{நபியே!} உம்மிடம்
என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகில்
இருக்கிறேன்.என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன்.எனவே
அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக ஆகுவதற்கு {என் கட்டளைகளை ஏற்று} எனக்கு அவர்கள்
வழிபட்டு என்னை ஈமான் கொள்ளட்டும் {என்று கூறுங்கள்} {2 ; 186}
عن الصلب بن حكيم بن معاوية بن حيدة القشيري
، عن أبيه ، عن جده ، أن أعرابيا قال : يا رسول الله ، أقريب ربنا فنناجيه أم بعيد
فنناديه ؟ فسكت النبي صلى الله عليه وسلم ، فأنزل الله( ابن كثير )
ஒரு கிரமாப் புறத்து
வாலிபர் ஒருவர், நபியிடம் வந்து நம்மைப் படைத்த இறைவன் அருகில் இருக்கிறானா? அல்லது தூரத்தில் இருக்கிறானா? அருகில் இருந்தால்
அவனிடம் இரகசியமாகப் பேசுவோம்.தூரத்தில் இருந்தால் அவனை சப்தமாக அழைப்போம் என்று
கேட்டார்.அப்போது நபி ஸல் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் அப்போது இந்த வசனம்
அருளப்பட்டது. {இப்னு கசீர்}
وروى الكلبي عن أبي صالح عن ابن عباس قال
: قالت اليهود كيف يسمع ربنا دعاءنا ، وأنت تزعم أن بيننا وبين السماء خمسمائة عام
، وغلظ كل سماء مثل ذلك ؟ فنزلت هذه الآية (قرطبي)
வானத்திற்கும் நமக்கும்
மத்தியில் 500 வருட தொலை தூரம் இருக்கிறது.இதே அளவு தொலை தூரத்தில் தான் ஏழு
வானங்களும் இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.இவ்வளவு தொலை தூரத்தில் இருக்கும்
இறைவனால் நம் அழைப்பை எப்படி கேட்க முடியும் என்று யூதர்கள் கேட்டார்கள்.அப்போது
இந்த வசனம் அருளப்பட்டது. {குர்துபி}
இந்த வசனம் பிரார்த்தனை குறித்து
பேசுகிறது.பிரார்த்தனை என்பது மனித சமூகத்திற்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய
வரப்பிரசாதம் எனலாம். காரணம், இதன் மூலம் மனதை வறுத்தும் பாவச் சுமைகளை இறக்கி
வைக்கலாம்,உற்ற நண்பனிடம் கூறுவதைப் போல மனக்கஷ்டங்களை எல்லாம் தடையின்றி
கூறலாம்,பரிகாரம் காணலாம்,எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறலாம்.ஆயுளைக்
கேட்கலாம்,அதிகாரத்தைக் கேட்கலாம்,ஆரோக்கியத்தைக் கேட்கலாம், பொருளாதாரத்தைக்
கேட்கலாம்,ஏன் காரும்,பங்கலாவும் கூட கேட்கலாம்.
“பிராத்தனை என்பது மனிதனுக்குக் கிடைத்த
மிகப்பெரிய சாதனம்” என்ற
வார்த்தைகளும் நபிமொழியில் காணக் கிடைக்கிறது. நாம் பிரார்த்தனை யின் மூலம்
எதையும் சாதித்து விடலாம்,எந்த இலட்சியத்தையும் எட்டி விடலாம். எல்லா
மனக்குறைகளையும் அகற்றி, எல்லா சஞ்சலங்களை யும் நீக்கி, நம் வாழ்வில்
புத்துணர்வைத்தரும் ஓர் சாதனமாக பிரார்த்தனை அமைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்த ரமலான் மாதம்
பிரார்த்தனை கேட்பதற்கு மிகச்சிறந்த ஏற்றமான மாதம்.கேட்கப்படும் பிரார்த்தனைகள்
தங்கு தடியின்றி அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத் தட்டும் மிக உயர்ந்த மாதம். அதனை
உணர்த்தும் விதமாகத்தான் அல்லாஹுத்தஆலா இந்த பகரா சூராவில் நோன்பைப் பற்றி கூறி
விட்டு அதற்கு அடுத்த வசனமாக பிரார்த்தனை குறித்த இந்த வசனத்தை பதிவு
செய்திருக்கிறான்.
