Tuesday, May 23, 2017

தராவீஹ் எட்டாம் நாள்




اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் நிர்வாகம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகை யவர்கள் தான் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன் : 9:18)


ஒரு நகரில் இருக்கிற இடங்களிலேயே மிகச்சிறந்த இடம் அல்லாஹ்வின் இறையில்லங்கள் என்பது ஹதீஸின் கருத்து.மிகச்சிறந்த இடம் என்று மாநபியால் புகழ்ந்து கூறப்பட்ட இறையில்லங்களின் இன்றைய நிலை என்ன என்பதை நாம் பார்ப்போம்.

இன்றைக்கு நம்மில் பலர் இறையில்லம் என்ற கண்ணோட்டத்துடன் பள்ளிவாசல்களைப் பார்க்காமல்  அது ஒரு கட்டிடம் என்ற எண்ணத்துடன் மட்டுமே அவற்றைப் பார்க்கிறோம். ஆகவே தான் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பகரமாக.. சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரிக்கும் அடையாளமாக இன்றைய பள்ளிவாசல்கள் மாறிப்போயின. இது கவலைக்குரிய விஷயம்.

பள்ளிவாசல் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உணர்ச்சிமயமாக இயங்கும் ஆலயமல்ல. சனிக்கிழமை மட்டும் பணிவோடு விழுந்து எழும் வழிபாட்டுத் தலமும் அல்ல.

மாறாக இரவு பகல் எந்நேரமும் செயல்பட வேண்டிய ஒரு கலங்கரை விளக்கு. அப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்கள் இருந்தன. ஆனால் தொழுகையும் பயானும் முடிந்தவுடன் இன்றைய பள்ளிவாசல்கள் பூட்டப்படுவது பெரும் பரிதாபம்.

மஸ்ஜிதுந் நபவி என்று அழைக்கப்படும் அன்றைய மதீனத்துப் பள்ளிவாசல் எவ்வாறெல்லாம் செயல்பட்டது தெரியுமா..?

1) விடுதியுடன் கூடிய முதல் பல்கலைக் கழகம். அங்குதான் அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா எனும் புகழ்பெற்ற திண்ணைத் தோழர்கள் கல்வி கற்றனர்.

2) உடற்பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சி மையம். மல்யுத்தப் போட்டி, குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம், ஆண்களின் ஓட்டப் பந்தயம் முதலான அனைத்துப் போட்டிகளும் அந்தப் பள்ளிவாசல் முற்றத்தில் தான் நடைபெற்றன.

3) பொருளியல் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடம். தொழுகை முடிந்த உடன் மக்களை அழைத்து அன்றாடப் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் நபி (ஸல்) அவர்கள் எடுத்து வைப்பார்கள்.

4) மருந்தகம் (Medical camp). அறப்போரில் கலந்துகொண்ட பல வீரர்களுக்கு அங்கு வைத்துதான் சிகிச்சி அளிக்கப்பட்டுள்ளது.

5) விருந்தினர் இல்லமும் தூதரக அதிகாரிகள் தங்குமிடமும். நபிகளாரை சந்திக்க வரும் வெளிநாட்டுத் தூதுக் குழுக்கள் அங்குதான் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

6) பெண்களின் பள்ளிவாசல் வருகை. பாபுந்நிஸா - பெண்களுக்கான வாசல் என்று பொருள்படும் வாசல் ஒன்று அப்போதும் இப்போதும் அந்தப் பள்ளிவாசலில் இருக்கிறது.

7)நீதிமன்றம். பல தீர்ப்புகள் அங்கு வைத்துத்தான் வழங்கப்பட்டிருக் கின்றன.

இன்னும் பலவகைகளில் அன்றைய பள்ளிவாசல் சமூகத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக இருந்துள்ளது.

ஆனால் இன்று...?

வாரத்திற்கு ஒருமுறை ஜும்ஆ தொழுகையின்போது மட்டுமே பள்ளிவாசல்கள் நிரம்பி வழிகின்றன. ஐவேளைத் தொழுகைக்கு ஆளே இல்லாமல் இறையில்லங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

நபிகளாரின் பள்ளிவாசலைப் போன்று அனைத்துப் பள்ளிவாசல்களும் செயல்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு அதுவே பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பள்ளியைப் பராமரிப்பவர்களையும் சதா நேரமும் அதன் தொடர்பில் இருப்பவர்களையும் நபி ஸல் அவர்களின் பல்வேறு வார்த்தைகளால் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.
ورواه الحافظ أبو بكر البزار ، عن عبد الواحد بن غياث ، عن صالح بن بشير المري ، عن ثابت ، عن أنس قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : إنما عمار المساجد هم أهل الله ثم قال : لا نعلم رواه عن ثابت غير صالح
அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிப்பவர்கள் அல்லாஹ்வின் குடும்பத்தினர். {முஸ்னதுல் பஸ்ஸார்}

