Friday, May 26, 2017

தராவீஹ் இருபதாம் நாள்



வல்லோன் அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான்.அவனுடைய படைப்புகளில் ஒன்றை விட ஒன்றை அவன் சிறப்பித்திருக்கின்றான்.அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான்.
இறைத்தூதர்களில்  அருமை நாயகம் ஸல் அவர்களை சிறப்பித்துள்ளான்.வானவர்களிலும் ஜிப்ரீல் மீக்கால் ஆகிய வானவர்களுக்கு தனிச் சிறப்பு வழங்கியுள்ளான்.இடங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு என்றாலும் அவற்றில் மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை அவன் புனிதப்படுத்தியுள்ளான். இந்த மூன்று புனிதஸ்தலங்களில் கூட ஒன்றை விட மற்றதை சிறப்பித்துள்ளான்.வேதங்களில் புனிதக் குர்ஆனை மேன்மைப் படுத்தியுள்ளான்.நாட்களில் ஜும்ஆ நாளை சிறப்பித்துள்ளான்.   மாதங்களில் சிறப்பிற்குரிய மாதமாக ரமலானை தேர்வு செய்து சிறப்பித்துள்ளான்.அந்த ரமலானிலும் அதன் கடைசிப் பத்து நாட்களை உயர்வு படுத்தியிருக்கிறான்.அந்த மிகச்சிறந்த நாட்களைத்தான் நாம் அடைய இருக்கிறோம்.

فعَنْ أم المؤمنين عَائِشَةَ رضي الله عنها قالت: (( كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهِ
அதனால் தான் நபி ஸல் அவர்கள்
மற்ற நாட்களில் இல்லாத அளவிற்கு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிகம் {இபாதத்களில்} சிரமத்தை எடுப்பவர்களாக இருந்தார்கள். {முஸ்லிம் ; 1175}

எனவே ரமலானின் முக்கிய அம்சமாக இருக்கிற இந்த கடைசி பகுதியை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.முடிந்த அளவு மற்ற காரியங்களை விட்டு விட்டு முழுக்க முழுக்க வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.குறிப்பாக இரவு வணக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நபி ஸல் அவர்கள் இரவு வணக்கம் குறித்து தன் சமூகத்திற்கு நிறைய ஆர்வமூட்டியிருக்கிறார்கள்.

أخي المسلم، حث النبي على قيام الليل ورغّب فيه، فقال عليه الصلاة والسلام: {عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم، وقربة إلى الله تعالى، ومكفرة للسيئات، ومنهاة عن الإثم،ومطردة للداء عن الجسد }[رواه أحمد والترمذي وصححه الألباني].
இரவு வணக்கத்தை நீங்கள் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கு முன் சென்ற நல்லடியார்களின் பண்பு.அல்லாஹ்வின் அளவில் நெருக்கத்தை ஏற்படுத்தும்.தீய செயல்களை அழித்து விடும். பாவத்தை தடுக்கும் ஆயுதம்.உடலிலிருந்து நோயை விரட்டி விடும். {அஹ்மது}

وقال النبي : { في الجنة غرفة يرى ظاهرها من باطنها، وباطنها من ظاهرها } فقيل: لمن يا رسول الله؟ قال: { لمن أطاب الكلام، وأطعم الطعام، وبات قائماً والناس نيام } [رواه الطبراني والحاكم وصححه الألباني].
சுவனத்திலே ஒரு அறை இருக்கிறது.அதன் உள்ளிருந்து வெளிப் பகுதியையும் வெளியே இருந்து உள் பகுதியையும் பார்க்க முடியும்.அது யாருக்கு கிடைக்கும் என்று நபியிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபியவர்கள், நல்ல பேச்சிக்களை பேசி பிறருக்கு உணவளித்து மக்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குபவருக்கு கிடைக்கும் என்றார்கள். {தப்ரானி}

وقال : { أتاني جبريل فقال: يا محمد، عش ما شئت فإنك ميت، وأحبب من شئت فإنك مفارقه، واعمل ما شئت فإنك مجزي به، واعلم أن شرف المؤمن قيامه بالليل، وعزه استغناؤه عن الناس } [رواه الحاكم والبيهقي وحسنه المنذري والألباني].
ஒரு முஃமினின் உயர்வு இரவு வணக்கமாகும்.அவனது கண்ணியம் மக்களை விட்டும் தேவையற்றிருப்பது. {ஹாகிம்}