وفي مسند الإمام أحمد ، وسنن الترمذي ،
والنسائي ، وابن ماجه ، عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم
:" ثلاثة لا ترد دعوتهم : الإمام العادل ، والصائم حتى يفطر ، ودعوة المظلوم يرفعها
الله دون الغمام يوم القيامة ، وتفتح لها أبواب السماء ، ويقول : بعزتي لأنصرنك ولو
بعد حين " .
மூன்று நபர்களின் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.
1, நீதமான அரசர். 2, நோன்பு திறக்கும் வரை நோன்பாளியின் துஆ. 3, அநீதம்
இழைக்கப்பட்ட வனின் துஆ. {திர்மிதி,நஸயி,இப்னுமாஜா,அஹ்மது}
عن عبادة بن الصامت قال سمعت رسول الله
صلى الله عليه وسلم يقول : أعطيت أمتي ثلاثا لم تعط إلا الأنبياء كان الله إذا بعث
نبيا قال ادعني أستجب لك وقال لهذه الأمة ادعوني أستجب لكم وكان الله إذا بعث النبي
قال له ما جعل عليك في الدين من حرج وقال لهذه الأمة ما جعل عليكم في الدين من حرج
وكان الله إذا بعث النبي جعله شهيدا على قومه وجعل هذه الأمة شهداء على الناس، (قرطبي)
நபிமார்களுக்கு மட்டும்
பிரத்யேகமாக வழங்கப்பட்ட மூன்று விஷயங்களை அல்லாஹ் என் சமூகத்திற்கு
வழங்கியிருக்கிறான். அவற்றில் ஒன்று பிரார்த்தனையாகும் {குர்துபி}
إنَّ ربَّكم حييٌّ كريمٌ يستحيي من عبدِه أن يرفعَ
إليه يدَيْه
فيرُدَّهما صِفرًا أو قال خائبتَيْن
الراوي: سلمان
الفارسي المحدث: الألباني - المصدر: صحيح ابن ماجه - الصفحة
أو الرقم: 3131
خلاصة
حكم المحدث: صحيح
உங்களது இறைவன்
ஜீவித்திருப்பவன்,சங்கை மிகுந்தவன்.தன் அடியான் அவனிடம் கரம் ஏந்தும் போது,அவன்
கேட்பதைக் கொடுக்காமல் காலியாக திருப்பி அனுப்புவதற்கு அவன் வெட்கப்படுகிறான்.{இப்னுமாஜா}
நாம் கேட்கும் எந்த
துஆவும் வீணாகுவதில்லை.முறையாக ஒழுங்காக கேட்கும் முறைப்படி கேட்கப்பட்ட எந்த
துஆவுக்கும் பலன் இல்லாமல் இல்லை.
ما منْ
رجلٌ يدعو اللهَ بدعاءٍ إلا استُجيبَ لهُ, فإما أنْ يُعجِّل لهُ في الدنيا، وإما أن
يدِّخرَ لهُ في الآخرةِ، وإما أنْ يكفِّر عنهُ ذنوبَهُ بقدرِ ما دعا ما لمْ يدعُ بإثمٍ
أو قطيعةِ رحمٍ، أو يستعجلَ، قالوا يا رسولَ اللهِ،وكيف يستعجلُ ؟
قال : يقول دعوتُ ربي فما استجابَ لي
الراوي: أبو
هريرة المحدث: الترمذي - المصدر: سنن الترمذي -الصفحة أو الرقم: 3677
அடியான் கேட்கின்ற அனைத்து
துஆக்களுக்கும் அகீகாரம் உண்டு. அடியான் துஆ கேட்கும் போது மூன்றில் ஒரு விஷயம்
நடைபெறும். 1,அவன் கேட்டது உலகத்திலேயே கிடைத்து விடும்.அல்லது 2, மறுமையில்
அதற்கான பிரதிபலன் கிடைக்கும்.அல்லது 3, அவன் கேட்ட துஆவின் அளவு அவன் பாவங்கள்
மன்னிக்கப்படும்.