وروى الحافظ البهاء في المستقصى ، عن أبيه بسنده إلى أبي أمية الطرسوسي : حدثنا منصور بن صقير ، حدثنا صالح المري ، عن ثابت ، عن أنس مرفوعا : يقول الله : وعزتي وجلالي ، إني لأهم بأهل الأرض عذابا ، فإذا نظرت إلى عمار بيوتي وإلى المتحابين في ، وإلى المستغفرين بالأسحار ، صرفت ذلك عنهم . ثم قال ابن عساكر : حديث غريب
பூமியிலுள்ளவர்களுக்கு வேதனை தர வேண்டும் என்று நான் நாடுவேன். ஆனால் பள்ளியைப் பராமரிப்பவர்கள்,எனக்காக நேசிப்பவர்கள்,சஹர் நேரத்தில் பாவமன்னிப்பு தேடுபவர்கள் ஆகியோரைக் கண்டால் அவர்களின் காரணமாக அந்த வேதனையைத் தடுத்துக் கொள்வேன் என்று அல்லாஹ் கூறுகிறான். {ஷுஃபுல் ஈமான்}

وقال الإمام أحمد : حدثنا روح ، حدثنا سعيد ، عن قتادة ، حدثنا العلاء بن زياد ، عن معاذ بن جبل ؛ أن النبي – صلى الله عليه وسلم – قال : إن الشيطان ذئب الإنسان ، كذئب الغنم يأخذ الشاة القاصية والناحية ، فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد .
وقال عبد الرزاق ، عن معمر ، عن أبي إسحاق ، عن عمرو بن ميمون الأودي قال : أدركت أصحاب النبي – صلى الله عليه وسلم – وهم يقولون : إن المساجد بيوت الله في الأرض ، وإنه حق على الله أن يكرم من زاره فيها 
பள்ளிவாசல்கள் பூமியிலுள்ள அல்லாஹ்வின் இல்லங்கள்.அங்கே வருபவர்களை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்விற்கு அவசியமானது. {சில்சிலா ஸஹீஹா}

إذا رأيتم الرجلَ يعتادُ المسجدَ ، فاشْهَدُوا له بالإيمانِ ، قال اللهُ تعالى : إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ والْيَوْمِ الْآخِرِ

الراوي: أبو سعيد الخدري المحدث: الترمذي       - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 3093
ஒருவர் வழமையாக பள்ளிக்கு வருவதை நீங்கள் கண்டால் அவர் ஈமானுள்ளவர் என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள். {திர்மிதி }

إذا مررتم برياضِ الجنَّةِ فارتَعوا قلتُ: يا رسولَ اللَّهِ ومارياضُ الجنَّةِ ؟ قالَ: المساجِدُ. قلتُ: وما الرَّتعُ يا رسولَ اللَّهِ ؟ قالَ: سبحانَ اللَّهِ والحمدُ للَّهِ ولا إلَهَ إلَّا اللَّهُ واللهُ أكبرُ

الراوي: أبو هريرة المحدث: الترمذي     - المصدر: سنن الترمذي -الصفحة أو الرقم: 3509

சுவனத்தை தோட்டங்களை நீங்கள் கடந்து சென்றால் அதில் மேய்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் சொன்ன போது, சுவனத்தின் தோட்டங்கள் எது என்று கேட்கப்பட்டது.அது இறையில்லங்கள் என்றார்கள். {திர்மிதி}

عن أبي أمامة – رضي الله عنه – قال : قال رسول الله – صلى الله عليه وسلم : ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفي ، وإن مات أدخله الله الجنة : من دخل بيته فسلَم , فهو ضامن على الله , ومن خرج إلى المسجد فهو ضامن على الله , ومن خرج في سبيل الله فهو ضامن على الله ) رواه ( د , حب ) [ صحيح الترغيب والترهيب رقم 316 ] .
மூன்று நபர்கள் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்கள்.அவர் ஹயாத்தாக இருந்தால் அல்லாஹ் அவருக்கு ரிஜ்கை வழங்குகிறான். அவர் மரணித்து விட்டால் அவருக்கு சுவனத்தை தருகிறான்.அதில் ஒருவர் பள்ளியை நோக்கி வெளியேறியவர்.{தர்கீப் வத்தர்ஹீப்} 

وأخرج الإمام أحمد رضي الله عنه عن أبي هريرةرضوان الله عليه عن النبي صلى الله عليه وسلم قال {

إن للمساجد أوتادا الملائكة جلساؤهم ، إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في حاجة أعانوهم } . 

இறையில்லத்திற்கென முளைக்கம்புகள் இருக்கின்றன. {எவர்கள் இறை யில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோ அவர்கள்} அவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.பள்ளியில் அவர்களை காணவில்லை என்றால்வானவர்கள் தேடுகின்றனர். மேலும்,அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின் றனர்” ( நூல்: அஹ்மத் )

وأخرج الإمام أحمد أيضا عن معاذ بن جبل رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال إن الشيطان ذئب الإنسان كذئب الغنم ، يأخذ الشاة القاصية والناحية ، فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد }
ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போன்றுமனிதனை வேட்டையாடும் ஓநாய் ஷைத்தான் ஆவான். மந்தையை விட்டும் தனித்திருக்கிற ஆட்டையே ஓநாய் பிடித்துக் கொள்கின்றது. அது போன்றே ஷைத்தானும் ஆவான். ஆகவேதனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்கூட்டாக இருப்பது,பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது,இறையில்லத்தில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்” என நபி {ஸல்}அவர்கள் கூறினார்கள். (நூல்:அஹ்மத்)

இத்தகைய சிறப்புகளைப் பெற்றுத்தருகிற அந்த இறையில்லங்களோடு நம் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.


1 comment: