Friday, May 19, 2017

தராவீஹ் முதல் நாள்


وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ 

اي إن كنتم صادقين فيما قلتم من أنكم تقدرون على المعارضة ، لقولهم في آية أخرى : لو نشاء لقلنا مثل هذا

நம் அடியார் மீது நாம் இறக்கி வைத்த {வேதத்} தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் {அதாவது அல்லாஹ் தான் இதனை இறக்கினான் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்}நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப் போன்ற ஒரு அத்தியாத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்.{இதில்} அல்லாஹ்வைத்தவிர உங்களுடைய உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.  {1 ; 23}


நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்பதில் இரு கருத்துக்கள் உண்டு.
1, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து இல்லை,நபி தன் புறத்திலிருந்து கூறுகிறார்கள் என்று  நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால்
2, குர்ஆனைப் போன்று எங்களால் கொண்டு வர முடியும் என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்
இந்த வசனம் திருக்குர்ஆனின் ஆற்றல் குறித்து அதன் அற்புதம் குறித்து பேசுகிறது.

அல்குர்ஆனோடு தொடர்பு கொள்கிற அனைத்தும் உயர்வைப் பெரும் என்பது குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் கண்ணியமாகும். அல்குர்ஆன் இறங்கியதால் ரமழான் சிறந்த மாதமானது,லைலத்துல் கத்ர் சிறந்த இரவானது,அல்குர்ஆனை- கொண்டு வந்ததினால் ஜிப்ரயீல் [அலை]அவர்கள் சிறந்த மலக்கானார்கள்,அல்குர்ஆன் இறங்கியதால் மக்கா சிறந்த ஊரானது,அரபி சிறந்த மொழியானது,நபி ஸல் அவர்கள் சிறந்த தூதரானார்கள்,நாம் சிறந்த உம்மத்தானோம்.

அல்லாஹுத்தஆலா மூஸா நபிக்கு பிரம்பை பாம்பாக மாற்றும் ஆற்றலைக் கொடுத்தான்.ஈஸா நபிக்கு வெண்குஷ்டம், கருங்குஷ்டத்தை சுகமாக்கும் ஆற்றலைக் கொடுத்தான்.அவைகள் அவர்களுடன் முடிந்து விட்டது.ஆனால் அண்ணல் நபிக்கு அல்குர்ஆனை அற்புதமாக கொடுத்தான்.அது இன்று வரை,இல்லை இல்லை இனி கியாமத் வரை அழியா அற்புதமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு இறங்கிய தவ்ராத்,இன்ஜீல்,ஜபூர் வேதங்களில் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.ஆனால் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கும் மேலாக என்னைப்போன்று ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்,என்னைப் போன்று ஒரு வசனத்தை கொண்டு வாருங்கள் என்று வீர முழக்கமிட்டும் இன்று வரை அதன் ஒரு புள்ளி கூட மாறாமல் இருப்பது அதன் தனித்தன்மையை நமக்கு உணர்த்துகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள், "நீங்கள் நபி என்றால் முன்னர் இருந்த நபிமார்கள் காட்டிய அற்புத செயல்களை - முஃஜிஸாக்களை நீங்களும் காட்டுங்கள்." என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந் தார்கள். அதற்கு அல்லாஹ் பின் வருமாறு பதிலளித்தான்.
وَقَالُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَاتٌ مِّن رَّبِّهِ ۖ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ

29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சி களெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளனஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

أوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَىٰ عَلَيْهِمْ إِنَّ فِي ذَٰلِكَ لَرَحْمَةً وَذِكْرَىٰ لِقَوْمٍ يُؤْمِنُونَ

29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதாநிச்சயமாக அ(வ் வேதத்)தில் (ரஹ்)மத்தும்ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.

