Sunday, May 28, 2017

தராவீஹ் 21 ம் நாள்



إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا (8) لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
{நபியே!} நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் சுபச்செய்தி சொல்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம்.

{முஃமின்களே!} நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு அவனது தூதருக்கு கண்ணியமளித்து காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிப்பதற்காக. {தூதரை அனுப்பினோம்}{48 ; 8,9}

நபியின் மரியாதை என்ன நபியின் கண்ணியம் என்ன அல்லாஹ்விடம் நபியின் ஸ்தானம் என்ன என்பதை இவ்வசனம் நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

وكلام المفسرين حول هذه الآية الكريمة، يكشف لنا أن الآية مستقيمة في تركيبها، وصحيحة في معناها؛ وذلك أن الضمائر في قوله تعالى: {وتعزروه وتوقروه} تعود إلى الرسول صلى الله عليه وسلم؛ فيكون معنى قوله سبحانه: {وتعزروه} أي: تعظموه وتكبروه، كما قال ابن عباس رضي الله عنهما؛ وقال قتادة معناه: تنصروه بالجهاد معه، والدعوة إلى شريعته؛ ويكون معنى {وتوقروه} من التوقير: وهو الاحترام والإجلال والإعظام. والآية على هذا تأمر المسلمين باحترام الرسول وتعظيمه باتباع ما أمر به، والنهي عما نهى عنه. 

أما الضمير في قوله تعالى: {وتسبحوه} فيعود إلى الله تعالى، أي: تسبحون الله بكرة وأصيلاً، يعني: أول النهار وآخره. 
இதற்கு பல விதமான தஃப்ஸீர்கள் உண்டு. 1, இதிலுள்ள எல்லா ضمير  களும் அல்லாஹ்வைப் பார்த்தே மீளுகிறது. 2, எல்லாம் ரசூலைப்பார்த்து மீளுகின்றது. 3, அதில் ஒன்று அல்லாஹ்வின் அளவிலும் மற்றொன்று ரசூலின் அளவிலும் மீளுகிறது.

இந்த மூன்றாவது கருத்தின் படி அதன் பொருள் ; 
வல்லோன் அல்லாஹ் வள்ளல் நபியின் வருகை குறித்து பேசுகிறான். இங்கே நபியின் வருகைக்கு அல்லாஹ் மூன்று காரணங்களைக் கூறுகிறான்.
1,அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொள்வது.
2, நபிக்கு மரியாதையளிப்பது
3, அல்லாஹ்வை துதிப்பது.

இப்படி ஒரே இடத்தில் வரும் இரு ضمير   களில் ஒன்று அல்லாஹ்வையும் மற்றொன்று ரசூலையும் பார்த்து மீளுவது சாத்தியம் தான்.

ومن الجائز في لغة القرآن أن يكون بعض الكلام راجعًا إلى الله تعالى، وبعضه راجعًا إلى رسوله صلى الله عليه وسلم، ولهذا أمثلة، قال تعالى: {ومن يطع الله ورسوله ويخش الله ويتقه فأولئك هم الفائزون} (النور:52)، فالطاعة لله ولرسوله، والخشية والتقوى لله وحده.
நூர் என்ற அத்தியாயத்தின் 52 வது வசனத்தில் வழிப்படுதல் என்ற வார்த்தை அல்லாஹ் மற்றும் ரசூலின் பக்கம் மீளுகிறது.அச்சம் என்பது அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறது.

மேல் கூறப்பட்ட வசனத்தில் வணக்கத்தை விட நபியின் மரியாதையை முதன்மைப்படுத்துகிறான்.அதாவது முதலாவது ஈமானை சொல்லி விட்டு அடுத்து நபியின் கண்ணியத்தை கூறி விட்டு அதற்கடுத்துத்தான் வணக்கத்தை பதிவு செய்திருக்கிறான்.

எனவே வணக்கத்தை விட நபியின் கண்ணியம் நம் உள்ளத்தில் ஆழப்பதிய வேண்டும்.என்ன தான் வணங்கினாலும் தொழுதாலும் நபியின் கண்ணியத்தை நாம் உணர வில்லையெனில் அந்த வணக்கங்கள் பயனற்றுப் போய் விடும் என்பதை இந்த வசனத்தின் வழியே அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான். 

