Thursday, May 25, 2017

தராவீஹ் ஏழாம் நாள்



قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ
நான் உணக்கு {ஆதமுக்கு ஸஜ்தா செய்யும்படி} ஏவிய போது  ஸஜ்தா செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது ? என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு இப்லீஸ், நான் அவரை விட சிறந்தவன் ; என்னை நெருப் பிலிருந்து படைத்தாய்.அவரை களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று கூறினான். {7 ; 12}



وأنا خير منه ، فكيف تأمرني بالسجود له؟ ثم بين أنه خير منه ، بأنه خلق من نار ، والنار أشرف مما خلقته منه ، وهو الطين ، فنظر اللعين إلى أصل العنصر ، ولم ينظر إلى التشريف العظيم ، وهو أن الله تعالى خلق آدم بيده ، ونفخ فيه من روحه ، وقاس قياسا فاسدا (ابن كثير)
என் உயர்ந்தவன் என்று இப்லீஸ் பெறுமை கொண்டான்.இப்லீஸ் அந்த படைப்பின் மூலத்தைத் தான் பார்த்தான்.பார்த்து மண்ணை விட நெருப்பு உயர்ந்தது என்று கர்வம் கொண்டான்.அவன் படைப்பின் விதத்தைப் பார்க்க வில்லை.அல்லாஹ் ஆதம் நபியை தன் கரத்தால் படைத்தான். {இப்னு கசீர்}

قال ابن عباس والحسن وابن سيرين : أول من قاس إبليس فأخطأ القياس . فمن قاس الدين برأيه قرنه الله مع إبليس (قرطبي)
உலகில் முதன் முதலில் கியாஸ் செய்து அதில் தவறிழைத்தவன் இப்லீஸ் தான். எவர் மார்க்கத்தில் தன் சொந்த அறிவைக் கொண்டு கியாஸ் செய்கிறார்களோ அவர் இப்லீஸோடு அல்லாஹ் இணைத்து விடுவான் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். {குர்துபி}

وفي صحيح مسلم ، عن عائشة ، رضي الله عنها ، قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " خلقت الملائكة من نور ، وخلق إبليس من مارج من نار ، وخلق آدم مما وصف لكم " هكذا رواه مسلم 
மலக்குமார்கள் ஒளியாலும் இப்லீஸ் நெருப்பாலும் படைக்கப்பட்டான். ஆதம் நபி உங்களுக்கு சொல்லப்பட்ட விதத்தில் படைக்கப்பட்டார்கள். {முஸ்லிம்}

وقالت الحكماء : أخطأ عدو الله من حيث فضل النار على الطين ، وإن كانا في درجة واحدة من حيث هي جماد مخلوق . فإن الطين أفضل من النار من وجوه أربعة :
أحدها : أن من جوهر الطين الرزانة والسكون ، والوقار والأناة والحلم ، والحياء ، والصبر . وذلك هو الداعي لآدم عليه السلام بعد السعادة التي سبقت له إلى التوبة والتواضع والتضرع ، فأورثه المغفرة والاجتباء والهداية . ومن جوهر النار الخفة ، والطيش ، والحدة ، والارتفاع ، والاضطراب . وذلك هو الداعي لإبليس بعد الشقاوة التي سبقت له إلى الاستكبار والإصرار ; فأورثه الهلاك والعذاب واللعنة والشقاء ; قاله القفال .
الثاني : أن الخبر ناطق بأن تراب الجنة مسك أذفر ، ولم ينطق الخبر بأن في الجنة نارا وأن في النار ترابا .
الثالث : أن النار سبب العذاب ، وهي عذاب الله لأعدائه ; وليس التراب سببا للعذاب .
الرابع : أن الطين مستغن عن النار ، والنار محتاجة إلى المكان ومكانها التراب .(قرطبي)
ஞானவான்கள் கூறுகிறார்கள் ; மண்ணை விட நெருப்பு தான் உயர்ந்தது என்று இப்லீஸ் தன் ஆய்வில் தவறிழைத்து விட்டான்.ஆனால் உண்மையில் மண் தான் நெருப்பை விட பல வகையில் உயர்ந்தது.
1, மண்ணின் தன்மை அமைதி,நிதானம்,பொறுமை,வெட்கமாகும்.அது தான் ஆதம் நபியை பணிவின் அளவில் தூண்டியது.அதனால் தவ்பா செய்தார் கள்.பாவமன்னிப்பை பெற்று உயர்வு பெற்றார்கள்.ஆனால் நெருப்பின் தன்மை பெருமை,கர்வம்,அவசரமாகும்.எனவே அது இப்லீஸை பெருமை அடிப்பதின் அளவில் கொண்டு போய் சேர்த்தது.அதனால் அவன் அழிவை சந்தித்தான்.
2, சுவனத்தின் மண் கஸ்தூரி என்பது ஹதீஸின் கருத்து.ஆனால் சுவனத்தில் நெருப்பு இருக்கிறது என்றோ நரகில் மண் இருக்கிறது என்றோ ஹதீஸில் இல்லை.
3, நெருப்பை அல்லாஹ் தன் அடியார்களை வேதனைப்படுத்த பயன்படுத்து கிறான்.ஆனால் மண் அப்படியல்ல.
4, மண்ணிற்கு நெருப்பு தேவையில்லை. ஆனால் நெருப்பு உருவாகு வதற்கு இடமும் மண்ணும் தேவை.

பெருமை ஆணவம் கருவம் என்பது இன்றைக்கு மனிதர்களைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய வியாதியாகும்.பணிவு தான் மனிதனை உயர்த்தும் என்பதற்கு நபி ஸல் அவர்களின் மிஃராஜ் பயணம் சிறந்த உதாரணம்.நபியின் பணிவிற்கு கிடைத்த பரிசு தான் மிஃராஜ்.அதனால் அல்லாஹ் அந்த வசனத்தில் தன் அடியாரை”  என்று பதிவு செய்திருக்கிறான்.பெருமை என்பது மனிதனை சீக்கிரம் அழிவில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு இப்லீஸ் தான் உதாரணம்.

ஒரு கதை ஒன்று சொல்வார்கள் ;

ஒரு கடலில் சின்ன அலை ஒன்று வந்தது. அதுக்கு பின்னால பெரிய அலை ஒன்றும் வந்தது.அந்த சின்ன அலை பெரிய அலையைப்பார்த்து பயந்து நடுங்கியது.அய்யோ பெரிய அலை வருகிறதே---- வந்தா நம்மை விழுங்கி விடுமே---- அப்டின்னு புலம்பியது.
சின்ன அலை தன்னைப்பாத்து பயந்து நடுங்குவதைப்பாத்தவுடன் பெரிய அலைக்கு கர்வம் வந்தது ---நாம் தான் பெரிய ஆளுன்னு காலரை தூக்கி விட்டது.

இதைப்பாத்து கடல் சிரித்தது.ஏன் என்னைப்பாத்து சிரிக்கிறாய் என்று பெரிய அலை கேட்டது.அப்ப கடல், பெரிய அலையைப்பாத்து   நீ யார் அப்டின்னு கேட்டது,அதுக்கு நான் தான் அலை பெரிய்ய---அலைன்னு பெரிய அலை சொல்லியது. அதைக் கேட்ட கடல் மீண்டும் சிரித்தது.

எதுக்காக திரும்பத் திரும்ப சிரிக்கிறன்னு பெரிய அலை கேட்டது.அப்ப கடல்,  நானும் தண்ணீர் தான். நீயும் தண்ணீர் தான். சின்ன அலையும் தண்ணீர் தான்.நாம எல்லாருமே ஒரே இனம் தான். ஆனால்  நீயோ நான் தான் பெரியவன்னு காலர தூக்கி விடுற. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன நடக்குன்னு பாரு என்று சொன்னது.                        

ஆனால் அந்த பெரிய அலை என்னை யார் என்ன செய்ய முடியும்  என்று கேட்டு கர்வத்தோட போய் அந்த சின்ன அலையை இரக்கமில்லாமல் விழுங்கியது.

சின்ன அலையை விழுங்கி வேகமா போய் ஒரு பெரிய பாறையில மோதி அந்த பெரிய அலையும் சுக்கு நூரா--- நொருங்கிப் போனது. 

நான் தான் பெரியவன் என்று  பெருமை கொள்வதால் ஏற்படும் விளைவை இந்த கதை நமக்கு சித்தரித்துக் காட்டுகிறது.

இன்றைய உலகில் தனது பணத்தாலும், பதவியாலும், பெற்ற படிப்பாலும், பிறந்த குடும்பத்தாலும் பெருமையடிக்கும் பலரை நாம் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இது பலரையும் பீடித்திருக்கும் ஒரு வியாதி என்றால் மிகையில்லை. ஒரு ஏழை தனது மகனின் திருமணத்துக்கு வற்புறுத்தி கூப்பிட்டாலும் அதற்கு செல்லாத சிலர் ஒரு பணக்காரன் அளிக்கும் ஆடம்பர மார்க்கம் அனுமதிக்காத விருந்துகளுக்கு வலிந்து செல்வதை பார்க்கிறோம். அதே போல் தனக்கு நண்பனாக வருபவன் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் பலரையும் பார்க்கிறோம்.இவை எல்லாம் உலக மக்களின் சாதாரண எதிர்பார்ப்புகளாக உள்ளது. இவை எல்லாம் தவறு என்பதை ஏனோ நன்கு விபரம் அறிந்த பலரும் கூட உணர்வதில்லை.

நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களின் பரிசுத்த வாழ்க்கை வழிமுறைகளை ஆராய்ச்சி செய்யும் உண்மையான முஸ்லிம் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெரிந்து விடுவார் இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும் போது நிச்சயமாக அவர்கள் திகைத்து விடுவார்கள். நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ளமாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும் அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமாக மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார். என அல் குர்ஆன், ஹதீஸ் எச்சரிக்கை விடுக்கிறது.

  وعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: ((ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ، قَالَ أَبُو مُعَاوِيَةَ: وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: شَيْخٌ زَانٍ، وَمَلِكٌ كَذَّابٌ، وَعَائِلٌ مُسْتَكْبِرٌ))16.
மறுமையில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான்.அவர்களைப் பார்க்க மாட்டான்.அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்.அவர் களுக்கு கடும் வேதனையும் உண்டு. 1, விபச்சாரம் செய்யும் முதியவர். 2, பொய் சொல்லும் அரசன். 3, பெருமையடிக்கும் ஏழை. {ஸஹீஹுல் ஜாமிவு ; 3069}

  وعَنْ ثَوْبَانَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: ((مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الْكِبْرِ، وَالْغُلُولِ، وَالدَّيْنِ؛ دَخَلَ الْجَنَّةَ))17.
மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் ஒருவர் மரணித்தால் அவர் சுவனம் நுழைந்து விடுவார்.அதில் ஒன்று பெருமை. {பஸ்ஸார் ; 10 / 95}

வானங்களிலும், பூமியிலும் உள்ள பெருமைகள் (அனைத்தும் அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியது. அவன்தான் (யாவற்றையும்) மிகைத்தவன் நுண்ணறிவு மிக்கவன். (அல்குர்ஆன்: 45:37,

إن اللهَ عزَّ وجلَّ يقولُ : العزُّ إزارِي والكبرياءُ رِدائي فمَن نازعني فيهما عذَّبتُه
கண்ணியம் என் கீழாடை.பெருமை என் மேலாடை.அவ்விரண்டிலும் யார் என்னிடம் போட்டி போடுகிறார்களோ அவரை நான் வேதனைப் படுத்துவேன் என்று அல்லாஹ் கூறுகிறான். {மஜ்மவுஸ் ஸவாயிது ; 1 / 104}

ஏனெனில் பெருமை என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹ்வின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர். மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்

பெருமை என்றால் என்ன என்பதையும் நபி ஸல் அவர்கள் உணர்த்தி விட்டார்கள் ;

  وعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ - رضي الله عنه -: عَنْ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: ((لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ، قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا، وَنَعْلُهُ حَسَنَةً؟ قَالَ: إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ)).
இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். எவனுடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (மக்களை நோக்கி) கூறிய போது, ஒரு மனிதர் யாரசூலுல்லாஹ்! தனது ஆடை மற்றும் காலணிகள் போன்றவை அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். அது பெருமை ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அல்லாஹ் மிகவும் அழகானவன். அழகாக இருப்பதை விரும்பக்கூடியவன். எனவே, இவை பெருமை ஆகாது என்று பதில் கூறிவிட்டு, பெருமை என்றால் என்னவென்று தெரியுமா? “சத்தியத்தை மறுப்பதும்-மற்றவர்களை இழிவாக எண்ணுவதுமே (பெருமை ஆகும்) என்றும் கூறினார்கள். (முஸ்லிம்,திர்மிதி,அபூதாவூத்)

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.ஒரு அரபியை விடை அரபியில்லாதவருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை; அரபியல்லாதவரை விட அரபியருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை. கருப்பரை விட வெள்ளையருக்குச் சிறப்பு இல்லை. வெள்ளையரை விட கருப்பருக்கு எவ்விதச் சிறப்பு இல்லை. அறியாமைக்கால மூட பழக்க வழக்கங்களை என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். (நூல்: முஸ்லிம்)

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்று மார்க்கம் கூறி இருக்கும்போது, குலம், கோத்திரம், சாதி அடிப்படையில் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதுவது பெருமை ஆகும். நான் பணக்காரன், நீ ஏழை, நான் ஸையது வம்சம். நீ லெப்பை, நான் உருது, நீ தமிழ் நான் அறிவாளி நீ முட்டாள் என்றெல்லாம் பிறப்பின் அடிப்படையில் மொழியின் அடிப்படையில் இழிவாகக் கருதுவது பெருமை ஆகும்.

எனவே அழிவைத்தரும் பெருமையை நம்மிடமிருந்து அகற்றி விட்டு உயர்வைப் பெற்றுத்தரும் பணிவை நம்மிடம் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.



2 comments:

  1. படிப்பவரை ஒரு நிமிடம் சிந்திக்கவைக்கும் அழகான அழுத்தமான வாா்த்தைகளை ஆங்காங்கே பிரயோகப்படுத்தியிருக்கிறீா்கள் ஆழமான சிந்தனை பாரகல்லாஹ்

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் பாரகல்லாஹ்

    ReplyDelete