முன்னர் வாழ்ந்த நபிமார்கள் முஃஜிஸாக்களை - அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். அவர்களுக்கு பின்னால் அடுத்தடுத்து நபிமார்கள் வந்ததால் அவர்கள் காட்டிய  அற்புதங்கள் எல்லாம் தற்காலிகமானவையாகவே இருந்தன. ஆனால் அண்ணல் நபி (ஸல்) இறுதி நபியாக இருந்ததால் இனி எவரும் நபியாக வரப்போவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அற்புதம் முஃஜிஸா இறுதி நாள் வரை நிரந்தரமாக இருக்க கூடிய பேரற்புதமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. எனவே அத்தகைய பேரற்புதமாக இறுதி நாள் வரை  அற்புதமாகவே திகழக் கூடிய குர்ஆனை அல்லாஹ் அருளினான்.

அந்தக்குர்ஆன் அற்புதங்களிலெல்லாம் மாபெரும் அற்புதமாக திகழ்கிறது.காரணம் உலகில் இதுவரை எழுதப்பட்ட எந்த நூலும் எந்த நூலாசிரியரும்  இப்படிப்பட்ட ஒரு சவாலை - அறை கூவலை மனித இனத்துக்கு முன் வைத்ததில்லை.இந்த அறை கூவல் இது வரை, பதினான்கு நூற்றாண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்று வரை இந்த சவால் எவராலும் எதிர் கொள்ளப்பட வில்லை.குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்பு திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளது.

இது போன்று மனிதனை திகைப்பில் ஆழ்த்தக் கூடிய ஓர் அறைக்கூவல் விடுவதற்கு எந்த நூலாசிரியருக்கும் துணிவு இல்லை. ஏனெனில் ஒரு மனிதன் எழுதுகின்ற நூலைப் போல் இன்னொரு மனிதர் இயற்றி விட முடியும். எனவே மனித மூளை இது போன்ற ஒரு நூலை இயற்றி விட முடியாது. முடிந்தால் இயற்றட்டும் பார்க்கலாம். என்ற குர்ஆனின் இந்த அறைகூவலும், இந்த அறைகூவலிடப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இது போன்ற ஒரு நூலை எந்த மனிதனாலும் இயற்ற முடியவில்லை என்ற நிலையும் குர்ஆன் மனிதனால் இயற்றப்பட்டது அல்ல என்ற உண்மையைத் திட்டவட்டமாக வலியுறுத்துகின்றது.

இதுவரை உலகில் யாருமே இப்படி ஒர் அறைகூவலை விடுத்ததே இல்லை.அந்த சவாலை எதிர்த்து இதுவரை எவரும் வெற்றி பெற்றதும் இல்லை.அரபி இலக்கண இலக்கியத்தில் கை தேர்ந்த பலரும் மோதிப்பார்த்து தோற்றுப் போனார்கள்.

وفي صفحات التاريخ بعض الوقائع ، غر أصحابها الغرور فانطلقوا يواجهون هذا التحدي.
وأولي هذه الوقائع ما حدث من الشاعر العربي لبيد بن ربيعة الشهير ببلاغة منطقه ، وفصاحة لسانه ، ورصانة شعره. فعندما سمع أن محمدا يتحدي الناس بكلامه قال بعض الأبيات ردا علي ما سمع ، وعلقها علي باب الكعبة ، وكان التعليق علي باب الكعبة امتيازا لم تدركه إلا فئة قليلة من كبار شعراء العرب ، وحين رأي أحد المسلمين هذا أخذته العزة فكتب بعض آيات الكتاب الكريم وعلقها إلي جوار أبيات لبيد ومر لبيد بباب الكعبة في اليوم التالي ولم يكن قد أسلم بعد فأذهلته الآيات القرآنية حتي أنه صرخ من فوره قائلا: (والله ما هذا بقول بشر ، وأنا من المسلمين)(132).
وكان من نتيجة تأثر هذا الشاعر العربي العملاق ببلاغة القرآن أنه هجر).

அரபு உலகிலே தனது ஆற்றல் மிகு கவிதைகளாலும், வீறு கொண்ட உணர்வுகளாலும் புகழ் பெற்ற லபீத் என்பவர் இதை ஏற்று போட்டியிட முன் வந்தார். அரபு நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கவிதை வெள்ளம் கரைபுரண்டு கொண்டிருந்த காலத்தில் கஃபாவில் தொங்கவிடப்படுகின்ற கவிதைகளுக்குத் தனிபுகழ் இருந்தது. மிகச் சிறந்த கவிதைக்கு மட்டுமே அந்த மரியாதை கிடைத்தது.

