يُؤتيه مَن يشاءُ "
 .الراوي: أبو هريرة المحدث: مسلم - المصدر: صحيح مسلم -الصفحة أو الرقم: 595
خلاصة حكم المحدث: صحيح
செல்வந்தர்களைப் போன்று எங்களால் நன்மைகளை சம்பாதிக்க முடிய வில்லை என்று ஏழை ஸஹாபாக்கள் சொன்ன போது அவர்களுக்கு தொழுகைக்குப் பிறகு ஓதும் தஸ்பீஹ்களை நபி ஸல் அவர்கள் கற்றுக் கொடுத்த ஹதீஸ். {முஸ்லிம்}

جِئنَ النِّساءُ إلى رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليه وسلَّم فقلن: يا رسول اللَّهِ ذَهبَ الرِّجالُ بالفضلِ والجِهادِ في سبيلِ اللَّهِ فما لنا عملٌ ندرِكُ بِهِ عملَ المجاهدينَ في سبيلِ اللَّهِ فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّم: من قعدَ -أو كلمةً نحوَها-منْكُنَّ في بيتِها فإنَّها تدرِكُ عملَ المجاهدِ في سبيلِ اللَّهِ

الراوي: أنس المحدث: البزار - المصدر: البحر الزخار المعروف بمسند البزار - الصفحة أو الرقم: 13/339
خلاصة حكم المحدث: لا نعلم رواه عن ثابت إلا روح بن المسيب
ஆண்களைப் போன்று எங்களால் நன்மைகளில் ஈடுபட முடிய வில்லை என்று பெண்கள் சொன்ன போது நீங்கள் வீட்டில் இருந்தாலே அந்த நன்மைகளை பெற்றுக் கொள்வீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.{பஸ்ஸார்}


எனவே அழிந்து போகக்கூடிய அர்ப்ப உலக விஷயங்களுக்காக போட்டி போடாமல் மறுமைக்கான போட்டி நம்மிடமும் உருவாக வேண்டும்.அதில் தான் உண்மையான வெற்றியும் சுபிட்சமும் அடங்கியிருக்கிறது.அல்லாஹ் அருள் புரிவானாக!

3 comments:

  1. ஆயத்தில்மாற்றம்உள்ளது عن النار زحزح என்பது தவறு فمن وحزب عن النار وادخل الجنة فقد فاز என்பது தான் சரி (இ)
    موازيه فأولئك என்பதுதவறு فمن ثقلت
    موازيه فأولئك هم المفلحون என்பது தான் சரி (இ)اعلموا النما الحيوة الدنيا لعب وتفاخرஎன்பதுதவறு اعلموا النما الحيوة الدنيا لعب ولهو وزينة و تفاخر بينكم وتكاثر في الأموال والاولاد என்பது தான் சரி எனவே
    குறிப்பு எடுப்பவர்கள் சற்று கவனிக்க வும்

    ReplyDelete
  2. ماشاءالله பயனுள்ள தகவல்கள் அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் பரக்கத் செய்யட்டும்

    ReplyDelete