Sunday, May 28, 2017

தராவீஹ் இருபத்தைந்தாம் நாள்



يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّر (4) وَالرُّجْزَ فَاهْجُرْ (5)
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்திருந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனை பெருமைப் படுத்துவீராக! உங்கள் ஆடையை தூய்மைப் படுத்திக் கொள்வீராக! அசுதத்தை வெறுப்பீராக!  {74 ; 1,2,3,4,5}

இஸ்லாம் சுத்தத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்குகிறது. சுத்தமாக இருக்கும் விஷயத்தில் இஸ்லாம் கொடுக்கிற அளவிற்கு முக்கியத்தையும் அக்கரையையும் வேறு எந்த மதமும் கொடுக்க வில்லை.தொழுகையிலும் சரி தொழுகையல்லாத காரியங்களிலும் சரி உடல்,உடை,இடம் இம்மூன்றும் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உள்ளத்தைக் கூட தூய்மையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்து வதைப் பார்க்கலாம்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ
ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்த போது ஒரு மனிதரை கண்டார்கள் அவரின் தலை முடி சீர் செய்யப்படாமல் பரட்டையாக இருந்தது நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் இவர் முடியை சரி செய்வதற்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?இன்னொரு மனிதரை அவரின் அழுக்கான நிலையின் கண்டு அவரிடம் ஆடையை கழுவதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளவில்லையாஎன்று கேட்டார்கள்{அபூ தாவூத்}

நமது தேசம் 68ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களை சந்தித்த பிறகு தான் தூய்மை இந்தியா திட்டத்தை முன் வைத்திருக்கின்றது. ஆனாலும் இந்த திட்டம் மக்களை வெல்லுமாஅல்லது மக்கள் கூட்டம் இதை தள்ளுமாஎன்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை 1400ஆண்டுகளுக்கு முன்பே தூய்மையை திட்டமாகவும்சட்டமாகவும் ஆக்கியது.

وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : اتقوا اللاعنين : الذي يتخلى في طريق الناس أو في ظلهم .
تخريج السيوطي
தாஹா நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் சபிக்கப்படும் இரு விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் (அந்த இரு செயல்களையும்) செய்பவர்கள் மக்களால் சபிக்கப்படுவார்கள்) அவர்கள் யாரென்றால் மக்களின் நடைபாதையில் மலம்ஜலம் கழித்து அசுத்தம் செய்பவன்.அல்லது மக்கள் நிழல் தேடும் மரங்களில் நஜீஸ் கழிப்பவன் என்று கூறினார்கள் அந்த நபிமொழி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்கள் சபிக்கப்பட தகுந்தவர்கள் என்று சொல்வதுடன் அப்படி காரியங்கள் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.{முஸ்லிம்}

தூய்மை விஷயத்தில் இஸ்லாம் எடுத்துக் கொள்கிற இந்த அக்கரையைப் பார்த்து உலகம் பாராட்டுகிறது.கல்லூரி மாணவர்களுக்கான ஒரு கலந்துறையாடல் நடந்தது.அங்கே ஆசிரியர் மாணவர்களிடம் உன்னுடைய சமயம் அல்லாத பிற சமயத்தில் உனக்கு பிடித்த அம்சம் எது என்று கேட்டார்.பலரும் இஸ்லாத்தை சொன்னார்கள்.அதில் ஒரு இளம் பெண் : பாலை வனத்தில் உருவான ஒரு சமயம் சுத்தத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது என்று சொன்னாள்.

இஸ்லாம் எல்லா விஷயங்களிலும் எல்லா நேரத்திலும் எல்லா நிலைகளிலும் தூய்மையாக இருக்கும்படி கட்டளையிடுகிறது. தூய்மையாக இருப்பவர்களைப் பாராட்டுகிறது.தூய்மையில்லாமல் இருப்பவரை அது அவரது விருப்பம் என்று விடாமல் அது மிகப்பெரும் குற்றம் என்று எச்சரிக்கிறது.

சுத்தத்தின் மூலம் நிறைய நன்மைகள் உண்டு என்று மார்க்கம் சொல்கிறது.

1, அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.
திருமறைக்குர்ஆனில் சிலரை தான் நேசிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.எவர்களைக்குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறு கிறானோ அவர்கள் உண்மையில் விஷேசமானவர்களாகத்தான் இருப்பார்கள்.அந்த வகையில் அல்லாஹ் சுத்தத்தைக் கடைபிடிப் பவர்களைப் பார்த்து அவ்வாறு கூறுகிறான்.
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் சுத்தமாக இருப்பவர் களையும் நேசிக்கிறான்.

2, ஈமான் முழுமை பெறுகிறது
மனிதனுடைய குணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிலவற்றை  நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானுடன் இணைத்துச் சொல்லி இருகின்றார்கள். அப்படிப்பட்ட குணங்களை நமது வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது நமது ஈமானை பலப்படுத்தக் கூடியதாகவும் அந்த குணங்களை இழப்பது ஈமானை பலகீனப்படுத்தக் கூடியதாகவும் அமையும்.

எனவே அப்படிப்பட்ட தன்மைகளை பெறுவதிலும்வளர்ப்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் கவனம் செலுத்துவது கடமையாகும். இந்த வகையில் அமைந்த ஒன்று தான் மனிதன் பேணவேண்டிய சுத்தம் சுகாதாரமாகும்.

والطهور نصف الإيمان " . رواه الترمذي وقال هذا حديث حسن
தூய்மை ஈமானின் பாதியாகும்.{திர்மிதி}

3, பாவமன்னிப்பு கிடைக்கிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوْ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنْ الذُّنُوبِ
திரு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.ஒரு முஸ்லிம் ஒளு செய்தால் முகத்தை கழுகினால் அந்த தண்ணீரோடு அல்லது அதன் கடைசி சொட்டோடு கண்களால் பார்த்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியேறிவிடும் அவன் கைகளை கழுகினால் அவனுடைய கைகளை விட்டும் தன் கைகளால் பற்றி கொண்ட எல்லா பாவங்களும் அந்த தண்ணீருடன் வெளியேறிவிடும். அவன் தனது கால்களை கழுகினால் அந்த கால்கள் எந்த பாவத்தின் பக்கம்  நடந்தனவோ அந்த பாவங்கள் தண்ணீருடன் வெளியேறிவிடு கின்றது ஒளுவின் இறுதியில் அவன் பாவங்களை விட்டு பரிசுத்தமாக்கப் பட்டவனாக வெளியேறுகிறான் என்றார்கள்.{முவத்தா இமாம் மாலிக்}

சுதத்தில் கவனக்குறைவாக இருப்பதை மார்க்கம் மிகக்கடுமையாக எச்சரிக்கிறது.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ وَلَا جُنُبٌ

எந்த வீட்டில் உருவப் படங்களோ,நாய்களோகுளிப்பு கடமையாகியும் குளிக்காதவன்  வீடுகளில் ரஹ்மத்தின் மலக்குகள் நுழையமாட்டார்கள் {மிஷ்காத்}

எந்த மனிதன் குளிப்பு அவசியமான நிலையில் அவனுடைய பர்லு தொழுகை பாதிக்கும் அளவிற்கு குளிப்பை தாமதப் படுத்துகின்றானோ அவனை தான் இந்த நபிமொழி கண்டிக்கிறது.

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَكَ مَوْضِعَ شَعْرَةٍ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهَا كَذَا وَكَذَا مِنْ النَّارِ

قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي ثَلَاثًا وَكَانَ يَجُزُّ شَعْرَهُ

கடமையான குளிப்பின் போது எந்த மனிதன் ஒரு முடியின் அளவிற்கு இடத்தை கழுவாமல் விட்டு விட்டானோ அதற்காக அவன் நரகில் இன்னன்ன வேதனை செய்யப்படுவான் என்றார்கள். அலி (ரலி) அவர்கள் ; நான் இதற்கு பயந்து என் தலை முடியை முழுமையாக சிரைத்து விட்டேன் என்று கூறினார்கள். ( அபூ தாவூத் ) 


عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنْ الْيَهُودِ فَقَالَتْ إِنَّ عَذَابَ الْقَبْرِ مِنْ الْبَوْلِ فَقُلْتُ كَذَبْتِ فَقَالَتْ بَلَى إِنَّا لَنَقْرِضُ مِنْهُ الْجِلْدَ وَالثَّوْبَ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلَاةِ وَقَدْ ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ مَا هَذَا فَأَخْبَرْتُهُ بِمَا قَالَتْ فَقَالَ صَدَقَتْ فَمَا صَلَّى بَعْدَ يَوْمِئِذٍ صَلَاةً إِلَّا قَالَ فِي دُبُرِ الصَّلَاةِ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ أَعِذْنِي مِنْ حَرِّ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ

ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள் ;
என்னிடத்தில் ஒரு யூத பெண்மணி வந்தாள் அவள் என்னிடம் சிறு நீர் சரியா சுத்தம் செய்யா விட்டால் அதனால் கப்ரில் வேதனை செய்யப்படும் என்று கூறினால் அவளின் கூற்றை நான் மறுத்தேன் ஆனாலும் அவள் மீண்டும் தான் சொல்வது சரி என்றும் அதனால் யூதர்களான நாங்கள் சிறு நீர் பட்ட இடத்தின் தொலையும் ஆடையும் துண்டித்து விடுகிறோம் என்று சொன்னால் அப்போது தொழுகைக்காக சென்றிருந்த நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள் அந்நேரம் எங்களிடம் சப்தம் கூடி விட்டது நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் நடந்ததை விசாரித்தார்கள் அப்போது நான் அப்பெண் சொன்னதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன் அதக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அந்த பெண் உண்மையை தான் சொன்னார்கள் என்றார்கள் இந்த சம்பவத்திற்கு பின் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்பு தேட ஆரம்பித்தார்கள் {நஸாயீ}

روى البخاري في صحيحه من حديث ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، ثُمَّ قَالَ: بَلَى، كَانَ أَحَدُهُمَا لا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ…". 
நபி ஸல் அவர்கள் இரு மண்ணரைகளை கடந்து சென்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய குற்றங்களுக்காக அல்ல.அதில் கோள் சொல்லித் திருந்தார். இன்னொருவர் சிறுநீர் கழித்து சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தார் என்று கூறினார்கள். {புகாரி}

சுத்தத்தில் குறைபாடு நிகழ்ந்தால் அதன் பாதிப்பு நமக்கு முன்னால் நிற்கும் இமாம் வரை சென்றடையும்.

عن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم : أن رسول الله صلى الله عليه وسلم صلى صلاة الصبح فقرأ الرومفالتبس عليه فلما صلى قال : " ما بال أقوام يصلون معنا لا يحسنون الطهور فإنما يلبس علينا القرآن أولئك " . رواه النسائي
ஒருநாள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு பஜ்ரு தொழுகையை தொழவைத்தார்கள் அப்போது சூரத்தூர் ரூமை ஓதினார்கள் அந்த சமயத்தில் அவர்களுக்கு கிரா அத்தில் கொஞ்சம் சந்தேகம் ஏற்ப்பட்டது பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறப்பான முறையில் தொழுகையை நிறைவு செய்தார்கள் தொழுகைக்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் சஹாபிகளிடம் கேட்டார்கள் நம்முடன் தொழுகிற சிலருக்கு என்ன கேடு ஏற்ப்பட்டது சுத்தத்தில் பேணுதல் இல்லாத நிலையில் நம்முடன் தொழுகின்றார்கள் யார் நம்முடன் தொழுகின்றாரோ அவர்  ஒலுவை சரியாக அமைத்து கொள்ளட்டும் நமக்கு தொழுகையில் கிராஆத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அவர்கள் தான்  காரணம் என்றார்கள். {நஸாயீ}

அந்த சுகாராத்தை பேணுவதில் பன்னெடுங்காலமாக சிறந்த முன் மாதிரியாக நம் மார்க்கம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.அந்த சுத்தத்தை நாம் பேணுவோம்.தூய்மையைப் பாதுகாப்போம்.தூய்மையடைந்த உள்ளம் பெற்றவர்களாக மாறுவோம்.


No comments:

Post a Comment