அந்த மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான லபீத் ஒரு கவிதை எழுதி கஃபாவின் வாயிலில் தொங்க விட்டார். இவ்வாறு அவர் தொங்க விட்ட நிகழ்ச்சி நடந்த உடனே முஸ்லிம் ஒருவர் குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயத்தை எழுதி அதற்கு அருகிலேயே மாட்டி வைத்தார். இஸ்ஸாத்தை அது வரை ஏற்றுக் கொள்ளாதிருந்த கவிஞர் லபீத் மறுநாள் கஃபா ஆலயத்தின் வாயில் அருகே வந்தார். திருக்குர்ஆன் அத்தியாயத்தை வாசித்தார். அத்தியாயத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் அசாதாரண முறையில் ஒருவித மாறுதலுக்கு ஆளானார்.

இவை மனிதனின் வார்த்தைகளே அல்ல. இவை இறைவசனங்கள் தாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். அரபு உலகின் ஒர் ஒப்பற்ற கவிஞர் இவர். திருக்குர்ஆனின் இலக்கிய நடையால் மிகப்பெரிய அளவில் ஆட்கொள்ளப்பட்ட இவர் அதன் பிறகு கவிதை எழுதுவதையே விட்டு விட்டார்.

الشعر وقد قال له عمر بن الخطاب رضي الله تعالي عنه يوما: يا أبا عقيل: أنشدني شيئا من شعرك فقرأ سورة البقرة وقال: ما كنت لأقول شعرا بعد إذ علمني الله البقرة وآل عمران(133
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் இந்த கவிஞரிடம் ஒரு  கவிதை கூறும்படி வேண்டிய போது லபீத் (ரலி) பின்வருமாறு பதிலளித்தார்கள்."அல்பகரா மற்றும் ஆல இம்ரான் போன்ற அத்தியாயங்களை அல்லாஹ் எனக்கு வழங்கியிருக்கும் போது கவிதையை தொடுவதே எனக்கு அழகல்ல."

ولما مضي علي الاتفاق نصف عام عادوا إليه ، وبهم تطلع إلي معرفة ما حققه أديبهم لمواجهة تحدي رسول الإسلام ؛ وحين دخلوا غرفة الأديب الفارسي الأصل ، وجدوه جالسا والقلم في يده وهو مستغرق في تفكير عميق ، وأوراق الكتابة متناثرة أمامه علي الأرض ، بينما امتلأت غرفته بأوراق كثيرة كتبها ثم مزقها.
لقد حاول هذا الكاتب العبقري أن يبذل كل مجهود عساه أن يبلغ هدفه ، وهو الرد علي تحدي القرآن المجيد. . ولكنه أصيب بإخفاق شديد في محاولته هذه ، حتي اعترف أمام أصحابه ، والخجل والضيق يملكان عليه نفسه أنه ، علي الرغم من مضي ستة أشهر حاول خلالها أن يجيب علي التحدي ، فإنه لم يفلح في أن يأتي بآية واحدة من طراز القرآن ! وعندئذ تخلي ابن المقفع عن مهمته مغلوبا مستخذيا. .(135)

பிற்காலத்தில் இன்னொருவர் இதை ஏற்றார். இப்னுல் முகப்பஃ என்பவர் இந்தச் சவாலை ஏற்க முன் வந்தார். மதங்களையே மறுக்கும் ஒரு குழுவினர் குர்ஆன் வெகு வேகமாக மக்களை தன் அளவில் ஈர்ப்பதையும் அதனால் மக்கள் இஸ்லாத்தை தழுவதையும் கண்டு குர்ஆனின் சவாலை ஏற்று அதற்கு எதிராக ஒரு வேதத்தை உருவாக்க தீர்மானித்தார்கள்.  இந்த நோக்கத்திற்காக அவர்கள் இப்னு முகஃப்பஃ தங்கியிருந்த அறைக்குச் சென்றார்கள். அவர் உட்கார்ந்திருந்தார். அவரது கையில் பேனா இருந்தது. ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்தார்.அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே ஒரு கூடை இருந்தது. எழுதி, எழுதி கிழிக்கப்பட்ட காகிதங்கள் பெரும் குவியலாக அதில் கிடந்தன. அங்கு மட்டுமல்ல அறை முழுவதுமே அத்தகைய குவியல்கள் காணப்பட்டன.