துஆவில் மூன்று விஷயங்கள்
இல்லாமல் இருக்க வேண்டும். 1, பாவமான காரியம் குறித்து கேட்காமல் இருக்க வேண்டும்.
2, துஆ கேட்பவன் உறவை முறிக்காதவனாக இருக்க வேண்டும். 3, அவசரம் காட்டாமல் இருக்க
வேண்டும். {திர்மிதி}
عنِ
النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فيما يروى عن ربَّه قال أربعُ خصالٍ واحدةٌ منهنَّ
لي وواحدةٌ لك واحدةٌ فيما بيني وبينَك وواحدةٌ فيما بينَك وبينَ عبادي فأمَّا الَّتي
لي فتعبُدُني لا تُشرِكُ بي شيئًا وأمَّا الَّتي لك عليَّ فما عمِلْتَ من خيرٍ جزَيْتُك
به وأمَّا الَّتي بيني وبينَك فمنك الدُّعاءُ وعليَّ الإجابةُوأمَّا
الَّتي بينَك وبينَ عبادي فارضَ لهم ما ترضى لنفسِك
الراوي: أنس
بن مالك المحدث: الهيثمي - المصدر: مجمع الزوائد - الصفحة
أو الرقم: 1/56
நான்கு விஷயங்கள் உண்டு.அதில் ஒன்று
எனக்குரியது.இன்னொன்று உங்களுக்குரியது.மற்றொன்று எனக்கும் உங்களுக்கும் மத்தியில்
உள்ளது. மற்றொன்று உங்களுக்கும் என் அடியார்களுக்கும் மத்தியில் உள்ளது என அல்லாஹ்
நபியைப் பார்த்துக் கூறினான்.
எனக்குரியது என்பது என்னை வணங்குவதும் எனக்கு
இணை வைக்காமல் இருப்பதுமாகும்.நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதற்கு உங்களுக்கு
கூலி உண்டு.அது உங்களுக்குரியது.நீங்கள் துஆ செய்தால் நான் பதில் தருவேன்.இது
எனக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளது. உங்களுக்கு எதை விரும்புவீர்களோ அதையே
மற்றவர்களுக்கும் விரும்புங்கள்.இது உங்களுக்கும் என் அடியார்களுக்கும் மத்தியில்
உள்ளது. {மஜ்மவுஸ்ஸவாயிது}
இப்படி நாம் செய்யும்
துஆக்கள் வீண் போவதில்லை என்பதை உணர்த்தும் நபிமொழிகள் நிறைய உண்டு.என்றாலும்
துஆக்கள் அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கு மார்க்கம் சில நிபந்தனைகளை
விதிக்கிறது.அவைகளைப் பேண வேண்டும்.
فإن إجابة الدعاء لا بد لها من شروط في
الداعي وفي الدعاء وفي الشيء المدعو به . فمن شرط الداعي أن يكون عالما بأن لا قادر
على حاجته إلا الله ، وأن الوسائط في قبضته ومسخرة بتسخيره ، وأن يدعو بنية صادقة وحضور
قلب ، فإن الله لا يستجيب دعاء من قلب غافل لاه ، وأن يكون مجتنبا لأكل الحرام
أيها الناسُ ! إنَّ اللهَ طيِّبٌ لا يقبلُ إلا طيِّبًا
. وإنَّ اللهَ أمر المؤمنين بما أمر به المرسلين . فقال : يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا
مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ . [ 23
/ المؤمنون / الآية 51 ] وقال : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ
مَا رَزَقْنَاكُمْ [ 2 / البقرة / الآية 172 ] . ثم ذكر الرجلَ يطيلُ السَّفرَ . أشعثَ أغبَرَ . يمدُّ يدَيه إلى
السماءِ . يا ربِّ ! يا ربِّ ! ومطعمُه حرامٌ ، ومشربُه حرامٌ ، وملبَسُه حرامٌ ، وغُذِيَ
بالحرام . فأَنَّى يُستجابُ لذلك ؟
الراوي: أبو
هريرة المحدث: مسلم - المصدر: صحيح مسلم -الصفحة أو الرقم: 1015
خلاصة
حكم المحدث: صحيح
وألا يمل من الدعاء ، ومن شرط المدعو فيه
أن يكون من الأمور الجائزة الطلب والفعل شرعا ، كما قال : ما لم يدع بإثم أو قطيعة
رحم فيدخل في الإثم كل ما يأثم به من الذنوب ، ويدخل في الرحم جميع حقوق المسلمين ومظالمهم
(قرطبي)
துஆக்கள்
அங்கீகரிக்கப்படுவதற்குரிய நிபந்தனைகள்
1, தன் தேவைகளை
நிறைவு செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்ற எண்ணம் வேண்டும்.
