Saturday, May 20, 2017

தராவீஹ் ஐந்தாம் நாள்


(وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَاب ِ(2) سورة المائدة 
நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.பாவமான காரியத்திலும் அநியாயத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். {6 ; 2}


மனிதர்களாகிய நாம் நம் சகல காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ வேண்டும் என்பதை இந்த வசனத்தின் வழியாக அல்லாஹ் வலியுறுத்துகிறான். முஸ்லிம்  உம்மத்தின்  அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றைய காலத்தில்  தேவைப்படுகிற  மிக முக்கியமாக அத்தியாவசியமாக இருக்க வேண்டிய  உணர்வு  இது.

வீடு,  தொழில்,  சமூக  வாழ்கை  அனைத்து துறைகளிலும்  நாம் உதவி புரியும் உணர்வோடு  செயல்பட்டோம் என்றால்  நம்மை  போல நிம்மதியான மனிதர்கள்  வேறு  யாரும்  இருக்க முடியாது,  நம்மை  போல வெற்றி யாளரும் வேறு  யாரும்  இருக்க  முடியாது,

يقسم الماوردي - رحمه الله - الناس باعتبار ما يقدمونه من معاونة وما يحققونه من معاني الأخوة والتعاون إلى أقسام أربعة:
الأول: من يعين ويستعين.
الثاني: من لا يعين ولا يستعين.
الثالث: من يستعين ولا يعين.
الرابع: من يعين ولا يستعين
அல்லாமா மாவர்தீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;
உதவி புரியும் விஷயத்தில் மக்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
1, பிறருக்கு உதவி புரிவார்.பிறரிடம் உதவியும் தேடுவார்
2, உதவி செய்யவும் மாட்டார்,உதவி தேடவும் மாட்டார்.
3, உதவி தேடுவார்,பிறருக்கு உதவி செய்ய மாட்டார்.
4, உதவி செய்வார்,உதவி தேட மாட்டார்.
இதில் மூன்றாம் நிலையில் உள்ளவரை இஸ்லாம் கண்டிக்கிறது. நான்காம் நிலையில் உள்ளவரை இஸ்லாம் பாராட்டுகிறது.பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்.

உலகில் நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்,நான் யாருக்கும் உதவ மாட்டேன் என்று சொல்பவன் உண்மையில் அவன் மனிதன் அல்ல, பிணத்தைப் போன்றவன். யாருக்கும் உதவ முடியாத, எல்லோருடைய உதவியையும் எதிர் பார்ப்பது பிணம் தானே.

எனவே நம்மால் முடிந்தளவு பொருளால்,கல்வியால்,உணவால் பிறருக்கு உதவி செய்யும் உயர்ந்த குணத்தை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும்.

அகிலத்தில் அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து சிருஷ்டிகளும் எதாவது வகையில் பிறருக்கு உதவி புரியும் நிலையில் இருப்பதை நாம் பூமியில் காணும் காட்சிகள் நமக்கு உணர்த்துகிறது.

தனக்கு ஏற்படும் காயங்களைக் கூட பாராமல் தன் எஜமானனை பாதுகாப்பாக பல மைல் தூரம் சுமந்து செல்லும் குதிரை,

நாம் போடுகின்ற ஒரு சில பிஸ்கட்களுக்காக காலம் முழுக்க நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாய்,

எதுவும் தரா விட்டாலும் கிடைக்கிற காகிதத்தை திண்று கொண்டு நம் பொதிகளை சுமக்கும் கழுதை,

தன் மேல் சிறுநீர் கழிப்பவனுக்கும் இளநீரைப் பரிசாக வழங்கும் தென்னை மரம்,

தன் மேல் கல் எறிபவனுக்கும் சுவையான பழங்களை தந்துதவம் மாமரம்,

கடலின் உப்பு நீரை உள்வாங்கிக் கொண்டு நமக்காக மதுரமான நீரை வாரி வழங்கும் மேகம்

இதுவெல்லாம், பிறருக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை நமக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ்கிறது.