அவை வெறும் தாள்கள் ஒரு வரி கூட அதில் எழுதப்படவில்லை. அளவு கடந்த திறமையுடைய மிகச் சிறந்த மொழி அறிவு படைத்த அந்த ஈரான் நாட்டு மேதை தன்னுடைய எல்லா சக்திகளையும் பிரயோகித்து குர்ஆனுக்கு எதிராக ஒரு நூலை எழுதுகின்ற தமது முயற்சியில் ஈடுபட்டு ஒரு வரி கூட எழுத முடியாமல் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொண்டார் ஒரு வரி எழுத முயன்று ஆறு மாதங்கள் ஆகியும் அவரால் எழுத முடியவில்லை. அவர் நம்பிக்கை இழந்து வெட்கமுற்று அந்த பணியை விட்டே ஒதுங்கிக் கொண்டார்.

அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இஸ்லாத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்.குர்ஆனுக்கு எதிராக ஓர் சவாலை முன்வைத்தார்."குர்ஆன் துல்லியமான நூல் இல்லை
ما جعل الله لرجل من قلبين في جوفه
33:4 வது வசனம் 'எந்த ஆண்களுக்கும் இரண்டு இதயங்களை வைக்கவில்லை' என்று சொல்கிறது. ஏன் பெண்களையும் குறிப்பிடவில்லை? பெண்ணிற்கு என்ன இரண்டு இதயங்களா இருக்கு?" என்றார்.

அப்போது அந்த அறையில் இருந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் எழுந்து, "இல்ல சார், குர்ஆன் மிகவும் துல்லியமானது தான். பெண்களுக்குள் இரண்டு இதயம் இருக்க முடியும். அவள் கர்ப்பிணியாய் இருக்கும்போது.... என்று கூறினார்" அதைக்கேட்ட பிறகு பேராசிரியரால் பதில் பேச இயல வில்லை...?

இப்படி எண்ணற்ற சவால்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய உன்னதமான வேதத்தை நாம் அனுதினமும் ஓதுவோம்,அதன் கருத்துக்களை விளங்குவோம்,அதன் படி நடப்போம்,ஈருலகிலும் வெற்றிக் கனியைப் பறிப்போம். வல்லோன் அருள் புரிவானாக !

இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு நாளும் அன்றைய நாளின் தராவீஹ் குறிப்புகள் வெளியிடப்படும்.உலமாக்கள் பார்த்து படித்து தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்வதோடு  தங்கள் துஆவிலும் இணைத்துக் கொள்ளுங்கள்.

19 comments:

  1. Alhamdu lillah! Ill ready cm soon insha allah

    ReplyDelete
  2. Alhamthu lillah.sevaigal valarattum

    ReplyDelete
  3. Alhamthu lillah.sevaigal valarattum

    ReplyDelete
  4. பாரகல்லாஹ் வாஹிதியாரே!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. பாரகல்லாஹ் வாஹிதியாரே!

    ReplyDelete
  8. ஜஸாகல்லாஹு சகோ

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. جزاك الله மிகப்பொிய முயற்சி அல்லாஹ்
    உங்ளுக்கு நிறைவான கூலியை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  11. பாரக்கல்லாஹு ஃபீ இல்மிக்க

    ReplyDelete
  12. ما شاءالله ! مبروك !

    ReplyDelete
  13. இது போல் வாட்ஸ் அப் குரூப் ஒன்று ஆரம்பித்து அதில் அனுப்பினால் இன்னும் இலகுவாக இருக்கும். குரூப் இருந்தால் லிங்க் தரவும் நாங்களும் சேர்ந்து கொள்வோம்

    ReplyDelete
  14. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  15. மாஷா அல்லாவஹ் சூப்பர்

    ReplyDelete
  16. ஆரம்ப ஆயத்தில் சூரா எண் தவறாக உள்ளது...

    ReplyDelete