قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي
يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
(31)
{நபியே!} நீங்கள் கூறுங்கள் ; நீங்கள் அல்லாஹ்வை
நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள்.{அப்போது} அல்லாஹ் உங்களை
நேசிப்பான்.உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும்
கிருபையாளனாகவும் இருக்கிறான். {3 ; 31}
وقال الحسن وابن جريج : نزلت في قوم من
أهل الكتاب قالوا : نحن الذين نحب ربنا . وروي أن المسلمين قالوا
: يا رسول الله ،
والله إنا لنحب ربنا ; فأنزل الله عز وجل (قرطبي)
வேதக்காரர்களில் சிலர் நாங்கள் தான் இறைவனை
நேசிக்கிறோம் என்று கூறினார்கள் அப்போது இவ்வசனம் அருளப்பட்டது. {குர்துபி}
وقال الضحاك عن ابن عباس رضي الله عنهما
: وقف النبي صلى الله عليه وسلم على قريش وهم في المسجد الحرام وقد نصبوا أصنامهم وعلقوا
عليها بيض النعام وجعلوا في آذانها ( الشنوف )وهم يسجدون لها ، فقال : يا معشر
قريش والله لقد خالفتم ملة أبيكم إبراهيم وإسماعيل " فقالت له قريش إنما نعبدها
حبا لله ليقربونا إلى الله زلفى ، فقال الله تعالى : قل يا محمد إن كنتم تحبون الله
وتعبدون الأصنام ليقربوكم إليه فاتبعوني يحببكم الله ، فأنا رسوله إليكم وحجته عليكم
، أي اتبعوا شريعتي وسنتي يحببكم الله فحب المؤمنين لله اتباعهم أمره وإيثار طاعته
وابتغاء مرضاته ، وحب الله للمؤمنين ثناؤه عليهم وثوابه لهم وعفوه عنهم فذلك قوله تعالى
: ( ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ) .(بغوي)
மஸ்ஜிதுல் ஹராமில் குரைஷிகள் சிலைகளை நிறுத்தி
அதற்கு ஸஜ்தா செய்து கொண்டிருந்தார்கள்.அதனைப் பார்த்த நபி ஸல் அவர்கள் குரைஷிகளே
நீங்கள் உங்கள் தந்தை இப்ராஹீம் நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்கிறீர்கள் என்று
சொன்னார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் அளவில் இவைகள் எங்களை நெருக்கி வைக்கும்
என்ற எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது நாங்கள் கொண்ட பிரியத்தில் தான் இவ்வாறு
செய்கிறோம் என்று கூறினார்கள்.அப்போது இந்த வசனம் இறங்கியது. {தஃப்ஸீர் பகவி}
அல்லாஹ்வை நேசம் கொள்வதற்கான அடையாளம் நபியைப்
பின்பற்றுவதும் நபியின் மேலான சுன்னத்துகளை எடுத்து செயல்படுவதும் தான்.
وقال سهل بن عبد الله : علامة حب الله حب
القرآن ، وعلامة حب القرآن حب النبي - صلى الله عليه وسلم - وعلامة حب النبي - صلى
الله عليه وسلم - حب السنة ; وعلامة حب الله وحب القرآن وحب النبي - صلى الله عليه
وسلم - وحب السنة حب الآخرة ، وعلامة حب الآخرة أن يحب نفسه ، وعلامة حب نفسه أن يبغض
الدنيا ، وعلامة بغض الدنيا ألا يأخذ منها إلا الزاد والبلغة (قرطبي)
ஸஹல் பின் அப்துல்லாஹ்
ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அல்லாஹ்வை நேசிப்பதற்கான அடையாளம் குர்அனை நேசிப்பது.
குர்ஆனை நேசிப்பதற்கான அடையாளம் நபியை நேசிப்பது.நபியை நேசிப்பதற்கான அடையாளம்
நபியின் வழிமுறையை நேசிப்பது. இவையனைத்தையும் நேசிப்பதற்கான அடையாளம் மறுமையை
நேசிப்பது. {குர்துபி}
لقد كان لكم في رسول الله اسوة حسنة
நபியின் வாழ்வில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி
இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
நாம் வாழ்க்கையில்
சந்திக்கிற அனைத்திற்கும் அண்ணல் நபி ஸல் அவர்களின் வாழ்வும் வாக்கும் நமக்கு
சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.நம் பிறப்பு முதல் இறப்பு வரை அல்ல இறந்த பின்
மறுமை வரை நடக்கிற அனைத்திற்கும் அருமை நாயகம் ஸல் அவர்கள் நமக்கு சிறந்த
வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்கள்.