وقال : { من قام بعشر آيات لم يُكتب من الغافلين، ومن قام بمائة آية كتب من القانتين، ومن قام بألف آية كتب من المقنطرين } [رواه أبو داود وصححه الألباني]. والمقنطرون هم الذين لهم قنطار من الأجر.
பத்து வசனங்கள் ஓதி தொழுதவர் கவனக்குறைவானவர்களில் எழுதப்பட மாட்டார். 100 வசனங்களை ஓதி தொழுதவர் அல்லாஹ்வுக்கு வழிபடுவர் களில் எழுதப்படுவார்.ஆயிரம் வசனங்களை ஓதி தொழுதவர் முகன்திர்களில் எழுதப்படுவார். {அபூதாவூது}

ஆர்வமூட்டியதோடு மட்டுமின்றி நபி ஸல் அவர்கள் அவ்வாறு வாழ்ந்தும் காட்டினார்கள். 

وعن عائشة رضي الله عنها قالت: { كان النبي يقوم من الليل حتى تتفطر قدماه. فقلت له: لِمَ تصنع هذا يا رسول الله، وقد غُفر لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: أفلا أكون عبداً شكوراً؟ } [متفق عليه].
தன் கால்கள் நீங்குகிற அளவிற்கு நபி ஸல் அவர்கள் இரவு வணக்கத்தில் ஈடுபவர்களாக இருந்தார்கள்.உங்களது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் நிலையில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட போது நான் அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா என்றார்கள். {புகாரி,முஸ்லிம்}

وعن حذيفة قال: { صليت مع النبي ذات ليلة، فافتتح البقرة، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسلاً، إذا مرّ بآية فيها تسبيح سبّح، وإذا مرّ بسؤال سأل، وإذا مر بتعوّذ تعوذ... الحديث } [رواه مسلم
ஒரு சமயம் நான் நபி ஸல் அவர்களோடு தொழுதேன்.பகரா சூராவை ஓத ஆரம்பித்த நபியவர்கள் நிஸா சூரா வரைக்கும் மெதுவாக ஓத வேண்டிய விதத்தில் ஓதினார்கள்.தஸ்பீஹின் வசனம் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள்.துஆவின் இடம் வந்தால் கேட்பார்கள்.பாதுகாப்பு தேட வேண்டிய இடம் வந்தால் பாதுகாப்பு தேடுவார்கள் என ஹுதைஃபா ரலி அவர்கள் கூறுகிறார்கள். {முஸ்லிம்}

وعن ابن مسعود قال: { صليت مع النبي ليلة، فلم يزل قائماً حتى هممت بأمر سوء. قيل: ما هممت؟ قال: هممت أن أجلس وأَدَعَهُ ! } [متفق عليه
இப்னு மஸ்வூது ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; ஒரு முறை நபி ஸல் அவர்களுடன் தொழுதேன்.நான் தீய விஷயத்தை எண்ணும் அளவிற்கு நின்று கொண்டே இருந்தார்கள்.என்ன தீய எண்ணம் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், தொழுகையை முறித்து அமர்ந்து விடலாமா என்று எண்ணினேன் என்றார்கள். {புகாரி}

قال الحسن البصري: ( لم أجد شيئاً من العبادة أشد من الصلاة في جوف الليل ).
இரவுத்தொழகையை விட மிகச்சிறந்த வேறு எந்த வணக்கத்தையும் நான் பெற்றுக் கொள்ள வில்லை என ஹஸனுல் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن الجوزي: واعلم أن السلف كانوا في قيام الليل على  طبقات كثيرة:
الطبقة الأولى: كانوا يحيون كل الليل، وفيهم من كان يصلي الصبح بوضوء العشاء.
الطبقة الثانية: كانوا يقومون شطر الليل.
الطبقة الثالثة: كانوا يقومون ثلث الليل، قال النبي : { أحب الصلاة إلى الله عز وجل صلاة داود؛ كان ينام نصف الليل، ويقوم ثلثه، وينام سُدسه } [متفق عليه].
الطبقة الرابعة: كانوا يقومون سدس الليل أو خمسه.
الطبقة الخامسة: كانوا لا يراعون التقدير، وإنما كان أحدهم يقوم إلى أن يغلبه النوم فينام، فإذا انتبه قام.
الطبقة السادسة: قوم كانوا يصلون من الليل أربع ركعات أو ركعتين

