Friday, May 19, 2017

தராவீஹ் நான்காம் நாள்




إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا
அமானிதங்களை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மக்களுக்கு மத்தியில் நீங்கள் தீர்ப்பு வழங்கினால் நீதமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடு கிறான்.நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு எதைக் கொண்டு உபதேசம் செய்கிறானோ அது மிக நல்லதாக இருக்கும்.நிச்சயமாக அல்லாஹ் {அனைத்தையும்} கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான். {4 ; 58}


அமானிதங்களை பாதுகாப்பது குறித்து அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது குறித்து இந்த வசனத்தில் அறிவுறுத்தப் படுகிறது.

عن ابن جريج[ قوله : ( إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها ) ] قال : نزلت في عثمان بن طلحة قبض منه النبي صلى الله عليه وسلم مفتاح الكعبة ، فدخل به البيت يوم الفتح ، فخرج وهو يتلو هذه فدعا عثمان إليه ، فدفع إليه المفتاح ، قال : وقال عمر بن الخطاب لما خرج رسول الله صلى الله عليه وسلم من الكعبة ، وهو يتلو 
هذه الآية : فداه أبي وأمي ، ما سمعته يتلوها قبل ذلك .(ابن كثير
عن ابن عباس في قول الله عز وجل : ( إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها ) قال : لما فتح رسول الله صلى الله عليه وسلم مكة دعا عثمان بن طلحة بن أبي طلحة ، فلما أتاه قال : " أرني المفتاح " . فأتاه به ، فلما بسط يده إليه قام العباس فقال : يا رسول الله ، بأبي أنت وأمي ، اجمعه لي مع السقاية . فكف عثمان يده فقال رسول الله صلى الله عليه وسلم " أرني المفتاح يا عثمان " . فبسط يده يعطيه ، فقال العباس مثل كلمته الأولى ، فكف عثمان يده . ثم قال رسول الله صلى الله عليه وسلم " يا عثمان ، إن كنت تؤمن بالله واليوم الآخر فهاتني المفتاح " . فقال : هاك بأمانة الله . قال : فقام رسول الله صلى الله عليه وسلم ففتح باب الكعبة ، فوجد في الكعبة تمثال إبراهيم معه قداح يستقسم بها . فقال رسول الله صلى الله عليه وسلم :" ما للمشركين قاتلهم الله . وما شأن إبراهيم وشأن القداح " . ثم دعا بجفنة فيها ماء فأخذ ماء فغمسه فيه ، ثم غمس به تلك التماثيل ، وأخرج مقام إبراهيم ، وكان في الكعبة فألزقه في حائط الكعبة ثم قال : " يا أيها الناس ، هذه القبلة " . قال : ثم خرج رسول الله صلى الله عليه وسلم فطاف بالبيت شوطا أو شوطين ثم نزل عليه جبريل ، فيما ذكر لنا برد المفتاح ، فدعا رسول الله صلى الله عليه وسلم :( إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها ) حتى فرغ من الآية)
கஃபாவை திறந்து மூடும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா ரலி அவர்களிடம் இருந்தது.மக்கா வெற்றியின் போது நபி ஸல் அவர்கள் உஸ்மான் பின் தல்ஹாவிடமிருந்து சாவியை வாங்கி கஃபாவை திறந்து உள்ளே சென்றார்கள்.அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்க வில்லை.உள்ளே சென்று திரும்பிய நபி ஸல் அவர்கள் இந்த வசனத்தை ஓதிய வன்னம் வந்தார்கள்.பின்பு உஸ்மானை அழைத்து கஃபாவின் சாவியை அவரிடமே ஒப்படைத்தார்கள்.{இப்னு கஸீர்}

وهذا من المشهورات أن هذه الآية نزلت في ذلك ، وسواء كانت نزلت في ذلك أو لا فحكمها عام ; ولهذا قال ابن عباس ومحمد بن الحنفية : هي للبر والفاجر ، أي : هي أمر لكل أحد (ابن كثير)
இது அவர்கள் விஷயமாக இறங்கினாலும் இந்த சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