تركتُ فيكم أمريْنِ ،
لن تَضِلُّوا ما تمسكتم بهما : كتابَ اللهِ وسُنَّةَ رسولِهِ
الراوي: مالك
بن أنس المحدث: ابن حجر العسقلاني - المصدر:تخريج مشكاة المصابيح - الصفحة أو الرقم: 1/140
உங்களில் நான் இரு
விஷயங்களை விட்டுச் செல்கிறேன்.அவ்விரண் டையும் நீங்கள் பற்றிப்பிடித்து வாழும்
காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள்.ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன்.இரண்டு எனது
வழிமுறை. {மிஷ்காத்}
குர்ஆன்,ஹதீஸ்
இவ்விரண்டும் இஸ்லாத்தின் அஸல்.இவ்விரண்டையும் பின்பற்ற வேண்டும்.இரண்டில் ஒன்றை
விட்டாலும் வழிதவறி விடுவது நிச்சயம்.மட்டுமல்ல ஒன்றை எடுத்துக் கொண்டு இன்னொன்றை
விட்டால் எடுத்து செயல் படுகின்ற அந்த ஒன்றும் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய் விடும்.
قال
بن عباس ثلاث ايات نزلت مقرونه بثلاث لا تقبل واحده بغير قرينتها
واطيعوا الله واطيعو الرسول فمن اطاع الله
ولم يطع الرسول لم يقبل منه
واقيموا الصلاة واتوا الزكاه فمن صلى ولم
يزك لم يقبل منه
ان اشكر لى ولوالديك فمن شكر الله ولم يشكر
والديه لم يقبل منه
குர்ஆனில் அல்லாஹ் மூன்று
விஷயங்களை இன்னொரு மூன்று விஷயங்களோடு இணைத்துக் கூறுகிறான்.அவற்றில் ஒன்றை செய்து
மற்றொன்றை விட்டு விட்டால் செய்த ஒன்றையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.
1, அல்லாஹ்வுக்கு வழிப்பட
வேண்டும். ரசூலுக்கும் வழிப்பட வேண்டும்.
2, தொழ வேண்டும், ஜக்காத்
கொடுக்க வேண்டும்.
3, அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்த வேண்டும்.பெற்றோர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
நாம் வாழ்வில் வெற்றி பெற
வேண்டுமென்றால் நாம் நபியின் வாழ்வையும் வாக்கையும் பற்றிப் பிடித்து வாழ வேண்டும்.அதில்
தான் ஈருல வெற்றி அடங்கியிருக்கிறது.
ஸஹாபாக்கள் அவ்வாறு
விளங்கிய காரணத்தினால் தான் நபியை நபியின் வாழ்வையும் வாக்கையும் உயிர் மூச்சாக
கருதினார்கள்.
நபி ஒன்றை செய்தால் செய்வார்கள். விட்டால் விடுவார்கள் ஏன்
செய்தார்கள், ஏன் விட்டார்கள் என்று யோசிக்க மாட்டார்கள்.
الرسول
صلى الله عليه وسلم كان يخطب فقال للناس بعد ما صعد على المنبر، قال لهم: "اجْلِسُوا”.
بعض
الصحابة كانوا واقفين، فقال لهم: اجلسوا.
فسمع
ذلك ابن مسعود رضي الله عنه وأرضاه، وكان على باب المسجد، فجلس على باب المسجد، يوجد
مكان بداخل المسجد، لكنه سمع كلمة اجلسوا، فنفذ أمر الرسول صلى الله عليه وسلم، وجلس
على باب المسجد، فرآه الرسول صلى الله عليه وسلم، فقال له: "تَعَالَ يَا عَبْدَ
اللَّهِ بْنَ مَسْعُودٍ”.
