Friday, June 9, 2017

தராவீஹ் 16 ம் நாள்




( أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون
நாங்கள் ஈமான் கொண்டோம் என்று சொல்வதினால் மட்டும் சோதனை செய்யப்படாத நிலையில் விட்டு விடப்படுவார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா? {29 ; 2}


ஈமான் கொண்டு விட்டால் போதும் எங்களுக்கு எந்த சோதனையும் வராது,வரக்கூடாது என்று எண்ணுவது தவறு.மக்களுக்கு அவர்களது ஈமானுக்கு தகுந்தவாறு சோதனைகளும் சிரமங்களும் வருவது இயல்பு என்று இந்த வசனத்தின் வழியே அல்லாஹ் கூறுகிறான்.
{3 ; 142}, {2;214} ஆகிய வசனங்களும் இதே கருத்தைத்தான் தாங்கி நிற்கிறது.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)

وقال مقاتل : نزلت في مهجع مولى عمر بن الخطاب كان أول قتيل من المسلمين يوم بدر ; رماه عامر بن الحضرمي بسهم فقتله فقال النبي صلى الله عليه وسلم يومئذ : سيد الشهداء مهجع وهو أول من يدعى إلى باب الجنة من هذه الأمة فجزع عليه أبواه وامرأته فنزلت :قرطبي
பத்ர் களத்தில் உமர் ரலி அவர்களின் அடிமையான மிஹ்ஜஃ என்ற ஸஹாபி தான் முதன் முதலாக ஷஹீதாக்கப்பட்டார்.நபி ஸல் அவர்கள், அவர் ஷஹீதுகளின் தலைவர். சுவனத்தின் வாசலில் என் உம்மத்தில் அவர் தான் முதலாவதாக அழைக்கப்படுவார் என்று சொன்னார்கள். ஆனால் அவரது மரணம் குறித்து அவரது பெற்றோரும் மனைவியும் அதிர்ச்சியடைந்தார்கள்.ஈமானை ஏற்ற மிஹ்ஜஃ அவர்களுக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே என்று வருத்த மடைந்தார்கள்.அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. {குர்துபி}

இவ்வுலக வாழ்க்கை என்பது சோதனைகளும் சிரமங்களும் நிறைந்தது. அதுவும் ஈமான் கொண்டவர்களுக்கு, அதில் உறுதியாக இருப்பவர்களுக்கு சோதனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

அல்லாஹ் இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்.

அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும்,சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் சோதிக்கின்றான். {2 ; 155

இந்த வசனத்தில் கூட அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவன் கொடுக்கும் சோதனைகளின் விதங்களை நமக்கு உணர்த்துகிறான்

குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்தி லிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான்.சிலருக்கு குழந்தையை தராமல் சோதிக்கிறான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக் கொள்கிறான்.

இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.

சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே

ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களைஅல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறை வேற்றினார்கள்.
فعن عائشة -رضي الله تعالى عنها- قالت: سألتُ رسول الله -صلى الله عليه وسلم- عن الطاعون فأخبرني أنه: ((عذاب يبعثه الله
 على من يشاء، وأن الله جعله رحمة للمؤمنين، ليس من أحدٍ يقعُ الطاعونُ فيمكث في بلده صابراً محتسباً، يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر شهيد))([1])، رواه البخاري.
நான் நபி (ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ்தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு "ஷஹீது" என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

وقوله : ( أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ) استفهام إنكار ، ومعناه : أن الله سبحانه وتعالى
 لا بد أن يبتلي عباده المؤمنين بحسب ما عندهم من الإيمان ، كما جاء في الحديث الصحيح : " أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ، ثم الأمثل فالأمثل ، يبتلى الرجل على حسب دينه ، فإن كان في دينه صلابة زيد في البلاء " . وهذه الآية كقوله : ( أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ) [ آل عمران : 142 ] ، ومثلها في سورة" براءة " وقال في البقرة :( أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ) [ البقرة : 214 ] ; ولهذا قال هاهنا 
மக்களிலேயே அதிகம் சோதனைக்குள்ளாக்கப் பட்டவர்கள் நபிமார்கள். பின்பு ஸாலிஹீன்கள்.ஒருவர் அவரின் மார்க்கத்தின் ஈடுபாட்டின் அளவு அவருக்கு சோதனை வரும்.ஒருவர் மார்க்கத்தில் உறுதியாக இருந்தால் சோதனையும் அதிகமாகும்.