وهذا يعم جميع الأمانات الواجبة على الإنسان ، من حقوق الله ، عز وجل ، على عباده ، من الصلوات والزكوات ، والكفارات والنذور والصيام ، وغير ذلك ، مما هو مؤتمن عليه لا يطلع عليه العباد ، ومن حقوق العباد بعضهم على بعض كالودائع وغير ذلك مما يأتمنون به بعضهم على بعض من غير اطلاع بينة على ذلك . فأمر الله ، عز وجل ، بأدائها ، فمن لم يفعل ذلك في الدنيا أخذ منه ذلك يوم القيامة ، كما ثبت في الحديث الصحيح أن رسول الله صلى الله عليه وسلم قال : " لتؤدن الحقوق إلى أهلها ، حتى يقتص للشاة الجماء من القرناء "
அமானிதம் என்பது அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகள், மனிதர்கள் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எல்லா வற்றையும் எடுத்துக் கொள்ளும்.அவை அனைத்தும் அமானிதங்கள் தான்.{இப்னு கஸீர்}

البراء بن عازب وابن مسعود وابن عباس وأبي بن كعب قالوا : الأمانة في كل شيء في الوضوء والصلاة والزكاة والجنابة والصوم والكيل والوزن والودائع ، وقال ابن عباس : لم يرخص الله لمعسر ولا لموسر أن يمسك الأمانة(قرطبي)
ஒழு,தொழுகை,ஜக்காத்,கடமையான குளிப்பு, நோன்பு, அளவை, எடை போன்ற அனைத்திலும் அமானிதம் இருக்கிறது என்று இப்னு அப்பாஸ், இப்னு மஸ்வூத், உபை பின் கஃப் போன்ற ஸஹாபாக்களின் கருத்து. {குர்துபி}

எந்த அமானிதமாக இருந்தாலும் அதை பேண வேண்டும் என்பது குறித்து பல ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.உண்மையில் அல்லாஹ்வை யும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் அமானிதம் சம்பந்தமாக மார்க்கம் சொன்ன அறிவுரைகளைப் படித்திருந்தால் எப்பாடு பட்டாவது அமானிதத்தை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுவான்.  

عن ابنِ مَسعودٍ قالَ : إنَّ الشَّهادةَ تُكَفِّرُ كلَّ ذَنبٍ إلَّاالأمانةَ ، يُؤتَى بالرَّجلِ يومَ القِيامَةِ - وإن كان قُتِلَ في سبيلِ اللَّهِ - فيقالُ : أدِّ أمانتَكَ ، فيقولُ وأنَّى أؤدِّيها وقد ذَهَبتِ الدُّنيا ؟ ! فتُمَثَّلُ لَهُ الأمانةُ في قعرِ جَهَنَّمَ فيَهْوي إليها فيحمِلُها على عاتقِهِ ، قالَ : فتنزلُ على عاتقِهِ فيَهْوي على أثرِها أبدَ الآبدينَ قالَ زاذانُ : فأتيتُ البراءَ فحدَّثتُهُ ، فقالَ : صدقَ أخي : إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

الراوي: زاذان أو زادان المحدث: أحمد شاكر      - المصدر: عمدة التفسير - الصفحة أو الرقم: 1/527
خلاصة حكم المحدث: إسناده صحيح
போர்க்களத்தில் ஏற்படும் ஷஹாதத் மரணம் எல்லா பாவங்களையும் அழித்து விடும் அமானிதத்தைத் தவிர என்ற ஹதீஸ் உம்ததுத் தஃப்ஸீரில் இடம்பெற்றிருக்கிறது.

இயற்கையாகவே அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களில் அமானிதத்தைப் பேணும் பண்பை படைத்திருக்கிறான். குர்ஆனும் நபிவழியும் வந்த போது ஏற்கனவே இருந்த இந்தப் பண்பை மேலும் உறுதிப் படுத்தியது. எனவே தான் முந்தைய காலங்களில் மக்களிடையே நாணயம் அதிகமாகக் காணப்பட்டது. அமானிதம் பாதுகாக்கும் பண்பு இயற்கையாக இருந்தது என்பதற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக உள்ளது. 