நபி ஸல் அவர்கள் குத்பாவின் இடையில் நின்று
கொண்டிருந்த ஸஹாபாக்களை அமரும்படி கூறினார்கள்.அந்த நேரத்தில் பள்ளியினுள் நுழைந்த
இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அந்த வார்த்தையைக் கேட்டு பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து
விட்டார்கள்.
الشيء
العظيم في الصحابة أنهم كانوا يتبعون رسول الله صلى الله عليه وسلم حتى دون أن يسألوا
عن الحكمة، روى البخاري ومسلم وغيرهما عن عمر بن الخطاب رضي الله عنه أنه جاء إلى الحجر
الأسود، ولا يعرف الحكمة من ذلك يقول:
إني
أعلم أنك حجر لا تضر ولا تنفع، ولولا أني رأيت النبي صلى الله عليه وسلم يقبلك ما قبلتك.
ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லைப் பார்த்து நீ
ஒரு கல்.உன்னால் எந்த நன்மையும் இல்லை.எந்த தீமையும் இல்லை என்று எனக்குத்
தெரியும்.என்றாலும் நபி ஸல் அவர்கள் உன்னை முத்தமிட நான் பார்க்க வில்லையென்றால்
நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன் என்றார்கள்.{புகாரி}
روى البخاري عن عمر رضي الله عنه قال: فما
لنا وللرَّمَل إنما كنا راءينا به المشركين وقد أهلكهم الله.
والرَّمَل هو المشي السريع مع تقارب الخطى،
يعنى من ضمن مناسك الحج هذا الكلام أول ما فُعِل كان فيعمرة القضاء سنة سبعة هجرية،
الرسول صلى الله عليه وسلم كان يريد أن يري الكفار قوة المسلمين، فأمر الصحابة بالكشف
عن الأكتاف، وبالرَّمَل السريع؛ ليُخَوّف المشركين من قوة المسلمين، فظن عمر انتهاء
الأمر الآن؛ لأنه لا يوجد مشركون، كل الجزيرة أسلمت وكل الحجاج مسلمون، فليس له شأن،
ثم رجع لنفسه بسرعة، وقال: شيء صنعه النبي صلى الله عليه وسلم، فلا نحب أن نتركه.
தவாஃபில் ரமல் என்ற ஒரு
முறை உண்டு.தவாஃபின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கால் பாதத்தை கொஞ்சம் நெருக்கமாக
எடுத்து வைத்து வேகமாக நடப்பது.இதற்கு ரமல் என்று சொல்லப்படும் இதனை நபி ஸல்
அவர்கள் சுன்னத்தாக ஆக்கினார்கள்.இஸ்லாம் தோன்றிய அந்த ஆரம்ப நேரத்தில் தாங்களும்
பலம் மிக்கவர்கள் என்பதை காஃபிர்களுக்கு காட்டுவதற்காக நபி ஸல் அவர்கள்
ஏற்படுத்திய நடைமுறை இது.உமர் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாம் மிகப்பெரும் வளர்ச்சி
கண்டு விட்டது.முஸ்லிம்களைப் பார்த்து மற்றவர்கள் அஞ்சுகின்ற அளவு நிலைமை ஏற்பட்டு
விட்டது.எனவே இப்போதும் அந்த ரமல் தேவையா என்று அவர்கள் யோசித்தார்கள்.ஆனால்
யோசித்த கொஞ்ச நேரத்தில் இல்லை,இல்லை இது நபி ,ஸல் அவர்கள் செய்த காரியம். எனவே
அதை விடுவதை நான் விரும்ப வில்லை என்று கூறினார்கள்.{புகாரி}
روى
البخاري، ومسلم عن ابن عمر رضي الله عنهما قال:
اتخذ
النبي صلى الله عليه وسلم خاتما من ذهب- قبل تحريم الذهب على الرجال- فاتخذ الناس خواتيم
من الذهب.
لم يقل
لهم البسوا، لكن الصحابة حريصة على أن تقلد الرسول في كل شيء، ثم بعد ذلك قال: إِنِّي
اتَّخَذْتُ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَنَبَذْتُهُ.
