Wednesday, May 24, 2017

ரமலானும் நாமும்



புனிதனம் நிறைந்த பாக்கியம் பொருந்திய அருள் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த மாதம் கிடைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள், நம்மையும் துஆ செய்யும் படி தூண்டிய மாதம்.


கிடைப்பதற்கரிய பொக்கிஷமான பாக்கியம் நிறைந்த அந்த மாதத்தை இன்ஷா அல்லாஹ் அடைய இருக்கிறோம்.அதிலுள்ள ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானவை, பொக்கிஷமான வை.ஒரு சுன்னத் தொழுதால் ஒரு ஃபர்ளின் நன்மையும் ஒரு ஃபர்ளு தொழுதால் 70 ஃபர்ளுகள் தொழுத நன்மையும் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட மிகச்சிறந்த மாதம். நாம் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிலுள்ள எந்த நேரத்தையும் எந்த வகையிலும் வீணடித்து விடக்கூடாது.

முதலில் இந்த மாதத்தினுடைய சிறப்பை நாம் விளங்க வேண்டும். பொதுவாக ஒரு பொருளின் தரம் என்னன்னு தெரிந்தால் அதன் மீது ஒரு மரியாதை வரும்,அதை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும், வீணடித்து விடக் கூடாது என்ற எண்ணம் வரும்.

தங்கத்தின் மதிப்பை  பணத்தின் மதிப்பை  நிலத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம்.அதனால் தான் அதன் மீது மரியாதையும் பற்றும் ஏறபடுகிறது.மதிப்பை விளங்க வில்லையெனில் அதன் மீது ஒரு பற்று ஏற்பட வாய்ப்பில்லை.

 سمِعتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ذاتَ يومٍ وأهلَّ رمضانُ ، فقال : لو يعلمُ العِبادُ ما رمضانُ لتمنَّت أمَّتي أن تكونَ السَّنةُ كلُّها  
الراوي: أبو مسعود الغفاري المحدث: البيهقيالمصدر: شعب الإيمان - الصفحة أو الرقم: 3/1340
என் உம்மத்துகள் ரமலானில் உள்ள மகிமையை உண்மையாக விளங்கி விட்டால் வருடம் முழுக்க ரமலானாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார்கள். {ஷுஃபுல் ஈமான்}

قال ابو امامة : يا رسولَ اللهِ ! مُرْني بأمرٍ ينفعني اللهُ بهِ ، قال : عليك بالصيامِ فإنَّهُ لا مثلَ لهُ ، قال : فكان أبو أمامةَلا يلقى إلا صائمًا هو وامرأتُهُ وخادمُهُ ، فإذا رُئِيَ في دارِهِ دخانٌ بالنهارِ قيل : اعتراهم ضيفٌ.
எனக்கு பயனளிக்கும் ஒரு அமலைக் கற்றுத்தாருங்கள் என்று அபூஉமாமா ரலி அவர்கள் கேட்ட போது நோன்பை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.அதைப்போன்று வேறு அமல் இல்லை என்று கூறினார்கள். {சுன்னுல் குப்ரா லில் பைஹகி}

كلُّ حسنةٍ يعمَلُها ابنُ آدَمَ بعشْرِ حسناتٍ إلى سبعِمئةِ ضِعفٍ يقولُ اللهُ: إلَّا الصَّومَ فهو لي وأنا أجزي به يدَعُ الطَّعامَ مِن أجلي والشَّرابَ مِن أجلي وشهوتَه مِن أجلي وأناأجزي به وللصَّائمِ فرحتانِ: فرحةٌ حينَ يُفطِرُ وفرحةٌ حينَ يلقى ربَّه ولَخُلوفُ فمِ الصَّائمِ حينَ يخلُفُ مِن الطَّعامِ أطيبُ عندَ اللهِ مِن ريحِ المِسكِ
மனிதன் செய்யக்கூடிய எல்லா அமல்களுக்கும் பத்து முதல் 700 மடங்கு வரை கூலு கொடுக்கப்படுகிறது.ஆனால் நோன்பைத் தவிர...... {ஸஹீஹு இப்னு ஹிப்பான் 3424}

فهو لي தொழுகை,ஜகாத்,ஹஜ் போன்ற எல்லா அமல்களும் இக்லாஸுடனும் இக்லாஸ் இல்லாமலும் செய்யலாம்,.ஆனால் நோன்பு இக்லாஸ் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். 24 மணி நேரமும் எல்லாரும் நம்மைப் பாத்துக்கொண்டே இருப்பதில்ல.நாம் நினைத்தால் யாருக்கும் தெரியாமல் சாப்பிடலாம்.இருந்தால் உண்ணாமல் பருகாமல் இருக்கிறோம்.