2, உண்மையான
நிய்யத்தோடும் அதில் ஈடுபாட்டுடனும் துஆ செய்ய வேண்டும்.
3, ஹராமை
விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.
4, அவசரப்படாமல்
இருக்க வேண்டும். {குர்துபி}
وقال سهل بن عبد الله التستري : شروط الدعاء
سبعة : أولها التضرع والخوف والرجاء والمداومة والخشوع والعموم وأكل الحلال (قرطبي)
ஸஹ்லுத்துஸ்தரி
ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
பிரார்த்தனையின்
ஷர்த்துகள் ஏழு
1, பணிவு 2, அச்சம் 3,
ஆதரவு 4, நிலையாக இருப்பது 5, மன ஓர்மை 6, அனைவருக்கும் பொதுவாக கேட்பது 7, ஹலாலான
உணவு. {குர்துபி}
وللدعاء أوقات وأحوال يكون الغالب فيها
الإجابة ، وذلك كالسحر ووقت الفطر ، وما بين الأذان والإقامة ، وما بين الظهر والعصر
في يوم الأربعاء ، وأوقات الاضطرار وحالة السفر والمرض ، وعند نزول المطر والصف في
سبيل الله . كل هذا جاءت به الآثار ، ويأتي بيانها في مواضعها (قرطبي)
துஆக்கள்
கபூலாகும் சில தருணங்கள் உண்டு.
1, ஸஹர் நேரம் 2, இஃதார்
நேரம் 3, பாங்கு இகாமத் மத்தியில் உள்ள நேரம் 4, வியாழக்கிழமை லுஹர் மற்றும்
அஸருக்கு மத்தியில் உள்ள நேரம் 5, நெருக்கடிகள் ஏற்படும் நேரம் 6, பயணத்தின் போது
7, நோயின் போது 8, மழை பொழியும் போது 9, அல்லாஹ்வின் பாதையில் இருக்கும் போது. {குர்துபி}
قال سفيان بن عيينة : لا يمنعن أحدا من
الدعاء ما يعلمه من نفسه فإن الله قد أجاب دعاء شر الخلق إبليس ، قال : رب فأنظرني
إلى يوم يبعثون ، قال فإنك من المنظرين (قرطبي
எனவே அதிகம் துஆக்களில்
ஈடுபட வேண்டும்.நாம் புரியும் பாவங்களை நினைத்து அதன் காரணமாக நாம் கேட்கும்
துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.அதற்கு எந்த பயனும் இருக்காது என்று எண்ணக்
கூடாது.ஏனென்றால் படைப்பிலேயே மிகத்தீய படைப்பாக இருக்கிற ஷைத்தானின் கோரிக்கையையே
அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.உலக அழிவு நாள் வரை வாழ எனக்கு அவகாசம் வழங்கு என்று
கேட்டான்.அல்லாஹ்வும் அதை கொடுத்து விட்டான் என்று சுஃப்யான் இப்னு உயைனா ரஹ்
அவர்கள் கூறுவார்கள் {குர்துபி}
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பரகத் பாகவி
ReplyDeleteநீங்கள் செய்யும் இந்த மகத்தான பணியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
ReplyDeleteAlhamthulillah ...keep on
ReplyDeleteAlhamdulillah. ...
ReplyDeleteஅல்லாஹ் எல்லா வித சிரமங்களை விட்டும் நீக்கி தொடர்ந்து இப்பணி செய்ய அல்லாஹ் கிருபை செய்வானாக.....
امين
ReplyDeleteامين
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்..!! இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்!!
ReplyDeleteMasha allah
ReplyDeleteماشاءالله جزاك الله خيرا خير الخدمات
ReplyDelete
ReplyDelete