ثم قال:
إِنِّي لَنْ أَلْبَسَهُ أَبَدًا
حُرّم
على الرجال، فنبذ الناس خواتيمهم، فالموضوع في غاية البساطة عند الصحابة، فهم لم يسألوا
النبي صلى الله عليه وسلم الحكمة من لبس الخاتم حينما لبسه، ولم يسألوه عن الحكمة لما
نبذه.
ஆரம்பத்தில் நபி
ஸல் அவர்கள் தங்க மோதிரம் அணிந்திருந்தார்கள். ஆனால் அவ்வாறு அணிய வேண்டும் என்று
கட்டளையிட வில்லை. இருந்தாலும் நபி அணிவதைப் பார்த்து ஸஹாபாக்களும் அணிந்தார்கள்.
பின்பு ஒரு நாள் இதை நான் இனிமேல் அணிய
மாட்டேன் என்று நபி சொன்ன போது ஸஹாபாக்கள் அனைவரும் அதை தூக்கி எறிந்து
விட்டார்கள்.{புகாரி}
அணிந்த போதும்
காரணம் கேட்க வில்லை.தூக்கி எறிந்த போதும் காரணம் கேட்க வில்லை.
روى أبو داود، وأحمد، والدارمي عن
أبي سعيد الخدري رضي الله عنه وأرضاه قال: بينما رسول الله صلى الله عليه وسلم
يصلي بأصحابه إذ خلع نعليه، فوضعهما عن يساره، فلما رأى ذلك القوم، ألقوا نعالهم، فلما
قضى رسول الله صلى الله عليه وسلم صلاته، قال: "مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ
نِعَالِكُمْ؟"، قالوا: رأيناك ألقيت نعليك، فألقينا نعالنا. فقال رسول
الله صلى الله عليه وسلم: "إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ آتَانِي فَأَخْبَرَنِي
أَنَّ فِيهِمَا قَذَرٌ. أو قال: أَذًى"..
நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது
திடீரென்று தன் செருப்புக்களை கழட்டினார்கள்.அதனைக் கண்ணுற்ற தோழர்கள் அவர்களது
செருப்புக்களை கழற்றி விட்டார்கள்.தொழுகை முடிந்த பிறகு நீங்கள் ஏன் உங்கள்
செருப்புகளை கழட்டினீர்கள் என நபியவர்கள் கேட்ட போது யாரசூலல்லாஹ் நீங்கள் உங்கள்
செருப்பை கழட்டுவதை நாங்கள் கண்டோம்.அதனால் நாங்களும் அவ்வாறு செய்தோம்
என்றார்கள்.{அபூதாவூது}
عن أنس -رضي الله عنه- أن خياطًا دعا رسولَ
الله -صلى الله عليه وسلم- لطعام صنَعه، قال أنس: "فذهبتُ مع رسول الله -صلى الله
عليه وسلم- إلى ذلك الطعام، فقرَّب إلى رسول الله -صلى الله عليه وسلم- خبزًا ومرقًا
فيه دُبَّاء وقديد، فرأيت النبي -صلى الله عليه وسلم- يتتبَّع الدباء مِن حوالي القَصعة"،
قال: "فلم أزل أُحبُّ الدُّبَّاء مِن يومئذ[6]
அனஸ் ரலி அவர்கள கூறுகிறார்கள் ; ஒரு நாள் நபியுடன் ஒரு விருந்திற்கு சென்றிருந்தேன்.அங்கே
நபியவர்கள் தங்கள் முன் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து சுரைக்காயை தேடித்
தேடி எடுத்து சாப்பிட்டதைப் பார்த்தேன்,அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்ப
ஆரம்பித்து விட்டேன் என்றார்கள்.{புகாரி}
நபி ஸல் அவர்களை ஸஹாபாக்கள் எந்தளவு
பின்பற்றினார்கள் என்பதற்கு இவைகள் உதாரணங்கள்.இந்தளவு நபியைப் பின்பற்றியதினால்
அவர்கள் அல்லாஹ்வின் பிரியத்திற்குரியவர்களாக ஆளார்கள்.நாமும் வள்ளல் நபியின்
வழிமுறைகளை பின்பற்றுவோம். அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.
No comments:
Post a Comment