நபி ஸல் அவர்கள் அதிகம் சோதனைகளை சந்தித்தார்கள். எனவே அந்த நபியின் பிரியம் கூட நமக்கு சோதனைகளை ஏற்படுத்தும்.
قال رَجلٌ لِلنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ يا رسولَ اللهِ واللهِ إنِّي لَأُحِبُّك فقال انْظُرْ ماذا تقولُ قال واللهِ إنِّي لَأُحِبُّك فقال انْظُرْ ماذا تَقولُ قال واللهِ إِنِّي لَأُحِبُّك ثلاثَ مَرَّاتٍ فقال إن كُنتَ تُحِبُّنِي فأَعِدَّ لِلْفَقرِ تِجْفافًا فإنَّ الفقرَ أسرعُ إلى مَن يُحِبُّنِي من السَّيلِ إلى مُنْتهَاهُ

الراوي: عبدالله بن مغفل المحدث: الترمذي     - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 2350
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் உங்களை நேசிக்கிறேன் என்றார்.அபோது நபி ஸல் அவர்கள் நீ சொல்வதை யோசித்து சொல் என்றார்கள்.அவர் மறுபடியும் அல்லாஹ்வின் ஆணையாக நான் உங்களை நேசிக்கிறேன் என்றார்.இவ்வாறு மூன்று முறை கூறினார்.அதற்கு நபி ஸல் அவர்கள் நீ என்னை நேசிப்பது உண்மையானால் நீ ஏழ்மைக்கு தயாராகிக் கொள் என்றார்கள். {திர்மிதி}

எனவே சோதனைகள் என்பது யதார்த்தம்.சோதனைகள் இல்லாமல் வாழ முடியாது.சோதனைகளை விட்டும் யாரும் தப்ப முடியாது.

அந்த சோதனையின் போது பொறுமை கொள்ள வேண்டும்.அந்த சோதனையிலும் அல்லாஹ்வை திருப்தி கொள்ள வேண்டும்.அவர் தான் உண்மையான வெற்றியாளர்.அந்த உணர்வு,அந்த தன்மை எல்லாருக்கும் வராது.அந்த பொறுமையும் திருப்தியும் இருக்கிறதா என்பதைத் தான் இறைவன் பார்க்கிறான். உண்மையான ஈமான் சோதனையின் போது தான் வெளிப்படும்.

أحد الحُجَّاج يطوف بالبيت ويقول: " يا رب، هل أنت راضٍ عني ؟ "، كان وراءه الإمام الشافعي، فقال له: " يا
 هذا، هل أنت راضٍ عن الله حتَّى يرضى عنك ؟ " فقال: " يرحمك الله من أنت ؟، قال: " أنا محمدٌ بن إدريس الشافعي "، قال: " كيف أرضى عنه، وأنا أتمنَّى رضاه، ما هذا الكلام ؟ "، قال: " يا هذا، إذا كان سرورك بالنِقمة كسرورك بالنعمة فقد رضيت عن الله “.
ஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது யாஅல்லாஹ் என்னை திருப்தி கொள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.பின்னால் நின்று கொண்டிருந்த இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் நீ முதலில் அல்லாஹ்வை திருப்தி கொண்டால் தான் அல்லாஹ் உன்னை திருபதி கொள்வான் என்றார்கள்.அதற்கு அவர் அல்லாஹ்விடம் திருப்தியைக் கேட்கத்தான் முடியும்.எப்படி அல்லாஹ்வை திருப்தியை கொள்ள முடியும் என்று கேட்டார்.அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள், அல்லாஹ் தரும் நிஃமத்தைக் கொண்டு திருப்தி கொள்வது போன்று அவன் தரும் சோதனைகளைக் கொண்டும் திருப்தி கொள்ள வேண்டும் என்றார்கள்.

الإيمان الحقيقي يظهر في الشدائد:
 ذات مرَّة سُئل الإمام الشافعي: يا إمام، " أندعو الله بالتمكين أم بالابتلاء ؟ فتبسَّم، وقال: لن تُمَكَّنَ قبل أن تُبْتَلَى
ஒரு முறை ஷாஃபிஈ ரஹ் அவர்களிடம் ஒருவர், நான் அல்லாஹ்விடம் உயர்வைக் கேட்கவா சோதனையைக் கேட்கவா என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் சோதனை இல்லாமல் உயர்வு பெற முடியாதே என்றார்கள்.

بينا النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ جالسٌ وعندَه أبو بَكرٍ الصِّدِّيقُ وعليهِ عباءةٌ قد جلَّلَها على صدرِه بِجِلالٍ إذ نزلَ عليهِ جبريلُ عليهِ السَّلامُ فأقرأَه منَ اللَّهِ السَّلامَ وقالَ يا رسولَ اللَّهِ ما لي أرى أبا بَكرٍ عليهِ عباءةٌ قد جلَّلَها على صدرِه بجِلالٍ قال يا جبريلُ أنفقَ مالَه عليَّ قبلَ الفتحِ قال فأقرِئهُ منَ اللَّهِ السَّلامَ وقل لهُ يقولُ لَك ربُّكَ أراضٍ أنتَ عنِّي في فقرِك هذا أم ساخِطٌ فالتفتَ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ إلى أبي بَكرٍ فقال يا أبا بَكرٍ هذا جبريلُ يقرئُك السَّلامَ منَ اللَّهِ ويقولُ أراضٍ أنتَ عنِّي في فقرِك هذا أم ساخطٌ فبَكى أبو بَكرٍ وقالَ أعلى ربِّي أغضبُ أنا عن ربِّي راضٍ أنا عن ربِّي راضٍ

الراوي: عبدالله بن عمر المحدث: أبو نعيم           - المصدر: حلية الأولياء – الصفحة أو الرقم: 7/115                       
பெருமானார் ஸல் அவர்களுடன் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அமர்ந் திருந்தார்கள்.அவர்கள் உடுத்துவதற்கு வேறு ஆடையின்றி மேனியில் ஒரே ஒரு துண்டை மட்டும் போட்டிருந்தார்கள். அந்நேரம் ஜிப்ரயீல் அலை அவர்கள் வருகை தந்து ஏன் உங்கள் நண்பர் அபூபக்கர் மேனியில் வெறும் துண்டை மட்டும் அணிந்திருக்கிறார் என்று கேட்டார்கள்.அவர் தன்னிடம் இருந்த பொருள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விட்டார்கள்.இப்போது அவரிடம் எதுவும் இல்லை என்றார்கள்.அவரிடம் அல்லாஹ்வின் ஸலாமை சொல்லி விடுங்கள்.இந்த நிலையிலும் அபூபக்கர் என்னை திருப்தி கொள்கிறாரா இல்லை அதிருப்தி கொள்கிறாரா என்று அல்லாஹ் கேட்டான் என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் சொன்னார்கள்.அதைக் கேட்டதும் அபூபக்கர் ரலி அவர்கள் அழு கொண்டே நான் என்னைப் படைத்த ரப்பை அதிருப்தி கொள்வேனா ! நான் அவனை இப்போதும் பொருந்திக் கொள்கிறேன் பொருந்திக் கொள்கிறேன் என்றார்கள். {ஹுல்யதுல் அவ்லியா}

எனவே சோதனைகள் வருகின்ற போது மனம் தளர்ந்து விடாமல் அப்போதும் அல்லாஹ்வை திருப்தி கொள்ள வேண்டும். சோதனை களின் போது அதிருப்தி அடைபவன் நஷ்டமடைந்தவன்.

وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)


No comments:

Post a Comment