وانا اجزي به  மற்ற அமல்களுக்கெல்லாம் மலக்குகளின் மூலம் கூலியை எழுதுகிறான், கொடுக்கிறான்.இதற்கு அல்லாஹ்வே கூலி கொடுக்கிறான். இன்னொறு கருத்தின் படி அவனே கூலியாகி விடுகிறான்.

يلقي ربه இறைவனின் சந்திப்பு என்பது சாதாரன விஷயமல்ல.அல்லாஹ்வை பார்த்தல் என்பது உலகத்திலேயே ஈடு இணையற்ற இன்பம்.அதற்கு நிகராக வேறெந்த இன்பமும் உலகிலும் இல்லை,மறுமையிலும் இல்லை.

قال الحسن: «إذا تجلى لأهل الجنة نسوا كل نعيم الجنة
சுவனவாசிகளுக்கு இறைவனின் தரிசனம் கிடைத்து விட்டால் மற்ற சுவனத்தின் அனைத்து இன்பங்களையும் மறந்து விடுவார்கள்.

அல்லாஹ்வைப் பார்க்கும் இன்பம் உலகமே கிடைத்ததைப் போன்று.சுவனத்தின் மற்ற இன்பங்கள் அந்த உலகத்தில் ஒரு சிறு சிட்டுக்குருவியைப் போன்று என்று கூறுவார்கள். 

لخلوف   மூஸா நபி அல்லாஹ்விடம் உறையாடுவதற்கு முன்பு 30 நாட்கள் நோன்பு வைக்கும்படி அல்லாஹ் சொன்னான்.நோன்பு வைத்த நபயவர்கள் அல்லாஹ்வை சந்திக்கப்போகிறோம்,அந்த நேரத்தில் துர்வாடை எதுவும் வந்து விடக்கூடாது என்றெண்ணி மிஸ்வாக் செய்து விட்டு சென்றார்கள்.அதனைப் பார்த்த அல்லாஹ் மறுபடியும் 10 நாட்கள் நோன்பு வைக்கும்படி கூறினான்.

மார்க்கத்தில் ஷஹாதத் என்பது மிக உயர்ந்த அந்தஸ்து.அதற்கு கிடைக்கும் பாக்கியங்களும் நன்மைகளும் அதிகம்.ஆனால் நோன்பாளி அதை விட சிறந்த நன்மைகளை பெற்று விடுவார்.

أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم ، وكان إسلامهما جميعا ، وكان أحدهما أشد اجتهادا من صاحبه ، فغزا المجتهد منهما ، فاستشهد ، ثم مكث الآخر بعده سنة ، ثم توفي ، قال طلحة : فرأيت فيما يرى النائم ، كأني عند باب الجنة : إذا أنا بهما ، وقد خرج خارج من الجنة ، فأذن للذي توفي الآخر منهما ، ثم خرج ، فأذن للذي استشهد ، ثم رجعا إلي ، فقالا لي : ارجع . فإنه لم يأنِ لك بعد ، فأصبح طلحة يحدث به الناس ، فعجبوا لذلك ، فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم ، فقال : " من أي ذلك تعجبون ؟ " قالوا : يا رسول الله ! هذا كان أشد اجتهادا ، ثم استشهد في سبيل الله ، ودخل هذا الجنة قبله
فقال : " أليس قد مكث هذا بعده سنة ؟ " قالوا : بلى . " وأدرك رمضان ، فصامه " قالوا : بلى . " وصلى كذا وكذا سجدة في السَّنَة
قالوا : بلى . قال رسول الله صلى الله عليه وسلم : " فلما بينهما أبعد مما بين السماء والأرض " .
இரண்டு நபர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றார்கள்.அதில் ஒருவர் ஷஹீதானார்.மற்றொருவர் ஒரு வருடம் கழித்து இயற்கை மரணம் எய்தினார்.அவர்களைக் கனவில் கண்ட தல்ஹா ரலி அவர்கள்,அதில் இயற்கை மரணம் எய்தியவர் முதலில் சுவனம் நுழைவதாக கண்டார்கள்.நபியிடம் அதற்கான விளக்கம் கேட்ட போது இவர் அவரை விட ஒரு ரமலானை அதிகமாக பெற்று அமல் செய்திருக்கிறார்.இரண்டு பேருக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் வானம் பூமிக்கிடையில் உள்ள வித்தியாசம் என்றார்கள். {முஸ்னது அஹ்மது 2/370}