وَحَدَّثَنِى حَرْمَلَةُ بْنُ يَحْيَى وَأَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِىُّ قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِى أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَالضَّحَّاكُ الْهَمْدَانِىُّ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقْسِمُ قَسْمًا أَتَاهُ ذُو الْخُوَيْصِرَةِ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِى تَمِيمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ. قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ أَعْدِلْ قَدْ خِبْتَ وَخَسِرْتَ إِنْ لَمْ أَعْدِلْ ». فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنه يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِى فِيهِ أَضْرِبْ عُنُقَهُ. قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ [مسلم]

நபி ஸல் அவர்கள் ஒரு பொருளை ஸஹாபாக்களுக்கு மத்தியில் பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த சபையில் இருந்த துல் ஹுவைஸிரா என்பவன் நபியைப் பார்த்து நீதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினான்.அதனைக் கேட்ட உமர் வாளை உறுவி நபியே அனுமதி கொடுங்கள் அவனைக் கொன்று விடுகிறேன் என்று சொன்ன போது, உமரே விட்டு விடுங்கள்.இவனைப் போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் உங்கள் தொழுகை நோன்புகளை அவர்களது தொழுகை நோன்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் வணக்கங்கள் மிகக் குறைவாக தெரியும்.அந்தளவு அவர்களது வணக்கம் அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் குர்ஆன் ஓதினால் அது அவர்களது தொண்டைக் குழியைக் கூட கடந்து செல்லாது.வில்லை விட்டு அம்பு வேகமாக வெளியேறுவதைப் போன்று இவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் என்றார்கள். {முஸ்லிம்}

ஸஹாபாக்கள் அவர்களது வணக்கங்களை ஒப்பீடு செய்து பார்த்தால் தங்களது வணக்கங்களை மிக அரப்பமாக கருதும் அளவுக்கு அந்த மனிதர்கள் வணங்குவார்கள்.என்றாலும் நபியின் கண்ணியம் அவர்களின் உள்ளத்தில் இடம் பெறாத காரணத்தினால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்.

இன்றைக்கு நாம் தொழுகிறோம்,வணங்குகிறோம்,எல்லாம் செய்கிறோம். ஆனால் நபியின் மீது கண்ணியமும் மரியாதையும் நம் உள்ளத்தில் எந்தளவு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக் கிறோம்.

அதே சமயம் வணக்கங்கள் குறைவாக இருந்தாலும் நபியின் கண்ணியமும் அவர்களின் மீது பிரியமும் நம்மிடம் இருந்தால் நாம் உயர்ந்த நிலையை அடைந்து கொள்ள முடியும்.

جاء أعرابيٌّ إلى النَّبيِّ صلَّى اللَّهُ عليه وسلَّم فقال يا رسولَ اللهِ متى السَّاعةُ؟ فلم يُجِبْه حتَّى صلَّى ثُمَّ دعا فوجَده في دارٍ من دُورِ الأنصارِ فقال له لِمَ سأَلْتَ عن السَّاعةِ؟ قال أحبَبْتُ أن أعلمَ متى هي قال ما أعدَدْتَ لها قال ما أعدَدْتُ لها كبيرَ صلاةٍ ولا صيامٍ ولا صدقةٍ ولكنِّي أُحِبُّ اللهَ ورسولَه قال فأنتَ مع مَن أحبَبْتَ

கியாமத் எப்போது வரும் என்று கேட்ட ஒரு ஸஹாபியிடம் அதற்காக என்ன தயாரிப்பு இருக்கிறது என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.        அதற்கவர், என்னிடம் அதிகளவு தொழுகையோ நோன்போ  ஸதகாவோ இல்லை.இருந்தாலும் நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறான் என்றார்.அப்போது நபி ஸல் அவர்கள் நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் இருப்பாய் என்றார்கள். {மஜ்மவுஸ் ஸவாயிது ; 10/284}

எனவே நபியின் மீது கண்ணியமும் மரியாதையும் பிரியமும் தான் நமக்கு மிக முக்கியம்.நம்மிடம் இவை வந்து விட்டால்அதுவே நம் வெற்றிக்கு காரணமாக அமைந்து விடும்.