وقال ابن القيم رحمه الله في قوله تعالى :وتعاونوا على البر والتقوى .. الآية : ( اشتملت هذه الاية على جميع مصالح العباد في معاشهم ومعادهم فيما بينهم بعضهم بعضا وفيما بينهم وبين ربهم
இந்த வசனம் அடியார்களின் அனைத்து நலவுகளையும் எடுத்துக் கொள்ளும்.அதாவது மனித வாழ்வில் ஏற்படும் எல்லா விஷயங்களிலும் எல்லாக் காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ வேண்டும் என்று இப்னுல் கய்யும் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

உலகில் வாழும் ஒவ்வொருவரும் தன் சகோதரனுக்கு நல்ல விஷயங்களின் பக்கம் வழி காட்ட வேண்டும்.அதில் அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.அவனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களை எச்சரிக்க வேண்டும்.அதிலிருந்து அவனைக் காப்பாற்ற முயல வேண்டும்.இது தான் சிறந்த பண்பு என்று மார்க்கம் சொல்கிறது.

لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه( متفق عليه من حديث أنس رضي الله عنه،
தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் முஃமினாக ஆக முடியாது.{புகாரி,முஸ்லிம்}

ويقول عليه الصلاة والسلام ( المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضاً وشبك بين أصابعه) متفق عليه،
ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை உறுதிபடுத்துகிறது. {புகாரி}

ويقول النبي عليه الصلاة والسلام أيضاً ) مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى ) متفق عليه 
ஒருவருக்கொருவர் அன்பு கொள்வதிலும் இரக்கம் கொள்வதிலும் முஃமின்கள் ஒரு உடலைப்போல.உடலில் ஒரு பகுதிக்கு ஒரு பிரச்சனை என்றால் மற்ற அனைத்து உருப்புக்களும் அதற்கு உதவி புரிகிறது. {புகாரி,முஸ்லிம்}

நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் சிறந்த உதாரணம்.

நபி ஸல் அவர்கள் பல்வேறு கட்டங்களில் பிறருக்கு உதவி புரியும் பண்பை குறித்து ஆர்வமூட்டியிருக்கிறார்கள்.

وعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ قَالَ فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ يَمِينًا وَشِمَالًافَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لا ظَهْرَ لَهُ وَمَنْ كَانَ لَهُ فَضْلٌ مِنْ زَادٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لا زَادَ لَهُ قَالَ فَذَكَرَ مِنْ أَصْنَافِ الْمَالِ مَا ذَكَرَ حَتَّى رَأَيْنَا أَنَّهُ لا حَقَّ لأَحَدٍ مِنَّا فِي فَضْلٍ ( رواه مسلم 3258 ) . 
பயணத்தில் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அதைக் கண்ணுற்ற நாயகம், அவர் ஏதோ தேவையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு அவருக்கு உதவி புரியுமாறு தோழர்களிடம் கூறினார்கள். {முஸ்லிம்}
و حديث أبي هريرة عند مسلم:"من نفَّس عن مؤمن 
كربة من كرب الدنيا نفَّس الله عنه كربةً من كرب يوم القيامة، ومن يسَّرعلى معسرٍ يسَّر الله عليه في الدنيا والآخرة، ومن ستر مسلمًا ستره الله في الدنيا والآخرة، والله في عون العبد ما كان العبد في عون أخيه
ஒரு முஃமினுக்கு உலகில் ஏற்படும் ஒரு ஆபத்தை ஒருவர் தீர்த்து வைத்தால் அவருக்கு மறுமையில் ஏற்படும் ஆபத்தை அல்லாஹ் தீர்த்து வைக்கிறான்.............. ஒருவன் தன் சகோதரனுக்கு உதவி புரியும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி புரிந்து கொண்டிருக் கிறான். {முஸ்லிம்}

((أتدرون ما حق الجار ؟ إذا استعانك أعنته ، وإن استنصرك نصرته ، وإن استقرضك أقرضته ، وإن مرض عدته ، وإن مات شيعته ، ولا تستطل عليه بالبناء فتحجب عنه الريح إلا بإذنه ، وإذا اشتريت فاكهة فأهد له منها ، فإن لم تفعل فأدخلها سراً ، ولا يخرج بها ولدك ليغيظ بها ولده ، ولا تؤذه بقتار قدرك إلا أن تغرف له منها ))
அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை என்னவென்று தெரியுமா என்று கேட்டு விட்டு சொன்னார்கள் ; அவன் உதவி தேடினால் உதவி புரிய வேண்டும்.கடன் கேட்டால் கொடுக்க வேண்டும்.நோயுற்றால் நலம் விசாரிக்க வேண்டும்.அவன் இறந்து விட்டால் அவன் ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும்.அவனுக்கு காற்றை தடுக்கும் விதமாக கட்டிடத்தை கட்டாமல் இருக்க வேண்டும். அவனுக்கு நல்லது நடந்தால் பாராட்ட வேண்டும்.கெட்டது நடந்தால் ஆறுதல் கூற வேண்டும்.பழங்கள் வாங்கினால் அவனுக்கு கொடுக்க வேண்டும்.இல்லை யென்றால் மறைவாக அதை எடுத்துச் செல்ல வேண்டும். {தக்ரீஜுல் இஹ்யா}

ما رواه الشيخان من حديث جرير بن عبد الله البجلي رضي الله عنه قال: (بايعت النبي صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم). 
தொழுகையை நிலை நாட்ட வேண்டும்,ஜகாத்தை கொடுக்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நபியிடம் நாங்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறோம் என்று ஜரீர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.{முஸ்லிம்}.