أن النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ آخَى بينَ رجلينِ فقُتِلَ أحدُهما في سبيلِ اللهِ ثم مات الآخرُ بعدَه بجمعةٍ أو نحوَها فصلوا عليه فقال النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ ما قلتم؟ قالوا دعونا اللهَ أن يغفرَ له ويرحمَه ويلحِقَه بصاحبِه فقال النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فأين صلاتُه بعدَ صلاتِه وعملُه بعدَ عمَلِه أو قال صيامُه بعدُ صيامِه؟ لما بينَهما أبعدُ مما بين السماءِ والأرضِ
ஒரு வார இடைவெளியில் மரணத்தை தழுவினார் என்ற ஒரு ரிவாயத்தும் உண்டு.{மிஷ்காத்}

இன்னைக்கி நாம அமல் செய்றது நல்ல காரியங்கள் செய்றது எல்லாமே சொர்க்கம் கிடைக்கும் என்ற ஆசையில் தான்.       எல்லோருமே சொர்க்கத்தைத் தேடுகிறோம். ஆனால் சொர்க்கமே சிலரைத் தேடுகிறது.
الجنة مشتاقة إلى أربعة نفر: تالي القرآن,
وحافظ اللِّسان, ومُطعِم الجيعان, والصائمين في شهر رمضان

இப்படி எண்ணற்ற மேன்மைகளும் சிறப்புக்களும் உண்டு.

எல்லா வற்றிற்கும் மேலாக நம்மை அது பக்குவப்படுத்து கிறது.பொதுவாக நம் உள்ளம் நன்மையின் பக்கம் போகாது. பாவமான ஹராமான தடுக்கப்பட்ட விஷயங்களைத்தான் தேடும் நாடும். அதைப் பக்குவப்படுத்த வேண்டும்.அந்த ஆற்றல் நோன்புக்குத்தான் இருக்கிறது.

فعندما خلق الله اليد سألها : من أنا ومن أنت؟؟؟ فقالت أنا أنا وأنت ربي.
وخلق القدم وسألها نفس السؤال وكان جوابها:أنا أنا وأنت ربي.
وكان جواب جميع أعضاء الجسد واحد
أي أنا أنا وأنت ربي.
وهكذا إلى أن دبت الروح بكافة أنحاء جسد آدم.............
وعندما خلق الله النفس البشرية سألها السؤال نفسه من أنا ومن أنت؟
فكان جوابها: أنا أنا وأنت أنت
وكرر الله السؤال عليها فكان جوابها نفسه!!
فأمر عزوجل بتعذيبها لمدة مئة عام
وعندما عادت سألها السؤال ذاته وكان جوابها نفسه أنا أنا وأنت أنت.
ولأنه تعالى خلقها ويعرف نقطة ضعفها أمر بتجويعها وحرمانها من الطعام لمدة مئة عام
وعندما عادت سألها تعالى من أنت ومن أنا ؟؟؟؟؟
فكان الجواب المنتظر:
أنا أنا وأنت ربي.
நஃப்ஸை படைத்து அல்லாஹ் நான் யார்? நீ யார்? என்று கேட்ட போது நான் நான் தான். நீ நீ தான் என்றது.100 வருடம் நெருப்பில் போட்டு வேதனைப் படுத்திய பிறகு மறுபடியும் கேட்ட போதும் அதே பதிலைத்தந்தது.பின்பு 100 வருடம் பட்டியில் போட்டு வாட்டிய பிறகு கேட்டான்.அப்போது தான் நான் நான். நீ என்னைப் படைத்த இறைவன் என்று சொன்னது.

அதற்கு முன்பு ரமலானின் சட்டங்கள்
يجب الصوم لكل مسلم عاقل بالغ رجلا كان امراة
முஸ்லிமான அறிவுள்ள பருவ வயதை அடைந்த ஆண் பெண் அனைவர் மீதும் நோன்பு கடமை.

சலுகை அளிக்கப்பட்டவர்கள்

1, கஸ்ரின் தொலை தூரம் பயணிப்பவர் 2, நோயாளி இவர்கள் இருவரும் சலுகை அளிக்கப்பட்டிருந்தாலும் நோன்பு வைப்பது சிறந்தது. 3, மாதவிலக்குள்ள பெண்கள். இவர்கள் நோன்பு வைப்பது கூடாது. 4, குழந்தையை சுமப்பவள் 5, பால் கொடுப்பவள்.இவ்விருவரும் தன் குழந்தையின் மீது பயந்தால் நோன்பை விட்டுக்கொள்ளலாம்.