அண்ணல் நபியின் மீது மரியாதையும் கண்ணியமும் நம்மிடம் வர வேண்டும் என்றால் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தை யும் உயர்வையும் நாம் புரிய வேண்டும்.

அல்லாஹுத்தஆலா அண்ணல் நபி ஸல் அவர்களுக்கு வழங்கிய கண்ணியத்தைப் போன்று மகத்துவங்களைப் போன்று உலகில் வேறு யாருக்கும் வழங்க வில்லை இனியும் வழங்கப்போவதில்லை.

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
பெரும்பாலான தஃப்ஸீர்களில் இந்த வசனத்திற்கு اذا ذكرت ذكرت معي நான் நினைவு கூறப்படும் இடமெல்லாம் நீங்களும் நினைவு கூறப்படுவீர்கள் என்று இமாம்கள் எழுதியிருக்கிறார்கள்.

عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: لما فرغت مما أمرني الله تعالى به من أمر السموات والارض قلت: يا رب إنه لم يكن نبي قبلي إلا قد كرمته، جعلت إبراهيم خليلا، وموسى كليما، وسخرت لداود الجبال، ولسليمان الريح والشياطين، وأحييت لعيسى الموتى، فما جعلت لي ؟ قال: أو ليس قد أعطيتك أفضل من ذلك كله، أن لا أذكر إلا ذكرت معي، وجعلت صدور أمتك أناجيل يقرؤن القرآن ظاهرا ولم أعطها أمة، وأنزلت عليك كلمة من كنوز عرشي: لا حول ولا قوة إلا بالله.[البداية والنهاية]
நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் ; யா அல்லாஹ் எனக்கு வந்த எல்லா நபியையும் எதோ ஒரு வகையில் நீ கண்ணியப்படுத்தி இருக்கிறாய்.எனக்கு என்ன செய்திருக்கிறாய் என்று கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்ததை விட மிகச்சிறந்த ஒரு கண்ணியத்தை உங்களுக்கு வழங்க வில்லையா என்று கேட்டான்.அது என்னவென்று கேட்ட போது என் பெயர் கூறப்படும் இடங்களிலெல்லாம் உங்கள் பெயரும் இணைத்து கூறப்படும் என்று அல்லாஹ் கூறினான். {அல்பிதாயா வன் நிஹாயா}

கலிமா, தஷஹ்ஹுத், பாங்கு, இகாமத், துஆ, குத்பா என எங்கெல்லாம் அல்லாஹ்வின் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அல்லாஹ் வின் தூதரின் பெயரும் உச்சரிக்கப்படுகிறது.இது ரசூலுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் அருட்பெருகளில் ஒன்று.

لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا
உங்களில் சிலர் சிலரை அழைப்பதைப் போன்று ரசூலை நீங்கள் அழைக்க வேண்டாம். {24 ; 63}

அதாவது நபியை அழைக்கும் போது யா முஹம்மது என்று நபியின் பெயர் கூறி அழைப்பது கூடாது யாரசூலல்லாஹ் யா நபியல்லாஹ் என்று தான் அழைக்க வேண்டும்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நபியோடு எப்படி நடக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத்தருகிறானோ அதே ஒழுக்கத்தை அவனும் கடை பிடிக்கிறான்.குர்ஆனில் பல நபிமார்களை பெயர் கூறி அழைக்கும் அல்லாஹ் எந்த இடத்திலும் நபியை பெயர் கூறி அழைக்க வில்லை. குர்ஆனில் நான்கு இடங்களில் தான் நபியின் பெயரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதிலும் அவர்களது சிறப்புப் பெயரை சேர்த்தே தான் கூறுகிறான்.அதுவும் அழைப்பு தொணியில் கூற வில்லை.இது நபி ஸல் அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் கண்ணியம்.


No comments:

Post a Comment