واسمع إلى قوله صلى الله عليه وسلم: «عُرضت عليّ أعمال أمتي حسنها وسيئها؛ فوجدت في محاسن أعمالها الأذى يُماط عن الطريق، ووجدت في مساوئ أعمالها النخامة تكون في المسجد لا تُدفن» (رواه مسلم).
என் சமூகத்தின் நல்ல தீய அமல்கள் எனக்கு காட்டப்பட்டது.பாதையில் கிடக்கும் நோவினை தரும் பொருளை அகற்றுவதை அவர்களின் நல் அமல்களில் பெற்றுக் கொண்டேன். {முஸ்லிம்}

இப்படி நபி ஸல் அவர்கள் பல்வேறு வகையில் உதவி புரியும் நற்பண்பை குறித்து பேசியதோடு மட்டும் நின்று விடாமல் அதை அவர்கள் செய்தும் வழிகாட்டினார்கள்.

وذات يوم، أقبل رجل من بلد اسمها (إراش) إلى مكة، فظلمه أبو جهل، وأخذ منه إبله، فذهب الرجل إلى نادي قريش يسألهم عن رجل ينصره على 
أبي جهل، وهنا وجد الكفار فرصة للتسلية والضحك والسخرية من رسول الله صلى الله عليه وسلم، فأمروا الرجل أن يذهب إلى الرسول صلى الله عليه وسلم ليأخذ له حقه، فذهب الرجل إلى رسول الله صلى الله عليه وسلم، وأخذوا ينظرون إليه ليروا ما سيحدث، فقام النبي صلى الله عليه وسلم مع الرجل ليعيد له حقه من أبي جهل، فأرسلوا وراءه أحدهم؛ ليرى ما سوف يصنعه أبوجهل مع رسول الله صلى الله عليه وسلم، فذهب الرسول صلى الله عليه وسلم إلى بيت أبي جهل، وطرق بابه، فخرج أبو جهل من البيت خائفًا مرتعدًا، وقد تغير لونه من شدة الخوف، فقال له رسول الله صلى الله عليه وسلم: (أعطِ هذا الرجل حقه) فرد أبو جهل دون تردد: لا تبرح حتى أعطيه الذي له، ودخل البيت مسرعًا، فأخرج مال الرجل، فأخذه، وانصرف.
وعندما أقبل أبو جهل على قومه بادروه قائلين: ويلك! ما بك؟ فقال لهم: والله ما هو إلا أن ضرب عليَّ وسمعت صوته فملئت منه رعبًا، ثم خرجت إليه، وإن فوق رأسه لفحلا من الإبل ما رأيتُ مثلَه قط، فوالله لو أبَيتُ لأكلني. [البيهقي
அபூஜஹ்ல் எனக்கு அநீதம் செய்து விட்டான்.அநியாயமாக என்னிட மிருந்து ஒரு ஒட்டகத்தை அபகரித்து விட்டான்.எனக்கு என் ஹக்கை வாங்கித் தருபவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டு ஒருவர் வந்த போது நபி ஸல் அவர்கள் தாங்களே முன் சென்று அபூஜஹ்லின் வீட்டுக் கதவைத் தட்டை அவரின் ஹக்கை பெற்றுக் கொடுத்தார்கள். {பைஹகி}

إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ البخاري 3
நபி ஸல் அவர்கள் முதன்முதலாக ஜிப்ரயீலைப் பார்த்து வஹியைப் பெற்றுக் கொண்டு பதட்டத்துடனும் அச்சத்துடனும் வந்த போது அன்னை கதீஜா ரலி அவர்கள் சொன்னார்கள் ; அல்லாஹ் உங்களை என்றைக்கும் இழிவு படுத்த மாட்டான் (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்;  வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: {புகாரி}


3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்...
    சிறந்த உபதேசம்
    பின்பற்றும் பாக்கியங்களை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக.
    ஆமீன் .

    ReplyDelete