اشْتَرَى رَجُلٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ آخَرَ أَرْضًا فَأَصَابَ فِيهَا جَرَّةً مِنْ ذَهَبٍ مَخْتُومَةً ، فَقَالَ لِلَّذِي بَاعَ الأَرْضَ : خُذْ جَرَّتَكَ هَذِهِ ، فَإِنِّي إِنَّمَا ابْتَعْتُ الأَرْضَ وَلَمْ أَبْتَعِ الذَّهَبَ ، فَقَالَ الآخَرُ : أَتَرُدُّ عَلَيَّ مَالا قَدْ نَزَعَهُ اللَّهُ مِنِّي ؟ فَاخْتَصَمَا إِلَى قَاضٍ ، فَقَالَ : أَلَكُمَا أَوْلادٌ ؟ فَقَالا : نَعَمْ ، قَالَ هَذَا : لِي غُلامٌ ، وَقَالَ الآخَرُ : لِي جَارِيَةٌ ، قَالَ : فَأَنْكِحُوا أَحَدَهُمَا الآخَرَ ، وَأَعْطُوهُمَا الْمَالَ ، فَلْيَسْتَعِينَا مِنْهُ ، وَلْيَتَصَدَّقَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் "என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்க வில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் "நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?''என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், "எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், "அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3472)

ஆனால் மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால் இந்தக் குணம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இக்கருத்தையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

خيرُ أُمَّتِي قَرْنِي ، ثُمَّ الذين يَلُونَهُمْ ، ثمَّ الذين يَلُونَهُمْ - قال عِمْرانُ : فلَا أَدْرِي أذَكَرَ بعدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثلاثًا - ثُمَّ إنَّ بعدَكُمْ قومًا يشْهَدُونَ ولَا يُسْتَشْهَدُونَ ، ويخونونَ ولَايُؤْتَمَنُونَ ، وينذُرونَ ولَا يُوَفُّونَ ، ويَظْهَرُ فيهم السِّمَنُ

الراوي: عمران بن الحصين المحدث: البخاري   - المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 3650

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி) நூல்: புகாரி (2651)

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قال لعبدِ اللهِ بنِ عمرٍو كيفَ بكَ يا عبدَ اللهِ إذا بقِيتَ في حُثالةٍ قد مرَجَتْ أماناتُهم وعهودُهم فاختَلَفوا وكانوا هكذا وأدخَل أصابعَه بعضَها في بعضٍ قال عبدُ اللهِ فكيفَ تأمُرُني يا رسولَ اللهِ قال تعمَلُ بما تعرِفُ وتدَعُ ما تُنكِرُ وتعمَلُ بخاصَّةِ نفسِكَ وتدَعُ عنكَ عوَامَّ النَّاسِ

الراوي: أبو هريرة المحدث: الطبراني    - المصدر: المعجم الأوسط - الصفحة أو الرقم: 8/334

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு,கருத்து வேறுபாடும் கொள்வார்கள்''என்று கூறிநபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, "அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது இப்னு உமர் ரலி அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத் (3779)

மேற்கண்ட ஹதீஸ் இன்றைய காலத்தைச் சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல் பார்ப்பதற்கு நல்லவனைப் போல் தெரிகிறான். வாயைத் திறந்தால் இறையச்சம் மிகுந்தவனைப் போல் பேசுகிறான். ஆனால் தன்னுடைய காரியம் முடிந்தவுடன் அமானிதத்தைப் பேண மறந்து விடுகிறான். 

இதுபோன்ற நிகழ்வை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆயிரக்கணக்கானோரில் ஒருவரைக் கூட நம்பிக்கைக்குத் தகுந்தவராக நம்மால் காண முடியவில்லை. அல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும் செய்ய வேண்டிய அமானிதங்களைப் பேணுபவர்கள் அரிதிலும் அரிதாகி விட்டார்கள். சிலர் தொழுகைநோன்பு,ஜகாத் போன்ற அமானிதங்களை முறையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பவிஷயங்களிலோ அல்லது வியாபார விஷயங்களிலோ நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள்.

இதுவெல்லாம் கியாமத் நாளின் அடையாளம்

அமானிதம் வீணடிக்கப்பட்டால் கியாமத் நாளை எதிர் பார்த்துக் கொள் என்று நபி ஸல் அவர்கள் சொன்ன போது, அதை வீணடிப்பது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.அப்போது நபியவர்கள்.ஒரு பதவி அல்லது பொறுப்பு தகுதியில்லாதவரிடம் ஒப்படைப்பது என்றார்கள். {புகாரி}

அல்லாஹ் பாதுகாப்பானாக

No comments:

Post a Comment