இந்த ஐந்து சாராரும் ரமலான் முடிந்த பிறகு விட்ட நோன்புகளை களா செய்ய வேண்டும்.

6, வயதானவர். 7, நீங்க முடியாத நோயுடையவர். இவர்கள் ஃபித்யா கொடுக்க வேண்டும்.

அந்த ரமலானை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்.அதில் நம் காரியங்களை எப்படி ஆக்கிக் கொள்ள வேண்டும்.எப்படி இருந்தால் நாம் ரமலானை முழுமையாக பயன்படுத்தியவர்களாக ஆக முடியும் என்று யோசிக்க வேண்டும்.

நோன்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்
1, நோன்பின் வருகை குறித்து சந்தோசப்பட வேண்டும்.இந்த மகிழ்ச்சி ஈமானின் அடையாளம்.
2, நோன்பு கிடைத்ததற்காக அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்ய வேண்டும்.
3, நோன்பை வைக்க வேண்டிய விதத்தில் வைக்க வேண்டும்.
நோன்பாளிகள் மூன்று வகை
1, நோன்பு வந்தால் கவலை
2, கடமைக்காக சமூகத்திற்காக வைப்பது
3, ஈடுபாட்டோடு வைப்பது.

من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

ஈடுபாட்டோடு அதில் ஒரு ஆர்வத்தோடு பிடித்தால் தான் அதன் முழு பலனையும் அடைந்து கொள்ள வேண்டும்.

மட்டுமல்ல சாப்பிடாமலும் குடிக்காமலும் இருப்பது மட்டும் நோன்பல்ல. செய்யக்கூடாத விஷயங்களை செய்யாமலும் இருக்க வேண்டும்.
والإمام الغزالي رحمه الله تعالى يقول

الصيام ثلاث درجات : صيام العوام - صيام الخواص - صيام خواص الخواص , فما الفرق بينهما ؟
1- صوم العوام : هو الإمساك عن الأكل و الشرب و الجماع و غيرها من المفطرات.

2- بينما صوم الخواص: فهو يزيد على ذلك الإمساك صوم الأعضاء و الجوارح و الحواس الظاهرة عن المنهيات الشرعية ، فتصوم العين عن المحرمات و يغض النظر إلى ما حرم الله عليه في القرآن و السنة، ويصوم السمع عن استماع الغيبة والنميمة والبهتان، ويصوم اللسان عن الغيبة والافتراء و الفحش وسوء الكلام وأمثالها ، وتصوم اليد عن البطش بغير حق، والرجل عن السعي إلى مجالس اللهو واللعب وغيرها من المحافل غير المشروعة .

3- وصوم خواص الخواص: يزيد على ما ذكر من صوم العوام والخواص، صوم القلب عن غير ذكر الله تعالى وعن الرذائل الأخلاقية من البخل والجبن، والغل والحقد والحسد والبغضاء والشحناء وما إلى ذلك.
இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நோன்பின் படித்தரங்கள் மூன்று
1, உண்ணாமல் பருகாமல் இருப்பது
2, உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டும் தடுத்துக் கொள்வது
3, அல்லாஹ்வைத்தவிர மற்ற சிந்தனைகளை உள்ளத்தை விட்டும் நீக்குவது.

இதில் மூன்றாவது நிலையில் இருக்க முடியா விட்டாலும் இரண்டாவது நிலையையாவது கடைபிடிக்க வேண்டும்.அப்போது தான் நோன்பு முழுமை பெறும்.

قال عمر بن الخطاب: ليس الصيام من الشراب والطعام وحده، ولكنه من الكذب والباطل واللغو
ஹள்ரத் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; உண்ணாமல் பருகாமல் இருப்பது மட்டும் நோன்பல்ல.பொய், ஆகுமாகாதது, வீணானவைகளை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.

وقال جابر بن عبد الله الأنصاري: إذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن الكذب، والمأثم، ودع أذى الخادم، وليكن عليك وقار وسكينة يوم صومك ولا تجعل يوم فطرك ويوم صومك سواء
ஜாபிர் பின் அப்துல்லா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; வயிறு மட்டுமல்ல உடல் உறுப்புக்கள் அனைத்தும் நோன்பிருக்க வேண்டும்

رُبَّ صائمٍ ليس له من صيامِه إلا الجوعُ ، و رُبَّ قائمٍ ليس له من قيامِه إلا السَّهرُ
எத்தனையோ நோன்பாளிகளுக்கு பசித்திருப்பதைத்தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை.{ஸஹீஹுல் ஜாமிவு ; 3488}


No comments:

Post a Comment