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
முன்னோர்கள் இரவுத்தொழுகை விஷயத்தில் பல நிலைகளில் இருந்தார்கள்.
1, இரவு முழுவதும் நின்று வணங்குவார்கள்.இஷாவின் ஒழுவைக் கொண்டு ஃபஜ்ர் தொழுவார்கள்.
2, இரவில் பாதியை தொழுகையில் கழிப்பார்கள்.
3, இரவின் மூன்றில் ஒரு பகுதியை வணக்கத்தில் கழிப்பார்கள்.
4, இரவின் ஆறில் ஒரு பகுதியை தொழுகைக்காக செலவழிப்பார்கள்.
5, கணக்கு எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.தொழுவார்கள் தூக்கம் வந்தால் தூங்கி விடுவார்கள்.விழிப்பு வந்தால் மறுபடியும் எழுந்து தொழுவார்கள்.

அல்லாமா இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; இரவு வணக்கத்திற்கு நான்கு விஷயங்கள் உதவியாக இருக்கும்.அதில் நான்கு வெளிப்படையானது. நான்கு உள்ரங்கமானது.
ذكر أبو حامد الغزالي أسباباً ظاهرة وأخرى باطنة ميسرة لقيام الليل:
فأما الأسباب الظاهرة فأربعة أمور:
الأول: ألا يكثر الأكل فيكثر الشرب، فيغلبه النوم، ويثقل عليه القيام.
الثاني: ألا يتعب نفسه بالنهار بما لا فائدة فيه.
الثالث: ألا يترك القيلولة بالنهار فإنها تعين على القيام.
الرابع: ألا يرتكب الأوزار بالنهار فيحرم القيام بالليل.
வெளிரங்கமான நான்கு விஷயங்கள் ;
1, உணவை குறைத்துக் கொள்வது.
2, பகலில் பயனில்லாத காரியங்களுக்காக உடலை வறுத்திக் கொள்வது.
3, பகலில் கைலூலா தூக்கம் தூங்குவது.
4, பகலில் பாவங்கள் புரியாமல் இருப்பது.
وأما الأسباب الباطنة فأربعة أمور:
الأول: سلامة القلب عن الحقد على المسلمين، وعن البدع وعن فضول الدنيا.
الثاني: خوف غالب يلزم القلب مع قصر الأمل.
الثالث: أن يعرف فضل قيام الليل.
الرابع: وهو أشرف البواعث: الحب لله، وقوة الإيمان بأنه في قيامه لا يتكلم بحرف إلا وهو مناج ربه.
உள்ரங்கமான நான்கு விஷயங்கள் ;
1, முஸ்லிம்களை குரோதம் கொள்வதை விட்டும் பித்அத்தான காரியங்களை விட்டும் தேவையில்லாத விஷயங்களை விட்டும் உள்ளத்தை பாதுகாப்பது.
2, அச்சம்
3, இரவு வணக்கத்தின் சிறப்பை விளங்குவது
4, அல்லாஹ்வின் நேசம்.

قيام رمضان هو صلاة التراويح التي يؤديها المسلمون في رمضان، وهو من أعظم العبادات التي يتقرب بها العبد إلى ربه في هذا الشهر.قال الحافظ ابن رجب: ( واعلم أن المؤمن يجتمع له في شهر رمضان جهادان لنفسه: جهاد بالنهار على الصيام، وجهاد بالليل على القيام، فمن جمع بين هذين الجهادين وُفِّي أجره بغير حساب
அல்ஹாஃபிழ் இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
ரமலான் மாதத்தில் ஒரு முஃமின் இரு ஜிஹாதை சந்திக்கிறான். 1, பகலில் நோன்பு வைப்பது. 2, இரவில் நின்று வணங்குவது. இந்த இரு ஜிஹாதையும் எவன் மேற்கொள்கிறானோ அவன் கணக்கில்லாமல் நன்மையை சம்பாதிக்க முடியும்.


எனவே நம் நிலையை உயர்த்தக்கூடிய சிறந்த பாக்கியங்களைப் பெற்றுத்தருகிற இரவு வணக்கத்தில் கவனம் செலுத்துவோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

No comments:

Post a Comment